முன்னாள் ராணுவத் தளபதியும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா இன்று இரவு ஒன்பது மணியளவில் அவரது அலுவலகத்தில் வைத்து இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவரது ஊடகப் பேச்சாளரான சேனக டி சில்வாவினையும் இராணுவப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது நடவடிக்கையைப் படம் பிடித்த டெய்லி மிரர் மற்றும் AFP பத்திரிகையாளர்களின் கமராவிலிருந்த மெமரிக் கார்ட்டினை சுற்றியிருந்த ராணுவத்தினர் பறித்தெடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையில் கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகா கோர்ட்டில் ஆஜர் படுத்தப் படுவார் என்று தேசிய பாதுகாப்பிற்கான ஊடக செயலர் லக்ஸ்மன் குளுகல்ல சற்று முன்னர் இலங்கைத் தொலைக்காட்சியொன்றுக்குத் தெரிவித்தார்.
சரத் பொன்சேகா மீது ராணுவக் கிரிமினல் குற்றச் சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளது. ராணுவ ரகசியங்களை அவர் வெளியிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.









0 Responses to சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். (காணொளி, படங்கள் இணைப்பு)