Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 06.02.2010 அன்று பேர்கன் தமிழ் இளையோர் அமைப்பும் அன்னை பூபதி கலைக்கூடமும் இணைந்து உயர் கல்விப் பட்டறை ஒன்றை நடாத்தினார்கள்.

அதில் பல பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். உயர்தர வகுப்பு மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், துறைசார் வல்லுனர்கள் இப்பட்டறையில் கலந்து கொண்டு தமது அனுபவங்களையும் கல்வித் தெரிவிற்கான தேவைகளையும் புள்ளிவிபரங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

முதலில் உயர்தர வகுப்பு மாணவர் ஒருவர் எந்தெந்த துறைக்கு என்னென்ன பாடங்கள் மற்றும் என்னென்ன புள்ளிகள் எடுக்கவேண்டும் என்பதை பற்றிய விளக்கம் கொடுத்தார். அதைத் தொடர்த்து medicine, psychologist, teacher, pharmacy, engineer போன்ற துறைகள் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டது.

பின்பு சந்தேகங்களை உயர்தரப்பு மாணவர்களும் பெற்றோர்களும் கேட்டுக்கொண்டனர். இப் பட்டறையானது உயர்தர கல்வி பயிலவிருக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.










நன்றி: சங்கதி

0 Responses to பேர்கனில் உயர்கல்வித் தேர்வுப் பட்டறை (படங்கள் இணைப்பு)

Post a Comment





அதிகமாக வாசிக்கபட்டவை

Recent Post



தொடர்புக்கு: vannionline@gmail.com