முன்னாள் அரசதலைவர் சந்திரிகா குமாரதுங்கவை தனது தேர்தல் மேடைகளுக்கு அழைத்து சென்று சிறிலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் உறுப்பினர்களினதும் ஆதரவாளர்களினதும் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு அரசதலைவர் மகிந்த மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் இது தொடர்பாக பேசுவதற்கு மகிந்த விரும்பினால், அதற்கு முன் தான் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சந்திரிகா குமாரதுங்க பெரிய பட்டியல் ஒன்றை முனவைத்திருப்பதாகவும் அரச வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.தனது தேர்தல் திட்டம் தொடர்பான முன்னாள் அரசதலைவர் சந்திரிகா குமாரதுங்கவுடன் சந்தித்து பேசுவதற்கு நேரத்தை ஒதுக்குவதற்காக பிரபல பௌத்தபிக்கு ஒருவரையும் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவையும் அரசதலைவர் மகிந்த அனுப்பியிருந்தார்.
இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்வதற்காக அலவி மௌலானா முன்னாள் அரசதலைவர் சந்திரிகாவை பல தடவைகள் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது அரசதலைவர் மகிந்தவை சந்திப்பதில் தனக்கு பிரச்சினைகள் இல்லையெனத் தெரிவித்துள்ள சந்திரிகா குமாரதுங்க அதற்கு முன்னர் மகிந்தவினால் நிறைவேற்ற வேண்டிய சில விடயங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
ஹொரகொல்லயிலுள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் சரன குணவர்தனவைக் கொண்டு தாக்குதல் நடத்தியமை தொடர்பாக அரசதலைவர் மகிந்த முதலில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் -
ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டுவர அரசதலைவர் முன்வைக்கும் யோசனைகள் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்க போன்ற ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளை மகிந்த பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் சந்திரிகா குமாரதுங்க ஆளுநர் அலவி மௌலானவிடம் வலியுறுத்தி கூறியுள்ளார்.






0 Responses to அரசததலைவர் மகிந்தவுக்கு ஆதரவளிப்பதற்கு சந்திரிகா விதித்துள்ள நிபந்தனைகள்!