Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்காவின் முக்கிய தலைவர்கள் நாட்டில் இல்லாத சமயம் சரத் பொன்சேகாவின் கைது இடம்பெற்றிருக்கிறது. அரசதலைவர் மகிந்த, பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய, எதிர்க்கட்சிகளின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட விஜயங்களை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளார்கள்.

அரசதலைவர் மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்யா சென்றுள்ளார். அவர் இன்று இரவு நாடு திரும்பவுள்ளார். அதேவேளை, எதிர்க்கட்சிகளின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார். அவரும் இன்று இரவு நாடு திரும்பவுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் வெளிநாடு சென்றிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், சிறிலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் அமைப்பு தலைவர் மங்கள சமரவீரவும் வெளிநாடு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மகிந்த, கோத்தபாய, ரணில் நாட்டில் இல்லாத சமயம் பொன்சேகா கைது!

Post a Comment





அதிகமாக வாசிக்கபட்டவை

Recent Post



தொடர்புக்கு: vannionline@gmail.com