Content feed Comments Feed
  “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் தமிழர் பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு என்று தமிழகத்தின் பெருமளவான மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறைந்தளவான தொகையினரே சமவுரிமைகளின் அடிப்படையில இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கப்படலாம் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தின் பொது கற்கைகளுக்கான நிலையமான Loyola College நடத்திய ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆயவில் பங்கேற்ற 65 வீதமான மக்கள், இலங்கையின் தமிழர்களின் பிரச்சினைக்கு தமிழீழமே நிரந்தர தீர்வை தரும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

70 வீதமான மக்கள், இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்வரும் அமர்வில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மஹிந்த ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

74 வீதமானோர், மத்திய அரசாங்கத்துக்கு காலக்கெடு விதித்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்காக போராடவேண்டும் என்று கோரியுள்ளனர்.

இலங்கைக்கு எதிராக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை 84 வீதமானோர் வரவேற்றுள்ளனர்.

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்கு 42.3 வீதமானோர் ஆதரவு வெளியிட்டுள்ளனர்.

கச்சத்தீவை இந்தியா மீண்டும் பெற வேண்டும் என்பதற்கு 62 வீதமானோர் ஆதரவு அளித்துள்ளனர்.

இந்த ஆய்வு இந்த மாதம் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கல்விமான்கள் உட்பட்ட பல்வேறு தரப்பினர் உள்வாங்கப்பட்டனர்.

இதேவேளை. ஈழத்தின் இறுதிப்போரில் 146 ஆயிரம் பேர் காணாமல் போனமை மாத்திரமன்றி, தமிழர்களின் கலாசாரமும் அழிக்கப்பட்டு வருவதாக இந்த ஆய்வின் போது தமிழகத்தின் சமூக நடவடிக்கையாளர் ஒருவ்ர் கருத்துரைத்துள்ளார்.

5 Responses to ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு: தமிழக மக்கள்

 1. இன்னமும் முற்றும் முழுதாக ஈழப்பிரச்சனை தமிழக மக்களுக்குப் போய்ச் சேரவில்லை என்பதனையே ஆய்விலிருந்து தெரிய வருகின்றது. சிங்கள இன வெறி அரசுகள் சம உரிமை என்பதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. அப்படி ஏதும் அழுத்தங்களின் மூலம் தற்போதைய அரசு அமல் படுத்தினாலும் அது நீடித்து நிலைக்காது. தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சிங்கள அரசு செய்யும் பேச்சுவார்த்தை நாடகத்திலிருந்து இதைப் புரிந்து கொள்ளடியும். இதனை தமிழக உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும். புரிய வைக்க வேண்டும். இத்தனை நடந்தபின்னும் இந்த இனவெறி கொலைக் கூட்டத்துடன் சேர்ந்து வாழ்வது முடியாத காரியம். எனவே தமிழக மக்கள் மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழ விடுதலையையே ஆதரிக்க வேண்டும். இதுவே அவலவாழ்வு வாழும் ஈழத்தமிழருக்கு ஒரு மீட்சியை கொடுக்கும்.

   
 2. இளமாறன் தமிழ் நாடு‍
  தமிழ் ஈழம் தான் இலங்கை தமிழர்களுக்கு‍ ஒரே தீர்வு. இதில் மாற்று‍ கருத்து‍ ஏதும் இல்லை. இந்த கருத்து‍ கணிப்பை சுட்டி‍ காட்டி‍ நாம் அனைவரும் ஐ.நா வுக்கு‍ மின்னஞ்சல் அனு‍ப்பலாம், இது‍ போன்ற இங்கிலாந்து‍ மற்றும் நியூஸிலாந்து‍ க்கும் மின்னஞ்‍ல் அனு‍ப்பலாம். நான் ஏற்கனவே தமிழ் ஈழத்தை வலியுறுத்தி இது‍ போன்ற மின்னஞ்சல்கள் அனுப்பிய போது‍ இங்கிலாந்து‍ மற்றும் நியூஸிலாந்து‍ வெளியுறவு துறையிடம் இருந்து‍ கடிதம் வந்தது‍, அதில் தாங்கள் எப்போதும் தமிழ் மக்களுக்கு‍ ஆதரவாக இருப்போம் என்று‍ உறுதி கூறுப்பட்டது. இது‍ போன்று‍
  நாம் அனைவரும் அடிக்கடி‍ மின்னஞ்சல் அனுப்புவதால் உடனடியாக அவர்கள் நமக்கு‍ தமிழ் ஈழத்தை பெற்று‍ கொடுப்பார்கள் என்று‍ அர்த்தம் அல்ல. தனி தமிழ் ஈழத்தை நாம் அனைவரும் ஓயாமல் வலியுறுத்தி கொண்டே இருந்தால். தமிழர்கள் விரும்புவது‍ தனி தமி்ழ் ஈழம் தான் என்று‍ உலக சமூகத்திடம் ஒரு‍ எண்ணத்தை உருவாக்க முடியும், இது‍வே சூடான் நாட்டில் நடந்தது‍ போல் தனி நாட்டு‍க்கான மக்கள் கருத்து‍ கணிப்பை ஒன்றை நடத்த நாம் அனைவரு‍ம் வலியுறுத்தும் போது‍ நமது கோரிக்கையை ஐ.நா மன்றம் ஏற்க வாய்ப்பு அதிகரிக்கும். மேலும், தமிழக சட்டசபையில் இலங்கைக்கு‍ எதிராக நிறைவேற்ற பட்ட தீர்மாணம் போன்று‍ மற்ற இந்திய மாநிலங்களும் நிறைவேற்றினால், வலு‍ சேரும். ஆகவே குஜராத், கர்நாடகா அரசு‍ இணைதளத்துக்கு‍ (அங்கு‍ நடப்பது‍ பிஜேபி அரசு) சென்று‍ நான் சென்ற வாரம் இந்த கோரிக்கையை வைத்தேன். இது‍ போன்று‍ அனைவரும் இந்த இணைதளத்துக்கு‍ சென்று‍ கோரிக்கையை வைக்குமாறு‍ வேண்டி‍ கொள்கிறேன்.,

   
 3. தமிழக மக்களுக்கு இதில் ஆர்வம் இல்லை என்பதே உண்மை ,ஈழம் என்றால் எங்கே உள்ளது என கேட்பவர்கள் தமிழகத்தில் உள்ளார்கள் ...அவர்களுக்கு சினிமா விடயங்களில் இருக்கும் ஆர்வம் கூட ,தமிழ் தேசிய விடயத்தில் இல்லாதது வரலாற்று இழிவு ஆகும் ... அனால் தற்போதைய இளம் பரம்பரை ,மேலும் தமிழர் வரலாற்றை அறிய ஆர்வம் உள்ளவர்கள்... தேசிய விடயத்தில் முழு மனத ஈடுபாடு காட்டி வருகீறார்கள் என்பது நல்ல செய்தி ...

  தமிழீழத்தை அடைய எப்போதும் தமிழக இளையோர் துணை நிற்பார்கள் என்பதில் துளி அளவு சந்தேகம் வேண்டாம் எமது உறவுகளே ...


  தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம்..

  மதன் ,தமிழகம்

   
 4. Mig33Indians தமிழக மக்களுக்கு இதில் ஆர்வம் இல்லை என்பதே உண்மை ,ஈழம் என்றால் எங்கே உள்ளது என கேட்பவர்கள் தமிழகத்தில் உள்ளார்கள் .. .தமிழ் நாட்டவர்கள் ஈழா திற்கு அதரவு கொடுக்கிறோம் அதற்கு முன் தமிழ் நட்டு தமிழர்களிடமும் மலையக தமிழர்களிடமும் மன்னிப்பு கேளுங்கள் கடந்த கால தவறுகளை நினைத்து  1946 ஆம் ஆண்டு இலங்கையின் மொத்த சனத் தொகையில் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 10.9 வீதமாகவே இருந்தது அதேவேளை பெரும்பான்மை தமிழர் என்ற நிலையில் மலையக தமிழர்களே காணப்பட்டனர்1946 ஆம் ஆண்டு மலையக தமிழர்களின் எண்ணிக்கை (இந்திய வம்சாவளியினர்) 11.7 விழுக்காடாக காணப்பட்டபோது . சுதேசிய பூர்வீக தமிழர்களாக கருதப்பட்ட இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 10.9 விழுக்காடாக இருந்தது. அதேவேளை முஸ்லிம்களின் எண்ணிக்கை 6.2 விழுக்காடாக இருந்தது. இந்த மலையக மக்களின் அரசியல் பலம் சிங்கள தேசியவாதிகளுக்கு மட்டுமல்ல யாழ் மேட்டுக்குடி மையவாத தமிழர்களுக்கும் தமது அரசியல் ஆளுமைக்கும், பிரதிநித்துவத்துக்கும் சவால் விடுவதாக அமைந்ததால் தான் ஜி.ஜி பொன்னம்பலம் அவர்கள் அன்றைய அரசுடன் சேர்ந்து இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டத்துக்கு ஆதரவளித்தார். பூர்விக தமிழர்கள் மலையக தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மரகமுடிவுமா
  மலையக தமிழர்கள் பிரஜா உரிமை பறிக பூர்விக தமிழர்களும் இலங்கை அரசுக்கு அதரவாக செய்யல பட்டர்களே அன்று தெரியவிலைய இவர்கள் நாம் தாய் தமிழ் உறவுகள் என்று

   
 5. தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!

  முன் அறிவிப்பு: இப் பதிவு பிடிக்காதவர்கள் தயவு செய்து இதனைப் படிக்க வேண்டாம். ஒரு ஈழத் தமிழனாக இருந்து, மனம் விட்டு மன்னிப்புக் கேட்டாலும் இந்தச் செயல்களை ஆற்றுப்படுத்த முடியாது என்ற காரணத்தினால் நான் எங்கள் இழி நிலைகளைப் பதிவாக்க முனைகின்றேன். ஈழத் தமிழன் எனும் அடையாளத்துடன் இப் பதிவினை எழுதுவதால், தமிழக உள்ளங்களிடமிருந்து எதிர்ப்பலைகள் கிளம்பலாம், ஆனாலும் பதிவில் நான் என் கருத்துக்கள் எதனையும் முன் வைக்காது, எங்கள் மக்களின் அனுபவ ரீதியான கருத்துக்களை மட்டுமே முன் வைக்கவுள்ளேன்!

  உறவுகளே, இப் பதிவில் வரும் விடயங்கள் உங்களைக் காயப்படுத்தலாம், இவை தமிழக உறவுகள் மத்தியில் பல முரண்பாடுகளை உருவாக்கலாம். ஆனாலும் இப் பதிவில் வரும் விடயங்கள் உங்கள் மன எண்ணங்களைச் சிதைப்பதற்கானவை அல்ல. உங்களுடன் எங்களின் இழிவான குணங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே! ஈழத் தமிழர்களுக்கு இப்படியும் ஒரு குணம் இருக்கிறது என்பதனை அல்லது ஈழத் தமிழர்களின் மறுபக்கத்தைத் தெரிந்து கொள்வதற்காகவே இப் பதிவு.


  http://www.thamilnattu.com/2011/04/blog-post_1619.html

   

Post a Comment

Followers