Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொன்சேகா கைத செய்யப்பட்ட செய்தியை தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் குலுகல்ல அறிவித்தவுடன் நேற்றிரவு கொழும்பைச் சூழவுள்ள சில பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதிக்கு சார்பான இராணுவத்தினர் சிலர் மேல் மாகாண சபை உறுப்பினர் துமிந்த சில்வாவின் ஆதரவாளர்களின் உதவியுடன் இந்தப் பட்டாசுகளைக் கொளுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பொன்சேகா கைது தொடர்பான செய்தியை அறிந்து அதுதொடர்பாக செய்தி சேகரிக்க சென்று சம்பவத்தைப் பதிவு செய்த ஊடகவியலாளர்களின் கமராக்கள் இராணுவ அதிகாரிகளினால் பறிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சில ஊடகவியலாளர்கள் எடுத்த புகைப்படங்கள் அழிக்கப்பட்டு, கமராக்கள் அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்ட பின்னர் .எவ்.பி. செய்தி நிறுவனத்தின் படப்பிடிப்பாளர் எடுத்த புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.

இதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேக்காவை கைதுசெய்யச் சென்ற மேஜர் ஜெனரல் மானவடு, பொன்சேகாவை கைத செய்ய செல்வதாக தம்முடன் சென்ற இராணுவக் காவல்துறையினர் எவருக்கும் அறிவிக்கவில்லை என்றும் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்ட பின்னர் அவருடன் சென்ற சகல இராணுவ காவல்துறைச் சிப்பாய்களின் கையடக்கத் தொலைபேசிகளையும் மானவடு தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டுள்ளார் என்றும் இராணுவ வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

0 Responses to பொன்சேகா கைதை அடுத்து கொழும்பில் சில பகுதிகளில் பட்டாசு கொழுத்திய அரசு ஆதரவாளர்கள்!

Post a Comment





அதிகமாக வாசிக்கபட்டவை

Recent Post



தொடர்புக்கு: vannionline@gmail.com