சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் சாட்சியளிக்கப் போவதாக நேற்று மாலை செய்தியாளர்களிடம் அறிவித்ததைத் தொடர்ந்தே, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா அவசரமாக கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.சிறிலங்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சரத் பொன்சேகா சண்டே லீடர் பத்திரிகைக்கு தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக சிறிலங்கா அரச தரப்பு தனது மறுப்பினை தெரிவிப்பதற்கு, உயர் மட்டக்குழு ஒன்றினை நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தலைமையகத்துக்கு அனுப்பியுள்ள நிலையில், பொன்சேகா நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "சிறிலங்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பாக எனக்கு தெரிந்தவை, நான் கேள்விப்பட்டவை, எனக்கு தெரியப்படுத்தப்பட்டவை அனைத்தையும் நிச்சயம் வெளியிடவுள்ளேன். போர்க் குற்றங்கள் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.
சரணடைந்த விடுதலைப்புலிகள் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று கூறியதற்காக சிறிலங்கா அரசு தரப்பினால் துரோகி என்று வர்ணிக்கப்படுவது பற்றி பொன்சேகாவிடம் கேட்டபோது - “உண்மையை கூறுபவர்கள் துரோகிகள் அல்லர்” - என்றார்.
அவரது இந்த பேட்டியைத் தொடர்ந்தே அவரை கைது செய்ய ராஜபக்ச அரசு உத்தரவு பிறப்பித்ததாக தெரிய வந்துள்ளது.









0 Responses to பொன்சேகா அவசரமாக கைது செய்யப்பட்டது ஏன்?