Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடாவின் பிரபல .கே. கண்ணன் குழுவின் தலைவர் ஜோதிரவி சிற்றம்பலம் கடந்த ஜுன் மாதம் 10 ஆம் திகதி சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவர் நாடு கடத்தப்பட்ட தகவலை நேற்று திங்கட்கிழமை கனடிய அரசுத்தரப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல், மூவர் படுகொலை மற்றும் ஆபத்தான ஆயுதங்கள் பாவனை ஆகிய பல குற்றங்களுடன் தொடர்புடைய ஜோதிரவி சிற்றம்பலம் கடந்த 2001 ஆம் ஆண்டு கனடிய காவல்துறையின் பாதாள உலகக்கும்பல்களை ஒழிக்கும் விசேட நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு எதிரான 12 க்கும் மேற்பட்ட வழக்கு விசாரணைகளின் கீழ் தீர்ப்பு வழங்கப்பட்டு இவரை நாடு கடத்துமாறு 2004 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டபோதும், தீர்ப்பினை எதிர்த்து மேன்முறையீடு செய்த காரணத்தினால் 2007 ஆம் ஆண்டு - எந்நேரமும் இவரது நடமாட்டத்தை கண்காணிக்கும் இலத்திரனியல் விலங்குடன் - பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இவரது மேன்முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டு, கடந்த ஜுன் மாதம் 9 ஆம் திகதி கனடிய உயர்நீதிமன்றினால் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பின் பிரகாரம், கனடாவின் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஜோதிரவி நாடு கடத்தப்படவேண்டும் என்ற தீர்ப்பினை உயர்நீதிமன்றம் உறுதிசெய்தது.

கனடாவின் ரொரான்ரோ மாநிலத்தில் .கே.கண்ணன் மற்றும் வி.வி.ரி. குழுவினருக்கு இடையில் நீண்ட காலமாக வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வந்தமையும் இரு குழவினருக்கும் இடையில் இடம்பெற்ற பயங்கர மோதல்களில் பலர் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to கனடாவில் குழுக்களை உருவாக்கி மோதலில் ஈடுபட்டுவந்தவர் நாடு கடத்தப்பட்டார் (படம்)

Post a Comment

Followers