Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மட்டக்களப்பு கல்லடியில் இராவணா திரைப்படம் திரையிடவிருந்த சாந்தி தியேட்டரை தீக்கிரையாக்குவதற்கு முயன்ற பிள்ளையான் குழு சார்பில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவரும் செங்கலடி செல்லம் திரையரங்க உரிமையாளருமான மோகன் கணபதிப்பிள்ளையை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கடந்த 17 ஆம் திகதி இரவு சாந்தி திரையரங்குக்கு வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் திரையரங்கிற்கு தீயிட்டதுடன் எதிர்வரும் ஜுன் 30 ஆம் திகதிவரை குறிப்பிட்ட திரையரங்கில் திரைப்படம் எதுவும் திரையிடக்கூடாது என்று துண்டுப்பிரசுரம் ஒன்றை வைத்து சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், திரையரங்கு பகுதிக்கு வந்த வெள்ளைவானின் அடையாளத்தின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்து மட்டக்களப்பு மாஜிஸ்ரேட் நீதிமன்றில் ஆஜர் படுத்தினர்.

திரையரங்குகளுக்கு இடையிலான போட்டியே சம்பவத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபரை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்தை அடுத்து மட்டக்களப்பில் ஏனைய திரையரங்குகளான சுபராஜ், விஜயா, இராஜேஸ்வரி ஆகியவை தற்காலிகமாக திரைப்படக்காட்சிகளை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to சாந்தி திரையரங்கு தீக்கிரை: பிள்ளையான் குழுவில் தேர்தலில் போட்டியிட்டவர் கைது!

Post a Comment

Followers