Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று வல்வையில் வெளியான அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுடைய நினைவு மலர்.. தகவல் – வல்வை ஒன்றியம் – வல்வெட்டித்துறை.

திருச்சிற்றம்பலம விநாயகர் வணக்கம்

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலாற் கூப்புவர் தம்கை.
தேவாரம்
வாழ்ந்தநாளு மினி வாழுநாளு மிவை யறிதிரேல்
வீழ்ந்தநாளெம் பெருமானையேத்தா விதி யில்லீர்காள்
போழ்ந்ததிங்கட் புரிசடையி னான்றன் புகலுரையே
சூழ்ந்தவுள்ள முடையீர்க ளுங்கள் துயர்தீருமே.

திருவாசகம்
பாசவேரறுக்கும் பழம்பொருள் தன்னைப்
பற்றுமா றடியனேற் கருளிப்
ப10சனை உகந்தென் சிந்தையுட் புகுந்து
ப10ங்குழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தி
செல்வமே சிவபெரு மானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே
அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.

திருப்பல்லாண்டு

பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப்
பாற்கடல் ஈந்த பிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற தில்லைச்
சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.

பெரியபுராணம்

இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின்
வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டே
லுன்னை யென்றும்
மறவாமை வேண்டு மின்னும் வேண்டும்நான்
மகிழ்ந்து பாடி
அறவாநீ யாடும் போதுன் னடியின்
கீழிருக்க வென்றார்.

திருப்புகழ்

ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசு முகமொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்றே
மாறுபடு சூரனை வதைத்த முகமொன்றே
வள்ளியை மணம்புணர வந்த முகமொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருள வேண்டும்
ஆதி அருணாசல மமர்ந்த பெருமாளே.

பட்டினத்தார் பாடல்

ஊருஞ் சதமல்ல வுற்றார் சதமல்ல வுற்றப்பெற்ற
பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே
யாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி யேகம்பனே.

வாழ்த்து

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசுசெய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை யறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

திருச்சிற்றம்பலம்

அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு
அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த கல்வி மான்கள், பிரபுக்கள் ஆகியோர் வரிசையில் வல்வையில் வசித்த ஐயம்பெருமாள் வேலாயுதர் அன்னாரது நான்கு புதல்வர்களான ஞானமூர்த்தி, புண்ணியமூர்த்தி, ஆறுமுகத்தார், திருமேனியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாகும். வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரசுவாமி கோயிலை தாபித்த வெங்கடாசலம்பிள்ளை அவர்கள் மேலே குறிப்பிட்ட திருமேனியார் அவர்களின் சிரேஷ்ட புத்திரராவர். வெங்கடாசலம்பிள்ளை அவர்களின் சிரேஷ்ட புத்திரரான வேலுப்பிள்ளை அவர்களின் ஒரேயொரு ஆண் வாரிசான திருவேங்கடம் அவர்களின் புதல்வரே அமரர் வேலுப்பிள்ளையாகும். தொழில் நிமித்தம் மலேசியாவில் வசித்துவந்த திருவேங்கடம் பர்வதபத்தினி தம்பதிகளுக்கு முதல் வாரிசாக வேலுப்பிள்ளை அவர்கள் 10-01-1924ல் அவதரித்தார்.

மலேஷியாவில் வசித்த அமரரின் தாயார் கடு மையான நோய்வாய்ப்பட இலங்கை திரும்பிவர வேண்டிய சூழ்நிலையேற்பட்டது. நோய்த்தாக்கத்துக்குள்ளான தாயார் அமரத்துவம் அடைய, தந்தையார் மேற்கொண்டிருந்த தொழிலைத் தொடர்ந்து செய்வதற்காக மலேஷியா திரும்பிச் செல்லவேண்டிய சூழ்நிலையேற்பட்டது. தனியொருவனான சிறுவன் வேலுப்பிள்ளை தனது ஆரம்பக்கல்வியை மேற்கொள்வதற்காக வல்வையில் தங்கி தந்தையாரது ஒன்றுவிட்ட சகோதரர்களுடன் சிவன்கோவில் அக்கிரகாரத்தில் தங்கியிருந்து வல்வை சிதம்பரக்கல் லு}ரியில் தனது கல்வியை ஆரம்பித்தார். தனியாளான வேலுப்பிள்ளை அவர்களுக்கு உறவினர்களும் ஆசிரியர் களும் தேவையான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கவே ஆர்வமுடன் கல்விகற்று லண்டன் மற்றிக் குலேசன் பாPட்சைகுத் தோற்றி அதில் சித்தியடைந்தார். அக்காலப் பகுதியில் யாவராலும் விரும்பி மேற்கொள்ளும் எழுதுவினைஞர் செவையின்பால் ஈர்க்கப்பட்டு அத்தொழிலைப் பெற்றுக்கொள்வதில் வெற்றியையும் கண்டார்.

தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள வர்த்தக, கைத்தொழில் திணைக்களத்தில் எழுது வினைஞராக இணைந்து கொண்ட வேலுப்பிள்ளை அவர்கள் தனது இருபத்தியிரண்டாவது வயதில் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும், மலேஷிய நாட்டின் புகையிரதப் பகுதியில் கடமைபார்த்து ஓய்வுபெற்றவருமான வல்லிபுரம் சின்னம்மா தம்பதிகளின் புதல்வியான பாறுவதிப்பிள்ளையை தனது வாழ்க்கைத் துணைவியாகக் கரம்பிடித்தார். இல்லற வாழ்வில் சிரேஷ்ட புதல்வனாக மனோகரனும் அடுத்து பெண்வாரிசுகளாக ஜெகதீஸ்வரி (லலிதா), வினோதினி (சித்திரா), ஆகியோரும் கடைக்குட்டியாக பிரபாகரனும் வல்வை வைத்தீஸ்வரனின் அருளால் கிடைக்கப் பெற்றனர்.

தலைநகர் கொழும்பில் கடமைபார்த்த வேலுப்பிள்ளை அவர்கள், சிலகாலத்தின் பின்னர் மட்டக்களப்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டு திரும்பவும் கொழும்புக்கு வந்து கடமையாற்றிவரும் காலத்தில் வவுனியாக் கச்சேரிக்கு இடமாற்றம்பெற்று காணிப்பகுதியில் கடமையாற்றினார். இறுதியாக மாவட்ட காணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெறும்வரை மன்னார், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் கடமை புரிந்ததுடன் இக்காலப் பகுதிகளில் எம்மவர்களில் பலருக்கு அரச காணிகளைப்பெற்றுக் கொள்வதற்குப் பலவழிகளிலும் உதவி புரிந் துள்ளார். அரசசேவையில் பணியாற்றி வரும் காலங்க ளில், தன்கீழ் உள்ள ஊழியர்களுடன் மகிகவும் கண்டிப் ;பாக இருந்ததுடன், தேவையேற்படும் காலங்களில் அவர் களுக்கு வேண்டிய உதவிகளை வழங்கவும் தவறவில்லை.

சிரேஷ்ட புதல்வன் மனோகரனை வல்வையைச் சேர்ந்த வனஜாதேவி என்பவருக்கு 11.6.1979ல் மணம் முடித்துவைத்து அவர்கள்மூலம் கார்த்திக், மய10ரன் என்னும் இரு பேரக்குழந்தைகளைக் கண்டு மகிழ்ந்தார். புதல்வி ஜெகதீஸ்வரியை தொண்டைமானாறைச் சேர்ந்த
பதிவு செய்யப்பட்ட வைத்திய உத்தியோகத்தரான செல்லையா மதியாபரணம் என்பவருக்கு 24.4.1968ல் மணம் முடித்துவைத்து அவர்கள் மூலம் முகுந்தன், வனிதா, சண்முகன் என்ற மூன்று பேரக்குழந்தைகளையும், பேத்தியான வனிதா செந்தில்குமரன் தம்பதிகள்மூலம் கமலினி, மாதங்கினி ஆகிய ப10ட்டப்பிள்ளைகளையும் கண்டு மகிழ்ந் தார். வல்வையைச் சேர்ந்த பட்டதாரியான பாலசுந்தரம் இராஜேந்திரம் அவர்களுக்கு 2.9.1971ல் தனது அடுத்த புதல்வியான வினோதினியைக் கரம்பிடிக்க வைத்து அவர்கள் மூலம் பிரதீபன், தயாளினி ஆகிய இரண்டு பேரக்குழந்தைகளைக் கண்டார். பேரன் பிரதீபன் ஸ்ரீதேவி தம்ப திகளின் ஆரூரன் என்ற ப10ட்டப்பிள்ளையையும், பேத்தியா ரான தயாளினி மோகன் தம்பதிகள் மூலம் மனோஜ், கவின் என்னும் இரு ப10ட்டப்பிள்ளைகளையும் கண்டு மகிழ்ந்தார். கடைசிமகன் பிரபாகரன் தான்விரும்பிய மதிவதனி என்பவரைக் கரம்பிடித்து சாள்ஸ் அன்ரனி, துவாரகா, பாலச்சந்திரன் என்னும் மூன்று பேரக்குழந்தைகளை தனது தந்தையார் கண்டு இன்;புறச் செய்தார். அரசுக்கு தான் ஆற்றிய கடமை போதும். இனி எமது மூதாதையரின் இஷ்ட தெய்வமான வல்வை வைத்தீஸ்வரனுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டுமென்ற நோக்கோடு வல்வை வந்த அமரர் வேலுப்பிள்ளைக்கு இந்தியா செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படவே துணைவியாருடன் தமிழகம் சென்று தங்கியிருந்தார். அங்கு துணைவியாருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டதைத் தொடர்ந்து தானும் சிறிது நோயின் தாக்கத் திற்குள்ளானார். இந்தநிலையில் சொந்த மண்ணில் வாழ்வதே சாலச்சிறந்தது என்ற நோக்குடன் தாயகம் திரும்பி வன்னியில் தனது நோய்வாய்ப்பட்ட துணைவியாருடன் வாழ்ந்துவந்தார். அவரது வாழ்வில் மீண்டும் ஒரு சோதனை ஏற்படவே வன்னிமண்ணை விட்டு வெளியேறி முட்கம்பி முகாம் என்னும் அகதிமுகாமில் தஞ்சமடையவேண்டியதாயிற்று. இந்த முகாமிலிருந்தும் இருவரும் ஏனைய பொதுமக்களுடன் கலந்து தங்கியிருக்கக்கூடாது என்ற நோக்குடன் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு தனிமையில் வைக்கப்பட்டனர்.

தனிமையில் வைக்கப்பட்டிருந்த அமரருக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கவே உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோரைப் பிரிந்து வல்வை வைத்தீஸ்வரனின் பாதங்களைச் சென்றடைந்தார்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

மறக்க முடியாத வேலுப்பிள்ளையின் நினைவுகள் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவு தமிழ் பேசும் மக்களுக்குப் பாரிய இழப்பாக அமைந்துவிட்டது. அமரர் அவர்கள் எமது குடும்பத்தவருடன் மிகவும் நெருக்கமான முறையில் பழகியதை இன்றும் மறக்க முடியாது. அவருடைய கனிவான இன்சொல், புன்னகை ப10த்த வதனம், இவற்றினு}டாக மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்ற பெரியார். தம் புதல்வனை இம்மண்ணின் மீட்புக்காக
அர்ப்பணித்த பெருந்தகை.

வைத்தீஸ்வரன் ஆலய மகா கும்பாபிஷேக காலத்தில் அவரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு எமக்கு கிடைத் தது. அந்நேரம் “வைத்தீஸ்வரன் எல்லாம் சிறப்பாக நிறை வேற்றுவார். ஒன்றுக்கும் யோசியாமல் நடத்துங்கள்” என்று ஒரே வார்த்தையில் கூறி எம்மை உற்சாகப்படுத்தியதை இன்றும் மறக்க முடியவில்லை.

தமது மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் வெளி நாடுகளில் வசதியுடன் வாழ்ந்தாலும் அமரர் அவர்கள் தனது வாழ்நாட்களை இம்மண்ணில் வாழ்ந்து, மற்றவர்கட்கு முன் மாதிரியாக வாழ்ந்த வாழ்க்கையை மறக்க முடியுமா? அமரர் அவர்களின் திடீர் மறைவு பாரிய வெற்றிடமொன்றை ஏற்
படுத்தி விட்டது எனலாம்.
வேலுப்பிள்ளை அவர்கட்கு எமது ஆத்மார்த்த அஞ்சலியை செலுத்தி அவர் தில்லைக்கூத்தன் திருவடி நிழலில் மறையாதவராக வாழ பிரார்த்தித்து குடும்பத்தவர்கட்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்.

பரமேஸ்வர மனோகர சிவாச்சாரியார்வல்வை
;அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பிரதமகுரு
சோமாஸ்கந்த தண்டபாணிகதேசிகர் அவர்களின்
அஞ்சலிச் செய்தி
தோன்றிற் புகழுடன் தோன்றுக
அஃதிலார் தோன்றலிற் தோன்றாமை நன்று
என்ற தெய்வப் புலவர் திருவாக்கிற்கிணங்க அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை 06-01-2010 அன்று இறைபதம் அடைந்துவிட்டார் என்ற செய்தியினை தொலைக்காட்சிச் செய்தியில் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

அமரர் அவர்களின் வீடு அயலில் இருந்தமையால் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு அதிக மாக கிடைத்தது. எமது வீட்டு பாதையாலேதான் அவர் சிவன் ஆலயம், அம்மன் ஆலயம் செல்வார். நான் எனது வீட்டுத் தலைவாசலில் நின்றால் ஒரு புன்னகை மட்டும் செய்துவிட்டுப் போவார். அம்மன் ஆலயத்திற்கு வந்தால் என்னுடன் அமைதியாக கதைப்பார்கள். அவருடைய குணாதியசங்களாவன நேர்மை, அடக்கம், புன்முறுவல் ப10த்த முகம், மென்மையான உரையாடல் என்பனவாகும்.
இளைப்பாறிய ஒரு அரச உத்தியோகத்தரான அமரர் அவர்கள், மனோகரன், ஜெகதீஸ்வரி, வினோதினி, பிரபாகரன் என்ற நான்கு மக்கட் செல்வங்களின் தந்தையாவார். நான்காவது புத்திரரான பிரபாகரன் தமழீழ விடுதலைப் புலிகளின் தலைவராவார். புதிய வரலாற்றை உருவாக்கிய உலகப் பிரசித்தி பெற்ற விடு தலை வீரன். அத்துடன் தெய்வீக அவதாரமுமாவார்.

இவருடைய இல்லம் இன்று சர்வதேசப் பிரமுகர்கள், தென் இலங்கை மக்கள் பார்வையிடுகின்ற ஒரு அருங்காட்சிச் சாலையாக உள்ளது. மேற்படி வீட்டை பார்வையிட்ட மக்கள் அதற்கு முன்பாக நின்று புகைப்படங்களை எடுத்துச் செல்வதோடு சிறந்த வீரன் வாழ்ந்த இடம் என்று தெரிவித்துவிட்டு வீட்டு மண்ணில் சிறிதளவை எடுத்துச் செல்கின்றார்கள்.

வல்வை சிவன் ஆலய ஆதீனகர்த்தாக்களில் ஒருவர் ஆவார் அமரர் அவர்கள். அரச பதவி வகித்தபோது அவரை ஜீப் வாகனத்தில் மிகவும் மரியாதையாக ஏற்றி வருவதை நான் பலமுறை கண்டிருக்கி றேன். அப்படியான ஒரு பெரிய மனிதரை அவரது இறுதிக் காலத்தில் சிறையில் வைத்தமை கவலையளிக்கும் விடயமாகும். எனினும் அவர் செய்த ப10ர்வ புண்ணியத்தின் பேறாக அவரது பிறந்த மண்ணில் இறுதி யாத்திரை நடைபெற்றது அனைத்து மக்களுக்கும் ஆறுதலாகும். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த இவரது மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு இவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சர்வலோக நாயகியாகிய அம்பாளை இறைஞ்சி வேண்டிப் பிரார்த்
தித்து அமைகிறேன்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

சிவஸ்ரீ சோமாஸ்கந்த தண்டபாணிக தேசிகர்(சிவாச்சார்ய பீடாதிபதி, அகில உலக சைவக்குருமார் சம்மேளனம்,
பிரதமகுரு, வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்)

திருவேங்கடம் வேலுப்பிள்ளை
நான் ஐயாவுடன் பழகியதோ கொஞ்சக்காலம்தான். ஆனால், அவரைப்பற்றி நெஞ்சார அறிந்ததோ ஏராளம். தாரளமாக எழுத என் பேனா அடைக்கிறது – மனவேதனை தான் காரணம். 1980களில் அவரின் வீடு உடைந்த நேரத்தில் மந்திகை வைத்தியசாலையில் நான் மாவட்ட வைத்திய அதிகாரியாக இருந்தேன். வந்தார் ஐயா, காவல்துறையினரதும் மற்றவர்களினதும் தொந்தரவுகள் கூடிய காலம் அது. ஐயாவை ஒரு சிறு தனிப்படுக்கை அறையில் படுக்க
வைத்தேன். “இருதய நோயாளி -தொந்தரவு செய்ய வேண்டாம்” என்ற ஒரு பெயர்ப்பலகையையும் போட்டேன். நிம்மதியாக கொஞ்ச நாட்கள் இருந்தார்கள். பின் எங்கோ சென்றுவிட்டார்கள். எத்தனை விதமான சோதனைகளையும் வேதனைகளையும் சுமந்த மனுஷன். நினைத்துப் பார்க் கவே இதயம் வேதனைப்படுகின்றது. படபடக்கிறது. ஒரு நல்ல ஆத்மா, சாதனை உருவம் – உடலமைப்பு, தாராள மனம்.
மன்னாரில் 1980க்கு முதல் நான் அங்கு மாவட்ட வைத்திய அதிகாரியாக இருந்தேன். அவர் னு.டு.ழு ஆக இருந்தார். அந்த இடத்தில் சாராயம் குடிக்காத ஒரேமனிதர் வேலுப்பிள்ளை ஐயா தான். நான் தங்கும் விடுதிக்கு அடிக்கடி வருவார் – குளிப்பதற்காக, மன்னாரில் அவ்வள
வான தண்ணீhப் பஞ்சம். னு.டு.ழு ஆக இருந்த காலத்தில் எத்தனையோ பேருக்கு வன்னியில் தலா ஐந்து ஏக்கர்நிலம் தாராளமாக கொடுத்த காணி வள்ளல். காலம் மாறினாலும் அவரின் குணம் மாறியது கிடையாது. நேர்மையான மனிதர். அதிகம் பேசமாட்டார். பேசியதை செயலில் காட்டும் அதீத திறமைசாலி. வாழ்க்கையில் யாரையுமே ஏமாற்றியது கிடையாது. மனதிலே எதையுமே தீங்காக நினைக்காத செல்லக்கிளி. மிகவம் இளகிய மனசு. ஆனால் ஒன்று, அவரை இன்னொருவர் ஏமாற்ற முடியாது ஏன்?? – அவர் பேசுவதெல்லாம் உண்மை, உண்மை.

“உண்மை என்றுமே ஏமாறாது
ஏற்றம் என்பது இறைவன் வழங்கும் பரிசு
இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை”
ஐயா அவர்கள் எத்தனை ஏற்றங்களை, இறக்கங் களை கண்டும் சலிக்காமல் இறைவனிடமே முறையிடுவார்.

“ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டொன்றாகும்
அன்றி அது வரினும் வந்தெய்தும் – ஒன்றை
நினையாது முன் வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்” -முதியோர் சொன்னது.
“ கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக்
காஞ்சிரங்காய் ஈந்தேன்
முற்பலத்தில் செய்த வினை”
உன் வாழ்க்கை ப10ச்சியத்தில் ஆரம்பமாகிறது. அதற்கு முன்பக்கம் இலக்கம் விழுந்தால் இறைவனின் பரிசு. பின்பக்கம் விழுந்தால் அவனது சோதனை.

ஐயா! உங்கள் பிரிவால் போலும் உங்கள் வீட்டை யும், உங்களின் பார்வதிப்பிள்ளையையும் பார்ப்பதற்காக நு}ற்றுக் கணக்கில் தென்னிலங்கை மக்கள் வருகிறார்கள். அத்துடன் உங்கள் வீட்டு மண்ணும் கொஞ்சம் கொஞ்சமாக தென்னிலங்கைக்கு ஏற்றுமதியாகிறது – மாவீரன் மண் அருகிக் கொண்டே போகிறது.

இறைவன் ஐயாவை எத்தனை தடவைகள் சோதித்துவிட்டான்
மனம் தளராத மனுஷன் ஐயா நீர்!
தடம் புரளாக கோச்சு வண்டி ஐயா நீர்!
சலசலப்பில்லாத ஆழ் கிணற்று தண்ணீர் ஐயா நீர்!
உலகம் என்றும் மறக்காது போற்றுகின்ற
செந்தமிழ் தலைவனை ஈந்த எம் ஊர்ப் பெருமகனே!

ஐயா! நீங்கள் சரித்திர நதியின் அணைக்கட்டு!
அனுபவக் கல்லு}ரியின் பேராசான்!
அறிவெனும் நந்தா விளக்கின் சுவாலை!
உங்கள் பிரிவு சரித்திரத்தின் மகத்தான மணிமண்டம்
எங்கிருந்தாலும் நீர் சிரஞ்சீவியே!
எங்கும் சாந்தி நிலைக்கட்டும்……

அன்புடன்,
க. மயிலேறும்பெருமாள்.

பெருவீரனின் தந்தை என்பதை நிலைநிறுத்திய தீரர்
வேலுப்பிள்ளையின் மீது ஆணையிடுவோம்
- பழ நெடுமாறன் -

உலகத் தமிழினத்திற்கு வீரமிக்க தலைவனைப் பெற்றுத்தந்த அய்யா வேலுப்பிள்ளை அவர்கள் சிங்கள் வதைமுகாமில் மரணமடைந்த செய்தி தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் வேதனை அலைகளைப் பரப்பியுள்ளது. 86 வயது முதிர்ந்த அவரையும் பிரபாகரனின் தாயார் பார் வதி அம்மையாh அவர்களையும் கடந்த 8 மாதங்களாக வதை முகா மில் அடைத்து வைத்து விசாரணை என்ற பெயரில் அவர்களுக்கு மன அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதோடு அவர்களுக்குத் தேவையான மருத்துவவசதி, பக்குவமான உணவுகள் எதுவும் அளிக்கப்படவில்லை.

கடந்த 8 மாதத்தில் அவர்களைச் சந்திக்க யாரையுமே அனு மதிக்கவில்லை. தமிழக முதல்வர் கருணாநிதி அனுப்பிவைத்த நாடா ளுமன்ற குழுவினர்களாவது அவர்களைச் சந்திக்க முயற்சி செய்தி ருக்க வேண்டும். இராசபக்சேவைச் சந்தித்த போதாவது அவர்களை விடுதலை செய்யும்படி வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் இக்கு ழுவினர் அவ்வாறு செய்யவேண்டிய கடமைகளிலிருந்து தவறிவிட்டார்கள்.

வெளிநாடுகளில் வாழும் பிரபாகரனின் சகோதரியும் பிரபாகர னின் அண்ணன் மனோகரனும் தங்கள் பெற்றோரை தங்களிடம் அனுப்பி வைக்கும்படி விடுத்த வேண்டுகோளையும் அரசு மதிக்கவில்லை. தனது சாவிலும் தானொரு வீரனின் தந்தை என்பதை அய்யா வேலுப்பிள்ளை நிரூபித்திருக்கிறார். அரசிடம் முறையிட்டு விடுதலை பெறவிரும்பாமல் இறுதிவரை முகாமிலேயே வாழ்ந்து அந்தக் கொடுமைகளை அனுபவித்து கொஞ்சம்கூடக் கலங்காமல் இருந்து மறைந்திருக்கிறார்.

வல்வெட்டித்துறையில் புகழ்பெற்ற குடும்பமான திருமேனியார் குடும்பத்தில் பிறந்தவர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஆவார். இக் குடும்பத்தின் மூதாதையரான திருமேனியார் வேங்கடாசலம் என்பவர் அவ்வ10ரில் உள்ள வல்வை முத்துமாயம்மன் கோவில், வல்வை வைத் தீஸ்வரன் கோயில், நெடியகாடு பிள்ளையார் கோவில் ஆகிய மூன்று முக்கிய கோயில்களை கட்டினார். திருவேங்கடம் வேலுப்பிள்ளை, திருமதி வல்லிபுரம் பார்வதி அம்மையார் ஆகியோருக்குப் பிறந்த கடைக்குட்டிப் புதல்வரே பிரபாகரன் ஆவார். இவருக்கு மனோகரன் என்ற மூத்த சகோதரரும், ஜெகதீஸ்வரி, வினோதினி இரு மூத்த சகோதரிகளும் உண்டு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை தனது 19ம் வயதில் இலங்கை அரசுப்பணியில் சேர்ந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று மாவட்டக் காணி அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். அரசுப் பணியில் இவர் இருந்த காலத்தில் ஏராளமான தமிழ் மக்களை அரச நிலங்களில் குடி யேற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். நேர்மையுடன் பணியாற்றி புகழ்பெற்றார். ஏழை எளிய மக்களின் துயர்துடைக்கும் பணியில் ஈடுபட்டு அனைவரின் பாராட்டுதலுக்கும் உரியவராகத் திகழ்ந்தார். தந்தையிடமிருந்த இந்த நற்பண்புகள் பிரபாகரனிடமும் எதிரொலித்தன. தமிழர்களுக்காகப் போராடும் மனஉறுதியை பிரபாகரன் தனது தந்தையிடமிருந்தே பெற்றார் என்றுதான் கூறவேண்டும். பெற்றோரின் செல்லப்பிள்ளையாகத் திகழ்ந்த பிரபாகரன்மீது அவரது தந்தைக்கு மிகவும் அன்பு. எங்கு சென்றாலும் தனது செல்ல மகனையும் அழைத்துக்கொண்டு போவார்.

1956ம் ஆண்டு பண்டாரநாயகா பிரதமராக இருந்தபோது சிங் கள மொழியை அரச மொழியாக ஆக்கும் சட்டத்தை இயற்றினார். அந்த சட்டத்தை மிகக்கடுமையாக விமர்சித்து வேலுப்பிள்ளை பேசியதை சிறுவனான பிரபாகரன் கேட்டு கோபமும் கொதிப்பும் அடைவது வழக்கம். அந்தவயதில் தந்தை மூட்டிய தீ பிரபாகரனின் மனதில் புரட்சித் தீயாக மூண்டு வளர்ந்தது. அனுராதபுரத்தில் வேலுப்பிள்ளை பணியாற்றிய காலத்தில் இவர்கள் வீட்டிற்கு அருகில்தான் எல்லாளனின் சமாதி இருந்தது. அந்த சமாதியில் தினசரி விளக்கேற்றி பார்வதி அம்மையார் வழிபடுவது வழக்கம். அப்போதுதான் பிரபாகரன் அவர் வயிற்றில் கருவாக உதித்தார் என வேலுப்பிள்ளை பிற்காலத்தில் கூறியிருக்கிறார்.

பிரபாகரனின் புரட்சிகர நடவடிக்கைகளை அவரது தந்தை விரும்பவில்லை என்பது போன்ற பொய்யான கட்டுக்கதைகளை சிலர் திட்டமிட்டுப் பரப்பமுயன்று வருகின்றனர். உண்மை அதுவல்ல. பிரபா கரனின் தந்தை இயற்கையிலேயே பற்றற்ற உள்ளம் படைத்தவர். தனது பிள்ளைகள் அவரவர்களின் எதிர்காலத்தை அவர்கள் விருப்பப்படிதான் அமைத்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகளைப் பெற்று வளர்த்துப் படிக்கவைத்து ஆளாக்குவதோடு பெற்றோரின் கடமை முடிந்துவிடுகிறது என்று நினைக்கக்கூடியவர். எனவே பிரபாகரனை அவரின் போக்கிலேயே விட்டுவிடுவது என்றுதான் அவர் முடிவுசெய்தார். மிக இளவயதில் அதாவது 17ம் வயதில் பிரபாகரன் தனது படிப்பை நிறுத்திவிட்டு விடுதலைப் போராட்டத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதை அவர் தவறாக நினைக்கவில்லை. ஆனால் படிப்பை முடித்துவிட்டுச் சென்றிருக்கலாமே என்றுதான் கருதினார். பிரபாகரனின் புரட்சிகர நடவடிக்கைகளின் விளைவாக அமைதி நிலவிய அவர் குடும்பத்தில் புயல் வீசத் தொடங்கிற்று. காவல்துறையின் தொந்தவுகள் அதிகமான போதிலும் எல்லாவற்றையும் அந்தக் குடும்பம் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டது. பதவியிலிருந்து ஓய்வுபெற்று 80களின் நடுவில் அவர் தமிழகத்;திற்கு வந்து தங்கியபோது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் தன் மனையியுடன் திருச்சியில் குடியிருந்தார். திருச்சி செல்லும் போதெல்லாம் அவர்களைச் சந்திப்பது எனது வழக்கம். அப்போது பிரபாகரன் சென்னையில்தான் இருந்தார். ஆனாலும் மகனுடன் தங்கவேண்டும் என்று அவரோ அல்லது பெற்றோரைத் தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரபாகரனோ நினைக்கவில்லை. அவர்கள் அவ்வப்போது சந்திப்பார்கள். அவ்வளவுதான். ஒருமுறை சென்னையில் பிரபாகரனை நான் சந்தித்தபோது “அண்ணா ஒரு உதவி செய்யவேண்டும்” என்று கூறினார். வழக்கத்திற்கு மாறான அந்த பீடிகையைக் கண்டு திகைத்தேன். “என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்லுங்கள் செய்கிறேன். எதற்காக இந்தப் பீடிகையெல்லாம் போடுகிறீர்கள்” என்று நான் கூறினேன்.
அவர் புன்னகையுடன் ”தமிழீழத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் வரைபடங்கள் உள்ளன. அவற்றைத் திருத்தி இன்றிருக்கும் நிலையில் ஆக்கித் தரவேண்டும்” என்று கூறினார்.

வரைபடத்தை திருத்துவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்பது புரியாமல் நான் திகைத்தபோது, அவர் தொடர்ந்தார். “இதை முற்றிலுமாக சரியாகச் செய்யக்கூடியவர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் நீங்கள்தான் பேசி அதைச் செய்யவைக்க வேண்டும்” என பிரபாகரன் கூறியபோது அருகிலிருந்த பேபி சுப்பிரமணியமும் மற்றவர்களும் சிரித்தனர். எனது திகைப்பு மேலும் அதிகமாயிற்று. பேபி குறுக்கிட்டு “அண்ணா! தலைவரின் தந்தைதான் இதை சரியாகச் செய்யக்கூடியவர். அவரிடம் நீங்கள் பேசி இதை எப்படியாவது முடிக்கவேண்டும்” என்று கூறினார்.

தனது தந்தையிடமிருந்து இந்த உதவியைப்பெற பிரபாகரன் தயங்குவதைப் பார்த்து நான் மனதிற்குள் நகைத்துக்கொண்டேன். பிறகு திருச்சியில் உள்ள அய்யா வேலுப்பிள்ளையுடன் தொடர்புகொண்டபோது பளிச்சென்று “மகன் கூறினாரா?” என்று கேட்டார். ஆம் என்று நான் சொன்னபோது அடுத்தவாரம் சென்னை வருவேன். வந்து செய்து தருகிறேன் என்று சொன்னார். அதைப்போல சென்னைவந்து ஒருவாரம் எனது வீட்டிலேயே தங்கியிருந்து அந்த வரைபடங்களை எல்லாம் திருத்திக் கொடுத்தார்.

1988ஆம் ஆண்டு பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று நு}லை நான் எழுதியபோது அய்யா வேலுப்பிள்ளை அதை முழுவதுமாகப் படித்துத் திருத்தங்கள் செய்துதந்தார். பிரபாகரனின் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்டமுதல் நு}ல் அதுவாகும். பிற்காலத்தில் அதிலிருந்துதான் பலர் குறிப்புக்களை எடுத்து பிரபாகரனைப் பற்றிய நு}ல்களை எழுதினார்கள்.

1989ஆம் ஆண்டில் சூலை மாதம் 23ஆம் தேதி திருச்சியில் அய்யா வேலுப்பிள்ளை தம்பதியரைச் சந்தித்தேன். சந்தித்துவிட்டு நான் திரும்பியபோது பிரபாகரன் கொல்லப்பட்டதாக ஒரு பரபரப்புச் செய்தி வெளியானது. உடனடியாக புலிகளின் தலைமை அலுவலகத்திற்குத் தொடர்புகொண்டு அச்செய்தியில் உண்மையில்லை என்பதை அறிந்தேன். அய்யா வேலுப்பிள்ளையும் அம்மாவும் இச்செய்திகேட்டு மனங்கலங்கிவிடக்கூடாது என்பதற்காக திரும்பவும் அவசர அவசரமாக அவர்களின் வீட்டுக்குச் சென்றேன். ஆனால் வழக்கம்போல அவர்கள் எவ்விதப் பரபரப்பும் இல்லாமல் இருந்தார்கள். பொய்ச்செய்தியை நம்பவேண்டாம் என்று நான் கூறியபோது அய்யா வேலுப்பிள்ளை சிரித்தார். மனைவியைக் காட்டி “இவர் தான் கொஞ்சம் கலங்கிப்போனார். ஆனால் நான் அவருக்கு தைரியம் கூறினேன்” என்று சொன்னார். அந்தளவுக்கு தனது மகன்மீது அவருக்கு அளவுகடந்த நம்பிக்கையிருந்தது.

அதற்குப்பிறகு பலமுறை இருவரும் மதுரையில் உள்ள எங்கள் வீட்டிற்கும், பாபனாசத்தில் உள்ள எங்கள் வீட்டிற்கும் பலமுறை வந்து தங்கியிருக்கிறார்கள். எங்கள் குடும்பத்திலேயே அவர்களும் அங்கமாகிவிட்டார்கள் என்று சொல்லவேண்டும். அந்தளவுக்கு எங்கள் குடும்பத்தில் நடைபெற்ற சுகதுக்க நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் அவர்கள் உரிமையோடு கலந்துகொண்டார்கள். சிலவேளைகளில் மகன் மனோகரன் மகள் வினோதினி ஆகியோரின் குடும்பங்களையும் அழைத்து வந்திருக் கிறார்கள். அந்த நாட்கள் இனியவை. என்றும் மறக்க முடியாது.

1990ஆம் ஆண்டு பிப்ரவரியில் பிரபாகரனின் அழைப்பையேற்று தமிழீழம் சென்றேன். விரிவான சுற்றுப்பயணம் செய்துவிட்டு மார்ச்மாதம் நடுவில் தமிழகம் திரும்பினேன். உடனடியாகத் திருச்சியில் தம்பியின் பெற்றோரைச் சந்தித்து தம்பி கூறிய செய்திகளைத் தெரிவித்தேன். இந்திய அமைதிப்படை வெளியேற்றப்பட்டு தமிழீழப் பகுதி முழுவதிலும் புலிகளின் ஆட்சி நடப்பதையும் அங்குள்ள மற்ற நிலைமைகளையும் அவர்களுக்கு எடுத்துக்கூறினேன். அவர்களின் பேரக்குழந்தைகளான சாள்ஸ், துவாரகா ஆகியோரின் படங்களை எடுத்துக் கொடுத்தபோது வயதுமுதிர்ந்த அந்த இருவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. முதன்முதலாக தங்கள் பேரக் குழந்தைகளின் படங்களை பார்த்தபோது அவர்களின் விழிகளில் நீர் துளிர்த்தது.

2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பார்வதி அம்மையாரைப் பக்கவாதம் தாக்கிற்று. அதன் விளைவாக அவர் கை, கால்கள் செயலற்றுப்போயின. அந்தச் சூழ்நிலையில் அவர்களை ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. முசிறியில் உள்ள டாக்டர் இராசேந்திரன் தாமாகவே முன்வந்து அவரது வீட்டில் வைத்து மருத்துவமும் பார்த்து அவர்களை நன்கு பராமரித்தார். அம்மையாரின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக தேறியது. சில வாரங்களுக்கு ஒருமுறை முசிறி சென்று அவர்களைப் பார்த்து நலம் விசாரித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். பிறகு அவர்கள் தாயகம் திரும்பிச் செல்வதென முடிவெடுத்தபோது நான் வெளியில் இல்லை. பொடாக் கைதியாக சிறையில் இருந்தேன். அதற்குப் பின்னர் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவேயில்லை.

2005ஆம் ஆண்டில் வழக்கறிஞர் சந்திரசேகரன் தமிழீழம் சென்று பிரபாகரன் அவர்களையும் அவரின் பெற்றோரையும் சந்தித்துப் பேசிவிட்டு திரும்பினார். அவர்கள் நலமாக இருப்பதாக அவர் கூறிய செய்தி எனக்கு நிம்மதியை அளித்தது. பின்னர் அந்த போர்ச்சூழலில் அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் கவலையடைந்தேன். தனது பெற்றோரைப் போன்ற ஏராளமான வயதானவர்கள் போர்ச்சூழலில் சொல்லொன்னாத துன்பங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும்போது தனது பெற்றோரை மட்டும் பாதுகாப்பாக வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்க பிரபாகரன் விரும்பவில்லை. அவர்களும் அவ்வாறு பத்திரமாக வெளியேற விரும்பவில்லை. தங்களுடைய புதல்வன் தலைமையில் நடைபெறும் விடுதலைப் போரட்டத்தின் போது அருகேயே இருப்பதுதான் தாங்கள் செய்யும் உதவியென அவர்கள் உறுதியோடு இருந்தார்கள். கடந்த எட்டுமாதங்களாக முகாமில் அவதிப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களைப் போலவே இவர்களும் அவதிக்குள்ளானார்கள். தாங்கமுடியாத கொடுமைகளையெல்லாம் தாங்கிக்கொண்டார்கள். தங்கள் தலைவனின் பெற்றோர்கள் படும் துயரைப் பார்த்த மக்கள் மனம் கலங்கினார்கள். ஆனாலும் அவர்கள் இருவரும் தங்களுடனேயே இருந்து அந்தத் துயரங்களைப் பகிர்ந்து கொண்டதைப் பார்த்து அந்த மக்கள் நெக்குருகி னார்கள்.

திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் பெருவீரனின் தந்தை மட்டுமல்ல, எக்காரணத்தைக் கொண்டும் அரசிடம் மன்றாடி முறையிட்டு விடுதலை பெறவேண்டும் என்று ஒருபோதும் எண்ணாத திண்ணிய நெஞ்சுரம் கொண்ட அவரும் ஒரு மாவீரரே! இறுதிவரை துன்பச் சூழலிலேயே வாழ்ந்து வீர மரணத்தைத் தழுவிக்கொண்டார்.

அப்பா……..
- செந்தமிழன் சீமான் -


ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த எம்
இனத்தை விடுவிக்க வந்த பகலவன்!
எம்மினத்தின் சூரியன்! உலகத் தமிழர்களால் தங்கள்
உயிருக்கு மேலாக நேசிக்கப்படுகின்ற
தமிழ்த் தேசிய இனத்தின் ஒப்பற்ற தலைவன்
அன்னைத்தமிழ் ஆயிரமாண்டுகளாய்த் தவமிருந்து பெற்ற
வீரப்பிள்ளை – எங்கள் அண்ணன் மேதகு பிரபாகரனை
எமக்குத் தந்த மாதந்தை…… வேலுப்பிள்ளை.
அப்பா…. உலகின் இனிமையான உறவு,
சூரியனின் கதிர்கள் யாருடைய அனுமதியும் இல்லாமல்
அன்றாட விடியலுக்கு
இப்புவியை அழைப்பது போல,
இந்த மூன்றெழுத்து வார்த்தை நம்முள் எப்பொழுதும் திறந்துவிடும் இன விடுதலையின் ஞாபகக் கதவுகளை…..
நம் உணர்வுகளின் அனுமதியின்றி….
இன விடுதலையின் வித்தான அப்படிப்பட்ட அப்பா
இன்று நம்மிடையே இல்லை!
கடைசிவரை உயிருக்கு உயிரான தம் மக்களோடு மக்களாய்
முள்வேலி முகாம் என்ற திறந்த வெளிச் சிறையில்
உணவு, உடை போன்ற அடிப்படை உயிராதாரங்கள்
மறுக்கப்பட்டு கடைசிவரை வீரவாழ்வு வாழ்ந்து, இப்போது
மாவீரராய் வீரமரணம் அடைந்துள்ளார்.
போர்க்களத்திற்கு எதிரிகளுடன் போரிடத் தன் மகனை
நெஞ்சுரத்தோடு புறநானு}ற்றில் நம் தமிழர்கள்
அனுப்பி வைப்பர்.
அத்தகைய பெருமைமிகு பண்பாட்டிற்கு
நாம் சொந்தக்காரர்கள்…
நாம் வரலாற்றில் படித்தறிந்த அந்தப் பெருமைமிகு
புறநானு}ற்று வீரத்தை நம் கண்முன் நிகழ்த்திக்காட்டியவர்
நம் தந்தை அவர்கள். ஆம் அதுபோலவே
தன் மகனுடன் போராட்டக் களத்தில் தானும் நின்று,
எதிரிதந்த மரணத்தை எதிர்கொண்டு, அதன் பின்பு
கொடுஞ்சிறையைச் சந்தித்து, அந்தச் சிறையிலேயே தன்
வாழ்வை முடித்து புறநானு}ற்று வீரத்தின் இலக்கணமாக
திகழ்ந்தவர் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள்!
அவர் மட்டுமல்ல அவரைப் பின்பற்றி பல்லாயிரம்
தமிழர்கள் தம் மக்களைப் போர்க்களத்திற்கு அனுப்பியதற்கு முன்மாதியாகத் திகழ்ந்தவர் நம் தந்தை அவர்கள்…

புறநானு}ற்று வீரத்தை நம் கண்முன்னே நிகழ்த்திக்காட்டிய
அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் முன்னோர்கள் ஆற்றிய சமய, சமுதாயப் பணிகள்யாழ்ப்பாணம் வசாவிளான் க. வேலுப்பிள்ளை அவர்கள் தான் எழுதிய “யாழ்ப்பாண வைபவ கௌமுதி” என்னும் நு}லில் அக்காலத்தில் வாழ்ந்த கல்விமான்கள், பிரபுக்கள் ஆகியோர் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அந்தவரிசையில் அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மூதாதையர்களில் ஒருவரான ஐயம்பெருமாள் வேலாயுதர் பற்றியும் அவரின் சந்ததியினர் பற்றியும் குறிப்பிட்டிருந்ததோடு அவர்கள் தாபித்த ஆலயங்கள், மடங்கள் என்பன பற்றியும் குறிப்பிட்டிருந்தார். திரு.ஐயம் பெருமாள் வேலாயுதர் அவர்கள் 1807ம் வருடம் 261ஃ4 பரப்புக்கொண்ட “வேவிற்புலம்” என்னும் காணியை வேவிற்பிள்ளையார் கோயிலைக் கட்ட வழங்கியதோடு கோயிலுக்கருகாமையில் ஒரு மடத்தையும் தாபித்தார்.

வேலாயுதரின் நான்கு புதல்வர்களில் ஒருவரான ஞானமூர்த்தி என்பவர் வர்த்தகராக இருந்துள்ளார். இவ ரது புதல்வரான சங்கரப்பிள்ளை என்பவர் ஏழு கப்பல் களுக்கு அதிபதியாக இருந்து கடல் வணிகம் செய்ததுடன் அந்நாளைய காலனித்துவ அரசுக்கு ஒப்பந்தகார
ராகவும் இருந்துள்ளார். வேலாயுதரின் இன்னொரு புதல் வரான திருமேனியார் முத்துமாரி அம்மன் கோயில் தர்மகர்த்தாவாக இருந்து சிவபதமடைய, அக்கோயிலின் தர்மகர்த்தாவாகப் பொறுப்பேற்றார். சங்கரப்பிள்ளை அவர்களின் ப10ட்டனான ஞானமூர்த்தி அவர்களே தமிழ்
அரசியல் தலைவர்கள் யாவரையும் ஒன்றுபடுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்குவதற்கு முன்னின்று உழைத்த முக்கியஸ்தர்களில் ஒருவராவர். வேலாயுதர் அவர்களின் இன்னொரு புதல்வரான புண்ணியமூர்த்தி என்பவரே வல்வை அருள்மிகு முத்து

நம் தந்தை மிகப்பெரிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர். இவர் வரலாற்றை உருவாக்கியவர் மட்டுமல்ல.
வரலாற்றின் பக்கங்களில் ஏற்கனவே இடம் பிடித்தவர்.
வல்வெட்டித்துறையில் இராமநாதபுரம் ஜமீன் பரம்பரையினர் வழித்தோன்றல்கள் எனக் கருதப்படும்
எசமான் பரம்பரையில் வழிவந்தவராவார்.
உலகம் போற்றும் பெருவீரனின் தந்தை என்ற எவ்விதச் செருக்கும் இல்லாமல் மக்களோடு இறுதி வரை போர்க்களத்தில் இருந்தார். உண்மை, நேர்மை, ஒழுக்கத்தை உயிராகக் கொண்டு தன் மக்களையும் மண்ணையும் நேசித்ததனால் தான் அவரின் பின் மக்கள் அணிதிரண்டனர். இது குறித்து தலைவர் என்னிடம் கூறுகையில் இந்த பண்பினை எனக்கு கற்றுக் கொடுத்தது என் தந்தை அவர்கள் என்று கூறினார். பார்புகழும் நம் தலைவனைத்தந்த தந்தை அவர்கள் இன்று நம்மிடையே இல்லை…!
நம் தந்தையைப் போல் எத்தனையோ உறவுகளை இழந்திருக்கின்றோம்.
என்றும் உறுதியுடன் – செந்தமிழன் சீமான் மாரி அம்மன் கோயிலை 1795ம் வருடம் தாபித்தவர். வல்வெட்டிப் பகுதியில் பிரமுகராக விளங்கிய குமாரசாமி முதலியார் என்பவர் புண்ணியமூர்த்தி என்னும் புண்ணிய மணியகாரன் மகள் சிவகாமிப்பிள்ளையைத் திருமணம்
செய்தவர். இக் குமாரசாமி முதலியார் வல்வெட்டியில் ஒரு தர்மப் பாடசாலையைத் தாபித்து நடாத்தி வந்ததுடன், அமெரிக்க மிஷனரிமார்களின் வருகையுடன் அப்பாடசாலையை அவர்களிடம் கையளித்துமுள்ளார். இத்துடன் நின்றுவிடாது ஊரிக்காட்டில் உள்ள தமக்குச் சொந்த மான நிலத்தை அமெரிக்க மிஷனரிமாருக்கு கையளித் துள்ளார். “பாதிரி பங்களா” என அழைக்கப்படும் இக்காணியில் அமைந்துள்ள கட்டடம் வல்வையில் அம்மை நோய் பீடிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் நோய் தடுப்பு முகாமாக (ஞரயசயவெiநெ) இருந்ததோடு, தற்காலம் இராணுவமுகாமாகவும் இருக்கின்றது. ஆனல்ட் சதாசிவம்பிள்ளை என்பவர் தான் எழுதிய “பாவலர் சரித்திரதீபகம்” என்னும் நு}லில் அன்னாரை வேளாளர் மரபில் பிறந்தவர் எனவும்
வித்துவான் சி.கணேசையர் அவர்கள் தனது “ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்” என்னும் நு}லில் உயர் வேளாண் மரபினர் என்றும், 1934ல் வெளிவந்த வித்தகம் என்னும் மாதாந்த சஞ்சிகை உயர்ந்த வேளாண் மரபில் பிறந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குமாரசாமி முதலியாரும்
அவரது சந்ததியினரும் பிறப்பால் இந்து சமயத்தவராக இருந்தும் அந்நாளில் பாதிரி பங்களாவுக்கு ஓய்வுபெறுவ தற்கு வந்திருந்த அமெரிக்க மிஷனரிமார்களின் போதகர்களில் ஒருவரான வைமன் ஐயர் என்பவர்மேல் கொண்டுள்ள பற்றின் காரணமாக இவரது புதல்வன் கதிரவேற்பிள்ளை தனக்கு “வைமன் கதிரவேற்பிள்ளை” என்ற பெயரையும் சூட்டிக்கொண்டார். யாழ்ப்பாண வைபவ கௌமுதி, கதிரவேற்பிள்ளை அவர்களை உயர் ப10ர்வீக குடும்பத்தில் ஒக்கலார் பரம்பரையில் (ஒக்கலார் என்பதன் அர்த்தம் தெரியவில்லை. நிகண்டுகளிலோ, மதுரைத்
தமிழ் பேரகராதி போன்றவற்றிலோ இல்லை) உதித்தவர் என்றும் குறிப்பிடுகிறது. ஊர்காவற்றுறைப் பகுதியில் நீதவானாகக் கடமையாற்றிய கதிரவேற்பிள்ளை அவர்கள்
தமிழ்ச் சொல்லகராதி பாகம் ஐ இனை எழுதி 1904ல் வெளியிட்டுள்ளார். இதர பாகங்களை வெளியிடு முன்னரே 1904ல் இறைவனடி சேர்ந்தார். கதிரவேற்பிள்ளை அவர்களின் புதல்வரான பாலசிங்கம் என்பவர் நீதிபதியாக இருந்ததுடன், சட்ட நிரூபண சபையில் தமிழர் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். குமாரசாமி முதலியாரின் தாயாரினது தந்தையாரான சந்திரசேகர முதலியார் என்
பவரே தீருவிலில் அமைந்துள்ள வயலு}ர் முருகன் கோயிலைக் கட்டியவராவார்.
வேலாயுதரின் இன்னொரு புதல்வரான ஆறுமுகத் தார் என்பவர் வல்வெட்டித்துறையில் உள்ள சுவாமிகள் தீர்த்தமாடிவிட்டு தங்கியிருக்கும் ஊறணி மடம், மடாலயம், கேணி என்பவற்றைத் தாபித்தவராவர்.

வேலாயுதரின் அடுத்த புதல்வரான திருமேனியாரின் வழித்தோன்றலே அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையாகும். திருமேனியார் அவர்கள் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலுக்குத் தர்மகர்த்தாவாக இருந்து அதனை வேறுசில பெரியவர்களிடம் ஒப்படைத்து
விட்டு முத்துமாரி அம்மன் கோயிலுக்கு தர்மகர்த்தாவகப் பொறுப்பேற்றார்.

மேலே குறிப்பிட்ட திருமேனியார் என்பவரின் புத்திரரில் ஒருவரான வெங்கடாசலம்பிள்ளை அவர்களே வல்வையில் இராசிந்தான் கலட்டி என்னும் இடத்தில் வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி தேவஸ்தானத்தை 1883ல் தாபித்தவர். திருகோணமலைக்குச் சமீபமாக ஆங்கிலேயருக்குச் சொந்தமான டீசபை யுடடியவெiஉ முiபெ என்னும் ளமநவஉh ரகக் கப்பல் பயணம் செய்து கொண்
டிருந்த போது கடலுள் மூழ்கிவிட்டது. ஆங்கிலேயரால் அக்கப்பலை மீட்டெடுக்க முடியாது போகவே, மூழ்கிய நிலையிலேயே வெங்கடாசலம்பிள்ளை அவர்கள் அதனை விலைகொடுத்து வாங்கி மீட்டெடுத்து, வேண்டிய திருத்தங்கள் செய்து மற்றைய கப்பல்களுடன் சேர்த்து கடல் வணிகத்தில் ஈடுபட்டு பொருளீட்டி மேற்படி கோவிலைக் கட்டினார். இவரிடம் 12க்கு மேற்பட்ட கப்பல்கள் இருந்துள்ளதாயும், அவற்றுள் ஒருகப்பல் தனியாக சிவன் கோவிலுக்குத் தேவையான பொருட்களை ஏற்றி இறக்குவதிலும், இன்னொரு கப்பல் இப்பகுதியிலுள்ள வசதியற்ற வர்களுக்கான பொருட்களைக் கொண்டுவருவதிலும் ஈடுபட்டிருந்தது. பெரியதம்பியார், பெரியவர் என்னும் நாமங் களால் அழைக்கப்பட்ட அன்னார் இவ்வ10ரிலுள்ள கோவில்களுக்குக் கிடைக்கப்பெறும் மகமைகளைப் பொறுப்பேற்று செலவுகளை மேற்கொண்டு கணக்குகள் தயாரிப்பதற்குப் பொறுப்பாக இருந்ததுடன், முத்துமாரி அம்மன் கோவிலுக்கும் தர்மகர்த்தாவாக இருந்துள்ளார். இவ்வ10ரிலுள்ள சேதமடைந்திருந்த வைகுண்டப் பிள்ளையார், புட்டணிப் பிள்ளையார் ஆகிய இரு ஆலயங்களின் திருப்பணிகளை மேற்கொண்டவர். முல்லைத்தீவின் கடற் கரை யோரமாக அமைந்துள்ள வற்றாப்பளை அம்மன் கோவிலுக்கு எம்மவர்கள் செல்லும் சமயம் இளைப்பாறு வதற்காக அமைக்கப்பட்ட மடாலயமும் இவர் பொறுப்பி லேயே ஆக்கப்பட்டதாகும். முத்துமாரி அம்மன் கோவிலுக்கு தென்புறமாக ஒரு மடத்தையும், திருக்குளத்தை
யும் அமைத்தவர். நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளை யார் கோவிலைத் திருத்திக் கட்டும் திருப்பணிகளை மேற்கொண்டதோடு இப்பகுதியில் 16 கிணறுகளையும் அமைத்துக் கொடுத்தவர். அக் காலப்பகுதியில் தென்பகுதியில் வாழ்ந்த “வருசஹன்னடிகே ஹரமாணிஸ் சொய்ஷா” (றுயசரளய ர்யnயெனபைந ர்யசயஅயnளை ளுழலணய) என்பவரது செல்வத்துக்கு ஈடான செல்வத்தைக் கொண்டிருந்தவர் என அமரர் “தராகி” அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

திருமேனியாரின் இன்னொரு புதல்வரான குழந் தைவேற்பிள்ளையவர்கள் சிவன் கோவிலைத் தாபிப்பதற்கு தமது பொருட்களைக் கொடுத்துதவியதோடு 1859ம் வருடம் கொழும்பிலுள்ள யாழ்ப்பாணத்தார் கதிர்வேலாயுத சுவாமி கோயிலையும் பர்மா தேசத்தில் ஒரு முருகன் கோயிலையும் அமைத்துள்ளார்.

திருமேனியாரின் இன்னொரு புதல்வரான தம்பிப்பிள்ளை என்பவரின் பேரனான தம்பிப்பிள்ளை என்பவரே எம்மூரில் கட்டப்பட்ட அன்னப10ரணி என்னும் பாய்மரக் கப்பலை அமெரிக்கரான வில்லியம் ரொபின்சன் என்பவர் விலை கொடுத்து வாங்க, அதனை அமெரிக்கா வரை
ஓட்டிச்சென்று ஒப்படைத்த தண்டயலாகும்.
வெங்கடாசலபிள்ளையவர்களின் சிரேஷ்ட புத்திரரான வேலுப்பிள்ளை என்பவரின் புதல்வர் திருவேங்கடம் அவர்களின் ஒரே ஆண்மகனே அமரர் வேலுப்பிள்ளையாகும். திருவேங்கடம் அவர்கள் அக்காலத்தில் சிங்கப்ப10ர் சென்று தொழில் பார்த்த காரணத்தால் “சிங்கப்ப10ரார்”
என்றே அழைக்கப்பட்டார்.
வெங்கடாசலபிள்ளையவர்களின் இன்னொரு புதல்வரான திருமேனிப்பிள்ளை என்பவர் சிவன் கோவில் தர்மகர்த்தாவாக இருந்துள்ளார். இன்னொரு புதல்வரான அருணாசலம் என்பவரின் சந்ததியினரே ஒருவர் பின் ஒருவராக சிவன் கோயிலைப் பரிபாலித்து வருகின்றார்கள். மேலே குறிப்பிட்டுள்ள ஐயம்பெருமாள் (வேலாயுதர்) என்பவரின் தந்தை வேலர் என்பவரது சகோதரர் காத்தார் என்பவராகும். தீருவில் பகுதியில் வயலின் நடுவே அமைந்துள்ள கிணறு மேலே குறிப்பிடப்பட்டுள்ள காத்தார் என்பரால் வெட்டப்பட்டதால், காத்தார் கிணறு என்றே
தற்போதும் அழைக்கப்படுகிறது. இக்காத்தார் என்பவரின் பேரனான நாகர் என்பவரே நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயிலுக்கு உற்சவ மூர்த்தி ஒன்றினைச் செய்துகொடுத்து சதுர்த்தி உற்சவத்தை ஆரம்பித்து வைத்தவர்.

நாகர் என்பவரின் புதல்வரான தாமர் என்பவரின் புதல்வன் செல்லையா என்பவர் முத்துமாரி அம்மன் கோயில், நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில், புட்டணிப் பிள்ளையார் கோயில், வைகுண்டப்பிள்ளையார் கோயில் ஆகிய நான்கு கோயில்களுக்கும் ஒரே நேரத்தில் 1884ம் வருடம் தர்மகர்த்தாவாக இருந்தவர். செல்லையாவின் சகோதரனான கதிர்காமர் என்ப வரே நெடியகாடு திருச்சிற் றம்பலப் பிள்ளையார் கோயிலைப் பெரிதாக அமைத்து பத்து நாட்கள் உற்சவத்தை ஆரம்பித்து வைத்தவர். கதிர்காமர் என்பவரின் புதல்வரான கந்தக்குட்டியார் என்பவ ரின் புதல்வர்களின் ஒருவரான வேலுப்பிள்ளை என்பவர் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் தர்மகர்த்தாவாக இருந்து விலகிக்கொள்ள இன்னொரு புதல்வரான கதிரிப் பிள்ளை என்பவரின் புதல்வர்களான நடராசா, அருளம்பலம் ஆகியோர் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் தர்ம
கர்த்தாவாக இருந்துள்ளார்கள்.
இத்துணை புகழ்ப10த்த பெருமைமிக்க சந்ததியில் உதித்த அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்க ளின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல வல்வை வைத்தீஸ்வரனை இறைஞ்சி நிற்கின்றோம்.

-
உத்தரகோசமங்கையில் அருளிய
திருப்பொன்னு}சல்

அருட்சுத்தி
ஒப்புமை பற்றி வந்த
ஆறடித்தரவு கொச்சகக் கலிப்பா
திருச்சிற்றம்பலம்
சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாரா யணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்
கூராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள் தா ளிணைப்பாடிப்
போரார்வேற் கண்மடவீர் பொன்னு}சல் ஆடாமோ.

மூன் றங் கிலங்கு நயனத்தன் மூவாத
வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேன்தங்கித் தித்தித் தமுது}றித் தான்தெளிந்தங்(கு)
ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங் கனநடையீர் பொன்னு}சல் ஆடாமோ.

முன்ஈறும் ஆதியும் இல்லான் முனிவர்குழாம்
பல்நு}று கோடி இமையோர்கள் தாம்நிற்பத்
தன்நீ றெனக்கருளித் தன்கருணை வெள்ளத்து
மன்று}ற மன்னுமணி யுத்தர கோசமங்கை
மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
பொன்னேறு ப10ண்முலையீர் பொன்னு}சல் ஆடாமோ.
நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை
அஞ்சொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் து}ய புகழ்பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னு}சல் ஆடாமோ.

ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
ப10ணார் வனமுலையீர் பொன்னு}சல் ஆடாமோ.

மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு ப10ண்முலையீர் பொன்னு}சல் ஆடாமோ.

உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடும்அணி மயில்போல்
என்னத்தன் என்னையும்ஆட் கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த ப10ண்முலையீர் பொன்னு}சல் ஆடாமோ.

கோல வரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை
மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
ப10லித் தகங்குழைந்து பொன்னு}சல் ஆடாமோ.

தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு ப10ண்முலையீர் பொன்னு}சல் ஆடாமோ.

திருச்சிற்றம்பலம்

அபரக்கிரியை
இறந்தவருக்கு கிரியை செய்வதன் அர்த்தமென்ன?
இறந்ததன் மேலும் அவருக்கு வாழ்வுண்டு என்பதே அர்த்தமாகும். இறந்த பின்பு அவருக்கு எங்கே வாழ்வு? எப்படி வாழ்வு?
அவருக்கு சுவர்க்கத்திலும், நரகத்திலும் வாழ்வுண்டு. திரும்பவும் அவர் ப10மியிற் பிறந்து முன் வாழ்ந்தது போல வாழும் வாழ்வுண்டு. சுவர்க்க வாழ்வு இன்பானுபவம். நரகவாழ்வு துன்பானுபவம். திரும்ப வரும் ப10மிவாழ்வு இன்ப துன்பக் கலப்பான அனுபவம்.இறந்த பின்பு அவர் இங்கில்லை, அந்நிலையில் அவருக்குச் செய்வதை அவர் பெறுவதெப்படி?
இறந்த பின்பும் குறைந்தது முப்பத்தொரு நாள்வரை அவர், அதாவது அந்தியேட்டிவரை அவர் இங்கேதான் இருக்கிறார். அதாவது தான் விட்ட உடலின் தொடர்பு நீங்காமல் அருவ உருவமாய் இருந்துகொண்டிருக்கின்றார். அந்நிலையில் உடலைத் தொடர்பபடுத்திச் செய்யுங் கிரியை
களின் பலனை அவர் நேரடியாகவே பெறுகிறார். அந்தி யேட்டியின் பிறகு நிகழும் கிரியைகளின் பலனை மேலுல கத்திலுள்ள பிதிரர்கள் என்ற தேவசாதியார் ஏற்று அவர்கள் எங்கிருந்தாலும் அங்கங்கு சேரச் செய்கிறார்கள். இக்கிரியைகளை அபரக்கிரியைகள் என்பதேன்?
அவை இறந்த பின் செய்யப்படும் கிரியைகள் என்பதனால் தான். அபரம் என்றால் பின்.
அபரக் கிரியைகள் எவையெவை?
பிரேதக் கிரியை, சாம்பலள்ளுதல், அந்தியேட்டி, மாசிகம், ஆட்டைத்திதி, திவசம் என்பனவாம்.
அபரக் கிரியைகள் உடலுக்காகவோ, உயிருக்காகவோ?
உயிருக்காகவேதான். ஆனால் அந்தியேட்டிவரை உடல் தொடர்பில் வைத்தும் பிறகு தனியாகவும் உயிரைக் கருதிச் செய்யப்படும். இக் கிரியைகளினால் உயிருக்கு நன்மை விளைவது
எங்ஙனம்?

இக்கிரியைகளால் உயிருக்கு இரு விதத்தில் நன்மை விளையும். தனது சாPரத்தை விட்டுக் கிளம்பிய உயிர் அதன் மேல் பெறவேண்டிய அநுபவங்களுக்கு உபகரிப்பது ஒன்று. படிப்படியாக அவ்வுயிர் சிவத்தன்மை பெறுவது ஒன்று. சிவத்தன்மை பெறுவதென்பது எங்ஙனம்?

அபரக்கிரியைகளைச் செய்வதனால் உயிரின் பாவங் கள் படிப்படியாக அழிக்கப்படுகின்றன. அதற்குத்தக்க அளவு உயிரைப் பற்றியுள்ள மலபந்தம் விலகிக் கொடுக்கும். மலம்
விலகுமளவுக்குச் சிவத்தன்மை சிறிது சிறிதாகப் பற்றும் காலஅடைவில் சரியான பக்குவம் வாய்க்கும்போது முழு மையாக அது சிவத்தன்மை பெற்றுவிடும். நினைவஞ்சலிகளில் அவர் சிவபதம் அடைந்தார் என்றுதானே எல்லாரையும் குறிக்கிறார்கள். அப்படியானால் கிரியைக்கு என்ன அவசியம்?

அப்படிக் குறிப்பது ஒவ்வொருவரும் சிவபதமடைய வேண்டும் என்ற நல்ல விருப்பத்தினால். உரைப்பது உபசாரம் என்ற அளவில் வைத்துக்கொண்டு உரிய கிரியைகளை முறைப்படி செய்ய வேண்டும். பிரேதக் கிரியையில் கும்பப10சை, அக்கினி காரியங்கள் எல்லாம்
செய்வதேன்?

அவையெல்லாம் முன் சொல்லியவாறு இறந்தவரைச் சிவமாக்கும் முயற்சிகள் தான். கும்பங்களில் உருத்திரனை யும் திக்குப் பாலகர்களையும் எழுந்தருள வைத்துப் ப10சிக்கப்
படுகின்றது. அக்கினியிலும் சிவனை எழுந்தருள வைத்துப் ப10சிக்கப்படுகின்றது. கும்பங்களைப் ப10சிப்பதனால் அவற்றி லுள்ள நீருக்குச் சிவத்தன்மை உண்டாகும். அந்நீரினால் இறந்த உடலுக்கு நீராட்டுதலால் நீரிலுள்ள சிவத்தன்மை உடலிற் செறியும். அக்கினி சிவமாகப் ப10சிக்கப்பட்டதால் அதில் ஏற்பட்ட சிவத்தன்மையை அந்த அக்கினியினால் உடலை எரிக்கும்போது அதன் சிவத்தன்மை மேலும் அதிகரிக்க உதவும். உடலை விட்டுப் பிரிந்தாலும் ஒருவகையில் அதன் தொடர்பு நீங்காதிருக்கும். உயிருக்கும் அச் சிவத்தன்மை பதியும். உடலை விட்டுப் பிரிந்தபின்னும் உயிர் உடல் தொடர்பு
நீங்காதிருக்கிறது என்பதை விளக்க முடியவில்லையே! அதை எப்படி நம்பமுடியும்.

அப்படி அது தொடர்பு நீங்காதிருப்பதை நாங்கள் காட்சியாற் காணமுடியாது. காணும் பக்குவம் சாதாரணமான எங்களுக்கில்லை. பக்குவமுள்ளவர்கள் கண்டு சொல்லியுள் ளார்கள். அவர்கள் சொல்வதை நாம் அநுமானித்து நம்புவ தற்குரிய ஏதுக்கள் நடைமுறையில் இருக்கின்றன. இறந்தவர் உயிர் விடும்போது கிடந்த இடத்தில் அன்றுதொடக்கம் இளநீர், அல்லது தண்ணீர்ச்செம்பு வைப்பதுண்டு. “எட்டு”
என்ற வைபவத்திலன்று அவர் விரும்பி அருந்திவந்த சகல உணவுப் பண்டங்களும் படைப்பதுண்டு. அங்கே பாடல் படிப் புகள் முடிந்தபின், படைத்தவற்றிற் சிறிது எடுத்து முகட்டை நோக்கிக் காட்டுவதுண்டு. இவையெல்லாம் இறந்தவர் தனது உடம்பு எரிந்த பின்னுங்கூட உடல் இருந்த சூழலில்
இருக்கிறார் என்பதை அறிவிக்கும் ஏதுக்களாகும். அங்ஙனமாயின், அவர் சுவர்க்க நரகம் போவாரென்று அல்லவோ முதலிற் சொல்லப்பட்டது. இப்போது இங்கேதான் இருக்கிறார் என்பது அதற்கு மாறுபாடாயிருக்கிறதே?

அதற்கு இது மாறுபடாது எங்ஙனமெனில் இப்போது சொல்லப்படுகிற இந்தத் தொடர்பு முற்றாக நீங்கப்பட்டதன் மேல்தான் அவர் சுவர்க்க நரகங்களிற் செல்வர். அந்தி யேட்டியில் தான் அத்தொடர்பு முற்றாக நீக்கப்படும். அந்தியேட்டியில் அது நீக்கப்படும் என்பது எப்படி?

அந்தியேட்டிக் கிரியையை அவதானிப்பதால் அது புலனாகும். அந்தியேட்டிக் கிரியைக்கு அமைக்கும் மாக் கோடிட்ட மண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் ஐந்துநிற மாக்கள் சதுர வடிவமாகப் பரப்பப்பட்டிருக்குமே! அதில் ஒவ்வொரு நிறமும் பஞ்சப10தங்களில் ஒவ்வொன்றைக் குறிக்கும்
பஞ்ச ப10தங்களால் அமைந்தது. அவர் உடம்பில் தொடர் புற்றிருந்தார் என்ற உண்மையின் அடிப்படையில் மா வடிவான சதுரங்களில் பஞ்சப10தங்களைப் பொருத்தி அவ்வப் ப10தங்களுக்குரிய தெய்வங்களைப் ப10சித்து அவற்றின் கரு ணையால் அவருக்கு அப் ப10தங்களோடு இருந்த தொடர்
புகளை நீக்கி விடுவது அக்கிரியையின் விளக்கமாகும்.
அந்தியேட்டியிலும் தர்ப்பையில் ஆளுருவம் செய்து குளிப் பாட்டி பொற்சுண்ணமிடித்துச் சுடுகிறார்களே அது ஏன்?
அதுவும் அந்தியேட்டிவரை உயிருக்கு உடல் தொடர்பு இருக்கிறதென்பதற்கான மற்றொரு அறிகுறிதான். சிலருக்கு மட்டும் பிரேதக் கிரியையோடே அந்தியேட்டியும் செய்கிறார்கள். அது ஏன்?
அதையும் அறியத்தான் வேண்டும். சாதாரணமாக நம்மவரைப் போலல்லாது சிலர் விசேஷமான தீஷை, ஆசாரம், ஒழுக்கம், சாதனை, சிவப10சை ஒழுங்கு உள்ளவர்களா யிருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு விசேட பக்குவம் இருக்கிறது. அந்த வாய்ப்பினால் அவர்கள் இறந்த உடனேயே அப்படி நிகழ்கிறது. அஃதிருக்க பிரேதக் கிரியையிலும் அந்தியேட்டியிலும் பொற்சுண்ணம் இடிக்கிறார்களே. அது எதற்காக?
அதுவும் அவர் உடல் தொடர்புள்ளவராயிருத்தலிற் சம்பந்தப்படும். அவருடைய தநு, கரணம், புவனம், போகம் எல்லாவற்றையும் இடித்து நொறுக்கி இல்லாமற் செய்தல் என்ற கருத்தில்தான் செய்யப்படுகிறது. பொற்சுண்ணமிடிக்கையில் திருவாசகத்தில் இருக்கும் திருப் பொற்சுண்ணப் பதிகமும் படிக்கிறார்களே. அது ஏன்?

பொற்சுண்ணம் இடித்தலினால் இறந்தவருடைய தேகத் தொடர்பு நீக்கப்பட அவர் சிவலோகஞ் சேரத் தகுதி யாகிறார். அப்படி அவர் சிவலோகஞ் சேரும் பட்சத்தில் அவருக்கு அங்கு வரவேற்பு நிகழும். அந்நிகழ்ச்சியைப் பிரதிபலிக்கும் ஓசைப்பொலிவும் பொருள் விளக்கமும் திருப்பொற்சுண்ணப் பதிகப் பாடல்களில் உண்டு. அதனாலேயே பொற்சுண்ணமிடிக்கும் நிகழ்ச்சியோடு இதுவும் தொடர்புபட்
டிருக்கிறது. உண்மையில் சிவலோகஞ் சேருந்தகுதியுள்ள வர் விஷயத்தில் அது உண்மையாய் முடியும். மற்றவர் விஷயத்தில் உபசாரமாகும். என்றாலும் பரவாயில்லை. ஏனெனில் இவர்களுக்கும் எப்பவோவெனினும், தமக்குரியகாலத்திற் சிவலோகமடைய வேண்டியவர்களே அது நியாயமான உண்மை. நியாயமான உண்மையை உபசாரமாகக் கையாளுவதிற் பழுதில்லை. அது திருத்தத்துக்குச் சிறந்த
வழி என்பது சைவ விளக்க நிலை.
அந்தியேட்டி முடிவில் வீட்டுக்கிரியை செய்வதேன்?

அந்தியேட்டி முடிவில் இறந்தவரது வீட்டில், நக்ன தானம் ஏகோ திட்டம், தசுதானம் சபிண்டீகரணம் முதலிய பல கிரியைகள் நிகழும். இவையெல்லாம் பொதுவில் வீட்டுக் கிரியைகள் எனப்படும். அந்தியேட்டியில் தேகத்தொடர்பு நீங்கப்பெற்றவர் தனக்குரிய சுவர்க்க, நரக கதிகளிற் செல் வார். அவ்வாறு செல்லும் அவர் பாதை தனிமையானது. இருளானத விக்கினங்களோடு கூடியது. ஆதலால் அவ்வித கஷ்டங்களில் இருந்து அவருக்கு விமோசனமளிக்கும் நோக் கில் வீட்டுக்கிரியைகள் நிகழ்கின்றன. கிரியைகளில் குடை, செருப்பு, விளக்கு, செம்பு, தண்ணீர் முதலிய எல்லாம் கொடுப்பது அவ்வசதிகள் வேண்டியிருக்கும் பாதையில் அவை அவருக்கு உதவட்டும் என்பதனால்தான்.
வீட்டுக்கிரியை அழைப்பிதழில் சிலர் சபிண்டீகரணக் கிரியை என்று மட்டும் குறிக்கிறார்களே. அது ஏன்?

அது வேறொரு விஷேசத்தினாலுமல்ல, வீட்டுக் கிரி யையின் பகுதிகள் என மேற்சொன்னவற்றிற் சபிண்டீகரணம் பிரதானமானது என்பதனால்தான். எங்ஙனமெனில் இறந்தவர் மேற்குறித்த கஷ்ட வழியெல்லாந் தாண்டிப்போய் தன் சுவர்க்க நரகப் பேறுகளைப் பெறுவதற்கு, முன்சொன்ன பிதிரர்களின் சகாயம் வேண்டும். அதற்காக அவர் பிதிரர்களோடு சேர்க்கப்பட வேண்டும். பிதிரர்களுக்கு அறிகுறியாக, மாவுடன் எள், அரிசி, தேன், சர்க்கரை, தயிர், குழைத்து ருட்டிய பிண்டங்களையிட்டு வைத்து அவற்றுக்கெதிர் இறந்த வர்களுக்கு அறிகுறியாக ஒரு பிண்டமிட்டு கிரியை செய்பவர் எல்லோரையும் ஒருசேரப் ப10சித்து எல்லோருக்கும் நைவேத் தியம் கதலி பல தாம்ப10லம் எல்லாம் சமர்ப்பித்து து}ப தீபாராதனை செய்து முடிவில் இறந்தவரைக் குறிக்கும் பிண்டத்தை மற்றப் பிண்டங்களோடு ஒன்றுசேர்த்தல் காரணமாக இது சபிண்டீகரணம் எனப் பெயர் பெற்றது.
அவ்வாறு பிண்டத்தாற் குறிக்கப்படும் பிதிரர் என்பார் யார்?

அவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் உள்ள தொடர்பு யாது?
பிதிரர் என்பார் படைப்புக் காலத்தில் சிவனால் படைக்கப்பட்ட ஒரு தேவசாதியர் இறந்தவர் நலன்களைக் கவ னிக்கும் அலுவலர்களாகச் சிவனால் நியமிக்கப்பட்டவர்கள் அவர்கள். இறந்தவர் ஒரு ஆணானால் அவரது பிதாமகர் (பேரன்) பிரபி தாமகர் (ப10ட்டன்) என்றதற்குப் பொருந்தும் நிலைகளில் அவர்கள் இருப்பர். இறந்தவர் பெண்ணானால் அவரின் மாதா, மாதாமஹீ பேர்த்தி பிராமாராமஹீ ப10ட்டி என்ற முறைக்குப் பொருந்தும் நிலைகளில் இருப்பார்கள். அதாவது இறந்தவர் பேரில் அவரது தகப்பன், தாய், பேரன், பேர்த்தி, ப10ட்டன், ப10ட்டி என்போர்க்கிருக்கும் கரிசனைக்குச் சமானமான கரிசனை உள்ளவர்களாக அவர்கள் இருப்பார்கள். இறந்தவர் பேரில் அவர்களைக் குறித்துச் செய்யப்படும் எள்ளும், தண்ணீரு மிறைத்தற் (திலத்தர்ப்பணம்) கிரியையால் அவர்கள் திருப் தியுற்று இவரைக் குறித்துச் செய்யும் தான தருமங்களை அவர்கள் ஏற்று அவற்றின் மூலம் அவருக்கு நன்மை விளை விப்பார்கள், அதேவேளை கிரியை செய்பவர்மேல் அவர் தந்தை, தாய் முதலியோர் சொரியும் அன்பையும் ஆசியையும் இவர்கள் பெறவும் வகை செய்வார்கள். அதனால் தான் பிதிர்க்கடன் பிரதான கடன் எனப்படுகிறது, இப்படியான பரிவர்த்தனைகள் (கொடுக்கல் வாங்கல்கள்) உண்மையென நம்பலாமா? இவற்றுக்கான தொடர்பு சாதனங்கள் எங்கே?

ஏன் நம்பக்கூடாது? சந்திர மண்டலத்துக்கு ஏதும் அனுப்பினாற் போய்ச்சேரும் என்று இப்போ சில வருடங்களுக்கு முன் யாவரும் நம்பியதில்லை. இப்போ நம்புகிறார்கள். உண்மையில் ப10மிக்கும் சந்திரனுக்குமிடையில் மெயில் வண்டியோ தந்திக் கம்பியோ ஒரு சாhதனமுமில்லை. ஆனால் அனுப்பும் பொருள் போய்ச்சேர விஞ்ஞானத்தில் தொடர்புசாதனம் இருக்கின்றது. இச்சாதனத்தை மனிதன் இப்போதுதான் கண்டறிந்தான் என்பதேயன்றி இதற்குமுன் அதற்கு வழியிருந்ததில்லை என்பதற்கில்லை. அந்த அமைப்பை ஏற்படுத்தி வைத்த சிவன்மேற் குறித்த பிதிரர்களுக்கும் ப10மியி லுள்ளோர்க்கும் இடையில் அப்படியொரு தொடர்புக்கான சாதனங்களை அமைத்து வைத்திருக்க மாட்டார் என்பதற்கு ஆதாரமில்லை. ஆனால் கடவுள் சம்பந்தப்பட்ட தொடர்பு சாதனங்கள் அருவமாயிருந்தே தொழில் செய்யும். மனிதன் சம்பந்தப்பட்டவைதான் உருவமாயிருக்க வேண்டிய நிர்ப்பந்த முண்டு எனில் சந்திரமண்டலத் தொடர்பு சாதனமும் போலப் பிதிர் மண்டலத் தொடர்பு சாதனமும் ஒரு காலத்தில் வரலாமே எனில் ஆகாது. காரணம் என்னவெனில் நமது சூழலாகிய பஞ்சப10தப் பிராந்தியத்துக்குட்பட்ட அளவில்தான் உருவமைப்பு வாய்க்கும். அதற்கு அப்பாலான பிதிர்லோகம் முதலியவற்றிற்கு அது வாய்க்காது. தத்துவ இயல்புப்படி அது என்றும் அருவமாயிருக்கும். ஆனால் நம்பலாம்.

இப்பரிவர்த்தனையில் புரோகிதராய் இருப்பவரின் பங்கு யாது?

கிரியை செய்பவருக்கும் இறந்தவருக்கும் தொடர்ப10ட் டதிகாரி போலப் பிதிரர் இருப்பது போல கிரியை செய்பவ ருக்கும் பிதிரர்க்கும் இடையில் தொடர்ப10ட்டதிகாரி போல இருப்பவர் புரோகிதர். புரோகிதரானவர் நல்லறிவொழுக்கம் அக்கினி காரியம், சிவப10சை நெறிகளும் உடையவராய் இருந்தால் அவரிடத்தில் பிதிரர்கள் திருப்தியடைவார்கள் அத் தொடர்பில் இவர் ஏற்கும் தானம் முதலியவற்றிற் பல பிதிரர்களையும் அதற்குபகாரமாக இவர் தானங்களை ஏற்கும் போது “இதம் சிவாய நமஹ” இது சிவனுக்கு, எனக்கல்ல என்று சொல்லி ஏற்கவேண்டிய விதியுண்டு. தானம் சற்பாத் திரமானவர்கள் கையில் கொடுக்கப்பட்டால் சிப்பியின் வாயில் விழுந்த நீர் முத்தாய் விளைவது போலப் பெரும் பயனாய் விளையும் அந்த நிலையில்லாத போது கமரிலு}ற்றிய பார்போலாகும்.
சிரார்த்தம் என்பது யாது?

அந்தியேட்டிக்குப்பின் இறந்தவரைக் குறித்து நிகழும் கிரியைகள் எல்லாம் பொதுவில் சிரார்த்தம் எனப்படும். சிரத் தையோடும் செய்வது சிரார்த்தமென்ற விளக்கத்தின் பேரில் அது அமையும். சிரத்தை என்பது கிரியை செய்பவர் இறந்த வர் மேற்கொள்ளும் அன்பு. அவரைக் குறித்துச் செய்யுஞ் செயல்களில் காட்டும் நேர்மை, மேற்கொள்ளும் பிரயாசை எல்லாவற்றையும் அடக்கும். நம்மவர் சூழலில் ஆட்டத்தைக் திதி, திவசம் இரண்டும்தான் சிரார்த்தமென சிறப்பாகக் குறிக்கப்படுவதுண்டு. “சும்மா ஐயருக்கரிசி கொடுப்பது” என்ற பாவனை மட்டிலிருந்தால் அது சிரார்த்தமாகாது. தெய்வ சிந்தனையும், தேவார திருவாசக பாராயணமும் உபவாசமுமாயிருந்து உத்தமமான திரவியங்களைத் தேடிப் பக்திப10ர்வமாகச் செய்தாற்றான் அது சிரார்த்தமென்ற பெய ருக்குப் பொருத்தமாகும்.
துடக்குக் காத்தல் என்ற ஒரு வழக்கம் இருக்கின்றதே! அது என்ன? அது எதற்கு?

துடக்கு என்பது ஒருவர் தொடர்பு காரணமாக ஒரு வர்க்கேற்படும் அசுகுசுப்பான அகப்புறச் சூழ்நிலைகளைக் குறிக்கும

வேலுப்பிள்ளை ஐயாவின் நினைவுகள்

அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் இலங்கை இராணுவத்தின் தலைமையகமான பனா கொடை படைத்தடுப்பு முகாமில் 06-01-2010ம் திகதி இரவு 9.00 மணியளவில் காலமாகினார் என்ற செய்தி ஈழத் தமிழர்களின் நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.
உலகில் நடைபெற்ற தேசிய இன விடுதலைப் போரட்டங்களில் பல வரலாற்றுச் சாதனைகளான தரைப்படை, கடற்படை, வான்படை ஆகியவற்றிற்கு தலைமை தாங்கி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வழி நடாத்திய தலைவர் பிரபாகரனின் பெற்றோர் என்ற காரணத்திற்காகவே பனாகொடை இராணுவத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
ஐயா காலமாகிய செய்தி 07-01-2010ம் திகதி நண்பகல் 1 மணியளவில் தெரிந்து கொண்டதும் ஜனாதிபதி செயலகத்தைத் தொடர்பு கொண்டு உரிய விசாரணைகள் நடாத்தப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ப10தவுடல் கையளிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தேன். அநாதையாக அரச செலவில் அடக்கம் செய்யவேண்டாம் எனவும் மேலும் வேண்டுகோள் விடுத்தேன்.
இதனைத் தொடர்ந்து கனடாவில் இருந்து இளைய மகள் திருமதி வினோதினி இராஜேந்திரன் (சித்திரா) அவர்களும் திரு. இராஜேந்திரன் அவர்களும் தொலைபேசி மூலம் என்னைத் தொடர்பு கொண்டு உடலைப் பொறுப்பேற்குமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கான அதிகாரத்தை வழங்கும் கடிதத்தையும் எனக்கு அனுப்பி வைத்தனர். அதன் அடிப்படையில் வேலுப்பிள்ளை ஐயாவின் ப10தவுடலையும், பார்வதிப்பிள்ளை அம்மாவையும் பொறுப்பேற்றேன். வல்வெட்டித்துறையில் மச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டது. அதிலும் அம்மாவும் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது. ஈழத் தமிழர்கள் நிம்மதி அடைந்தனர்.
முதலாவது உலக மகா யுத்தத்தில் திருகோணமலையில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலை கடலுக்கு அடியில் இருந்து உள்ள10ர் முறைகளைப் பாவித்து வெளியே எடுத்துவந்து அதை விற்ற பணத்தில் இருந்துதான் வல்வெட்டித்துறை சிவன்கோயில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

சிவன் கோவிலின் தர்மகர்த்தாவாக இருந்துவந்த அமரர் வேலுப்பிள்ளை ஐயாவின் வாழ்க்கை சமய நெறியில் சென்றாலும் இள வயதிலேயே அரசாங்க சேவையில் இணைந்து பல படிகளைக் கடந்து, மாவட்டக் காணி உத்தியோகத்தராக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமை யாற்றிய பின்னர் ஓய்வுபெற்றார். அக்காலகட்டத்தில் (1980) முல்லைத்தீவுப் பகுதியில் நெடுஞ்சாலைகள் திணைக்களத்தில் பணியாற்றிய பொழுது வேலுப்பிள்ளை ஐயாவின் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அதிகம் பேசமாட்டார். நேர்மையானவர். தன்னுடைய மகன் பிரபாகரனைப்பற்றி சுருக்கமாக விசரித்து அறிந்து கொள்வார். வீர மகனைப் பெற்ற தந்தையாகப் போற்றப்பட்டாலும் சற்றும் பெருமை கொள்ளாதவர்.
அன்னார் மனைவியையும், நாலு பிள்ளைகளையும், நாலு மருமக்களையும், பேரக் குழந்தைகளையும், ப10ட்டப்பிள்ளைகளையும், உற்றார், உறவினர்களையும் , நண்பர்களையும், அன்பர்களையும் விட்டுப்பிரிந்தாலும் அன்னாருடைய நாமம் ஈழத் தமிழர்களின் வரலாற்றிலும், வல்வெட்டித்துறை வாழ் மக்களின் நெஞ்சங்களிலும் என்றும் நிலைத்திருக்கும். பல ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்த காரணத்தினால் அங்கு உட்பட உலகம் எங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களிலும் வேலுப்பிள்ளை ஐயாவின் நாமம் என்றும் நிலைத்திருக்கும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

அன்புடன்,
ம. க. சிவாஜிலிங்கம்
(எம்.கே. சிவாஜிலிங்கம்) யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்

தமிழர் நெஞ்சமெல்லாம் வாழும்
திருவேங்கடம் வேலுப்பிள்ளை

தமிழ்தாயின் தவமைந்தனான மாவீரர் திலகமாம் பிரபாகரனின் தந்தை, உத்தமராம் வேலுப்பிள்ளை, தமிழர் பண்பாட்டுப் பெட்டகமாய்த் திகழ்ந்தார், வான்புகழ் வள்ளுவர் வகுத்த குறள்நெறி மனையறம் கண்டு, போற்றுதலுக்குரிய நமது அன்னை பார்வதி அம்மையாரின் வாழ்க்கைத் துணைவராக அறம் ஓங்கிய வாழ்வு நடத்தியவர். நேர்மையின் சிகரமாக நாணயத்தின் இலக்கணமாக அரசுப்பணி ஆற்றியவர்..இணைபிரியாத அன்றில்களைப் போல, வாழ்நாள் நெடுகிலும் தன் துணைவியாரோடு பாசமும் நேசமும் கொண்டு வாழ்ந்த அப்பெருமகன், உடல் நலிவுற்றுப் பரிதவித்த தன் துணைவியார் நிலைகுறித்து எப்படியெல்லாம் கலங்கி இருப்பார்?

அப் பண்பாளரும், அவரது துணைவியாரும், என் இல்லத்துக்கு வந்ததும், அவர்களின் காலடிபட்டதையும் எண்ணியெண்ணி நான் பெருமிதம் கொள்வதும், அவர்கள் என் பேரப்பிள்ளைக்குப் “பிரபாகரன்” என்று பெயர் சூட்டி உச்சிமோந்து மகிழ்ந்ததும், எப்படி மறப்பேன் நான்? முசிறியில் பர்வதி அம்மையார் சிகிச்சை பெற்ற காலத்தில், பலமுறை அவர்களைச் சென்று பார்க்கும் பாக்கியம் பெற்றேன். தமிழீழ நாயகனைத் தரணிக்குத்தந்த அத்தந்தை, மண்ணில் மறைந்தாலும், தமிழர் நினைவிலே வாழ்கிறார். மதிப்பிற்குரிய வேலுப்பிள்ளை ;அவர்களின் நினைவு ஏந்தல் நிகழ்ச்சியில், அன்னாருக்கும் புகழ் மலர்களைத் து}வுகிறேன்.

வல்வெட்டித்துறை என்ற மண்ணுக்கு, வரலாற்றில் ஒரு அழியாத புகழைத்தந்த குடும்பம் வேலுப்பிள்ளையின் குடும்பம் ஆகும். “வல்வெட்டித்துறை” என்று சொன்னாலே நம்முடைய நாடி நரம்புகளில் மின்சாரம் பாயும். ஆம் கிறிஸ்தவர்களுக்கு ஒரு ஜெருசலம், இஸ்லாமியர்களுக்கு ஒரு மெக்கா, இந்துக்களுக்கு ஒரு காசி, அதைப்போலவே தமிழர்களுக்கு மாவீரர் திலகமாம் பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை. உத்தமர் வேலுப்பிள்ளை உடலால் மறைந்தாலும், நம் உள்ளங்களில் நிலைத்து இருப்பார். தமிழர்களின் தியாக வரலாந்றில், வேலுப்பிள்ளையின் பெயர் நிரந்தரமாக இடம் பெற்று இருக்கும். அலைகடலுக்கு அப்பால், தாய்த்தமிழகத்தில் இருந்து, என்னுடைய வீரவணக்கதை;தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ,
தாயகம், பொதுச் செயலாளர்,
சென்னை-8 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

நன்றிகள்
அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை

அவர்கள் இப்ப10வுலகை விட்டுப் பிரிந்த செய்தி அறிந்த தும் அன்னாரது ப10தவுடலைக் கொழுப்பிலிருந்து வல்வெட்டித் துறை வரை கொண்டுவந்ததுடன் இறுதி நிகழ்வுவரை தங்கி யிருந்து சகலவிதமான ஒத்தாசைகளையும் வழங்கிய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. ம.க. சிவாஜிலிங்கம் அவர்கட்கும்,
மரணக்கிரியைகளில் கலந்து கொள்வதற்காக தமிழ கத்திலிருந்து வருகைதந்திருந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தொல் திருமாவளவன் அவர்கட்கும், பெரியார் கழகப் பிரதிநிதி சட்டத்தரணி திரு. சந்திரசேகரம் அவர்கட்கும், கன டாவிலிருந்து வருகைதந்திருந்த திரு. ரமேஷ் அவர்கட்கும்,
ப10தவுடல் வல்வைக்கு கொண்டுவரப்பட்டதும் தேவை யான அனைத்து உதவிகளை வழங்கியது மட்டுமல்லாது நோய்த் தாக்கத்துக்குள்ளாகியிருக்கும் அமரரின் துணைவியாரை வைத்தியசாலையில் வைத்திருந்து பராமரித்துக் கொண்டிருக்கும் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் க. மயி லேறும்பெருமாள் மற்றம் வைத்தியசாலையின் ஊழியர் களுக்கும்,
இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்திருந்த சகல தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கட்கும், தமிழ்ஈழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் திரு. த. சித்தார்த்தன் அவர்கட்கும், செய்மதி ஊடாக இரங்கலுரை நிகழ்த்திய திரு. ப. நெடுமாறன் அவர்கட்கும், திரு. வை. கோபாலசாமி (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்கட்கும், இயக்குனர் சீமான் அவர்கட்கும்,

அமரரது ப10தவுடல் தீருவில் சதுக்கத்திலும், வீட்டிலும் வைக்கப்பட்டிருந்த சமயம் யாழ் குடாநாட்டிலிருந்தும், மற்றும் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வருகைதந்து அன் னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சிங்கள, இஸ்லாமிய, தமிழ் சகோதரர்களுக்கும், மற்றும் பல வழிகளிலும் தேவை யான சகல உதவிகளையும் வழங்கிய அனைவருக்கும்,

நிதியுதவி வழங்கிய வெளிநாடுகளில் உள்ள லண்டன் நலன்புரிச்சங்கம் (வல்வை), வல்வை புரூஸ், லண்டன் திரு. வி. மகேந்திரராஜா, திரு. கு. ஜவகர்லால்நேரு ஆகியோருக்கும்,

இம்மலரினை குறுகிய காலத்தில் அச்சுப்பதிப்பு செய்து தந்த வல்வெட்டி ஸ்ரீவாணி அச்சக உரிமையாளர் திரு. சி. சிவகுமார் அவர்கட்கும், இன்றைய அந்தியேட்டி, சபிண்டீகரணக் கிரியைகளில் பங்குபற்றி ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்ட சகலருக்கும் மற்றும் பல வழிகளிலும் சகல உதவிகளையும் வழங்கிய அனைவருக்கும் எமது நன்றிகள்.

இங்ஙனம்
குடும்பத்தினர்
வல்வை வாழ் மக்கள்

0 Responses to அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.

Post a Comment

Followers