Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலை: கவிதை

பதிந்தவர்: தம்பியன் 08 February 2010

விடுதலை என்பது
விடுகதை அல்ல
வெற்றியும் எளிதல்ல

எலியாக நாம்
வளை தேடவில்லை
புலியாகி பகைவெல்ல
புறப்பட்டுவிட்டோம்

தடையினை உடைப்போம்
தலைவனை மதிப்போம்
மனதெங்கும் நிறைவான
மாவீரர் புகழ்பாடி
வெற்றிகள் குவிப்போம்

எடுபடையெனவே
படுகளம் ஆடும்
பகையது கொன்று
புதியதோர் சரித்திரம் படைப்போம்

வீரர் நாம்
வேகம்தான் எம் மூச்சு
மண்ணின் மைந்தர் நாம்
மானம்தான் பெரிது

கரிகாலன் வளர்த்தெடுத்த
கரும்புலிகள் நாங்கள்
கணப்பொழுதில்
விடியல் காண்போம்

கடலன்னை தத்தெடுத்த
கடற்புலிகள் நாங்கள்
கடலதிலும் காண்போம்
விடுதலை

வான்மகவு ஈன்றெடுத்த
வான்புலிகள் நாங்கள்
விண்ணேறிப் பெறுவோம்
வியத்தகு விடுதலை

தேசத்தின் குரலால்
தினம் வளர்ந்தவர்கள் - நாங்கள்
தேசம் அதிர
தேசியவிடுதலை காண்போம்.

வாகீசன் தமிழீழம்

0 Responses to விடுதலை: கவிதை

Post a Comment





அதிகமாக வாசிக்கபட்டவை

Recent Post



தொடர்புக்கு: vannionline@gmail.com