Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2006 இறுதிப்பகுதியில் மாவிலாற்றில் தொடங்கி 2009மே மாதம்வரையும் தமிழீழ விடுதலையை அழித்தொழிக்க சிறீலங்கா நடாத்திய தாக்குதல்கள் ஒரு பக்கத்தில் நடந்து கொண்டிருக்க, மற்றபக்கத்தில் மலேசியாவிலும், தாய்லாந்திலும் சதிக்கான திரைமறைவு வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன.

இந்தச்சதிக்குள் விடுதலைப்போராட்டத்தின் நிர்வாக கட்டமைப்புகளைப்பற்றிய மேலதிக கல்விக்காக இயக்கத்தால் அனுப்பப்பட்டிருந்த சிலரும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். புலம்பெயர்நாடுகளில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு விலத்தப்பட்டபலரும் இந்த சதியின் கூட்டாளிகளாக மாற்றப்படுகிறார்கள். இன்னும் சிலருக்கு தேசியத் தலைமை அழிக்கப்பட்ட பின்னர் இன்ன இன்ன பதவிகள் உங்களுக்கே என்று வாக்குறுதிகள் வழங்கப்பட்டும் சேர்க்கப்பட்டனர்.

இப்படியானவர்கள் எமது தாயக விடுதலைப் போராட்டம் மோசமாக சிதறடிக்கப்பட்டு எம் மக்கள் கொல்லப்பட்டபோதும் பதவிகளை எதிர்பார்த்து இனஅழிப்புக்கு துணைபோனார்கள். அதன்பின்னரும் இவர்கள் தமது உண்மை முகத்தை வெளியில் காட்டவில்லை. கே.பி யை புதிய தலைவராக்கி தமிழினத்தை மொத்தமாக விற்றுவிட முயன்றார்கள். அது தக்க தருணத்தில் புலம்பெயர் மக்களால் நிராகரிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டபோது இவர்கள் மீண்டும் தங்களின் முகத்தின்மீது தேசியம் என்ற போர்வையை போர்த்தியபடி எமது மக்களுக்குள் கால்ஊன்ற முயன்றார்கள்.

விடுதலைப்புலிகள் மீதான தமிழ் மக்களின் மாறாத பேரன்பை கணித்துக்கொண்டு தங்களையும் புலிகளாக காட்டியபடி புலித்தோல் போhத்துவரும் இந்த நரிகளை இப்போது ஈழமுரசு கிழிக்கத்தொடங்கி இருக்கிறது. ஒவ்வொருவரைப்பற்றியும் தக்க சான்றுகளுடன் தரவுகளுடன் ஆதாரத்துடன் அம்மணமாக்குகிறது. இவர்களின் முகத்தில் கிடந்த தேசிய முகமூடி கிழித்து எறிந்து இவர்கள் சிங்கள எஜமானர்களின் ஏவல் நாய்கள் என்ற உண்மை வடிவம் இப்போது தமிழ் மக்களுக்கு முழுதாக தெரிய ஆரம்பித்து இருக்கிறது.

ஈழமுரசில் வெளியான குற்றச்சாட்டுகளுக்கும், இவர்களால் செய்யப்பட்டதாக ஆதாரத்துடன் சொல்லப்பட்ட செய்திகளுக்கும் மறுப்போ, திருத்தமோ செய்வதற்கு வக்கற்ற சிங்கள உளவாளி கே.பி ன் கும்பல் இப்போது மின்னஞ்சல் திருடப்பட்டதால்தான் தங்களின் விசயங்கள் வெளியே தெரியவந்ததாக அலறஆரம்பித்து இருக்கின்றன.

அதுவும்கூட, ஏதோ ஒரு சிங்கள நாளேடு எழுதி இருக்கிறதாம். அதிர்ச்சியுடன் எழுதி இருக்கிறதாம். எது அந்த சிங்களநாளேடு.? எந்த திகதியில் வந்தது.? யார் அதன் ஆசிரியர்.? கே.பியா? கோத்தபாயாவா? பசீல்ராஜபக்சவா? அல்லது வழுதியா?

ஈழமுரசுலீக்ஸ் தொடர்ந்து இரண்டரை மாதங்களாக ஈழமுரசு பத்திரிகையில் வெளிவந்துகொண்டிருக்கிறது. ஏப்ரல் மாதம் தொடங்கி வந்துகொண்டிருக்கிறது. முதலாவது தொடரிலேயே பா.நடேசனுக்கு கனிமொழி எழுதிய மின்னஞ்சலை வெளியிட்டு கலைஞர் குடும்பம் என்னவிதமாக இந்த இனத்துரோகத்தில் பங்குகொண்டிருந்தார்கள் என்று காட்டியிருந்தார்கள். அப்போது யாருமே மின்னஞ்சல் தீருடப்பட்டதாக எழுதவில்லை. ஏன்.? துரோகிகள் தாமாகவே தமது துரோகத்தை எங்கேயாவது ஒப்புக்கொண்டு இருக்கிறார்களா.? அவர்களின் துரோகத்தை ஆதாரத்துடன் சொல்வதற்கு சான்றுகளாக மின்னஞ்சல்களும், கடிதங்களும், உரையாடல்களும், வங்கிக் கணக்குகளும் காட்டப்படுவது உலக வழக்கம்.

இப்போது இறுதி நேரத்தில் உணவுக்கப்பல் விடுவதாக உலகத்தையும் உலகத் தமிழினத்தையும் ஏமாற்றிய கதை கப்பல் ஏறிக்கொண்டு இருப்பதால் அவசரப்பட்டு மின்னஞ்சல் எடுக்கப்பட்டவிதம் பற்றி செய்தி விடுகிறார்கள். இறுதிநேரத்தில் இந்தியவல்லாதிக்கத்தின் ஏஜென்டுகளாக நடந்தவர்களுக்கும், பசீல்ராஜபக்சவின் தோழர்களாக புலத்தில் வலம் வந்தவர்களுக்கும் தமது பெயர்களும் இனிவரப்போகும் அத்தியாயங்களில் வெளிவரப்போகின்றது என்ற பயம் சுடத்தொடங்கி இருக்கிறது.

மின்னஞ்சல் எப்படி திறக்கப்பட்டது என்பது இப்போ முக்கியம் அல்ல. மின்னஞ்சலில் இருந்ததாக குறிக்கப்பட்டு ஈழமுரசில் வெளியாகும் செய்திகளுக்கு என்ன சொல்ல போகிறீர்கள். மறுப்பதற்கு முடியுமா..? அதைப் பொய் என்று சொல்லிவிட உங்களால் முடியுமா..?

சிங்கள நாளேடு சொன்னது என்ற திரைக்கு பின்னாலே நின்று முகங்களை மறைக்காதீர்கள். முடிந்தால் ஈழமுரசில் வருவது பொய் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். உண்மை வெளிவருவதை எவராலும் தடுத்துவிடமுடியாது. உண்மை சிலவேளைகளில் தாமதமாகும் ஆனால் நிச்சயம் வெளிவரும்.

எமது மக்களுக்கு எமது போராட்டம் யாரால் காட்டிக்கொடுக்கப்பட்டது என்ற உண்மையை தெரிவிப்பதற்காக ஈழமுரசு எடுக்கும் முயற்சிகள் தொடரவேண்டும். மக்கள் எப்போதும் உங்களுடன் நிற்பார்கள். துரோகிகளை துணிந்து இனங்காட்டுங்கள்.

0 Responses to துரோகம் செய்தவர்கள் தப்பிக்க பார்க்கிறார்கள்: இராசேந்திரன்

Post a Comment

Followers