நாஸி படையினர் போரின் போது பொது மக்கள் மீது குண்டு வீசி தாக்குதல்களை நடத்தியமை போன்றே இலங்கையிலும் தமிழர்கள் படையினரால் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இந்த கருத்தை Ray Cook என்பவரின் இஸ்ரேலிய புளொக்கர் தளம் வெளியிட்டுள்ளது.
செனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தை பார்த்த பின்னரே இந்த கருத்தை குறித்த புளொக்கர் வெளியிட்டுள்ளது.
செனல் 4 காணொளியின் காட்சிகளின் அடிப்படையில் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர்.
இந்த காட்சிகள் பயத்தை உண்டாக்குகின்றன.
இனப்படுகொலையை மேற்கொண்டமை மூலம் இலங்கைப்படையினர் போர்க்குற்றத்தை புரிந்துள்ளனர் அதேநேரம் தமிழீழ விடுதலைப்புலிகளும் தமது சொந்த மக்களை தடுத்து வைத்தமை குற்றமாகும் என்று Ray Cook குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியசாலைகளின் மீது இலங்கைப்படையினர் தாக்குதல் நடத்தியதன் மூலம் அவர்கள் பாரிய மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளதாகவும் Ray Cook தெரிவித்துள்ளார்.
இலங்கைப்படையினரின் போர்குற்றம் நாஸிப் படையினரின் நடவடிக்கைகளை ஒத்தது : இஸ்ரேலிய எழுத்தாளர்
பதிந்தவர்:
தம்பியன்
20 June 2011
0 Responses to இலங்கைப்படையினரின் போர்குற்றம் நாஸிப் படையினரின் நடவடிக்கைகளை ஒத்தது : இஸ்ரேலிய எழுத்தாளர்