Content feed Comments Feed
  “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில், தமிழ் ஈழமே தீர்வு என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

திருமாவளவன் பேசியதாவது:

இருபத்தைந்து ஆண்டுகால ஆயுத போராட்டத்தில் தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் ஈழ விடுதலைக்கான குரல் எழுப்பப்படவில்லை. ஒரு சிலர் இங்கே அழைத்துவரப்பட்டு பேசப்பட்டார்கள். பேரணியில் கலந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் மாநிலத்தில் தமிழ் ஈழ விடுதலைப்பற்றி ஆதரித்து பேசியது உண்டா. இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே தமிழ் ஈழம் கூடாது என்பதுதான். பாஜக ஆண்டபோதும் அதுதான் கொள்கை. காங்கிரஸ் ஆளுகிறபோதும் அதுதான் கொள்கை.

இந்துக்களுக்கான கட்சி என்று தன்னை பிரகடனப்படுத்திக்கொள்கிற பாஜக என்றைக்காவது அங்கே அழிக்கப்படுகிறவர்கள் இந்துக்கள் என்று கோபப்பட்டது உண்டா. அங்கே இடிக்கப்படுகின்ற கோயில்கள் இந்து கோயில்கள் என்று ஆத்திரப்பட்டது உண்டா.

பாஜக இந்த நாட்டை நான்கு முறை ஆளவில்லையா. என்றைக்காவது ஒருமுறையாவது அவர்கள் வெளியுறவுக் கொள்கையிலே மாற்றத்தை கொண்டுவந்தது உண்டா. ஒரு வாதத்திற்காக நான் சொல்லுகிறேன். இந்தியாவை ஆண்ட பாஜகவும் சரி, ஆண்டுக்கொண்டிருக்கின்ற காங்கிரஸ் கட்சியும் சரி, இது காங்கிரஸ் என்று அழைக்கப்படுகின்ற பாஜக. அது பாஜக என்று அழைக்கப்படுகின்ற காங்கிரஸ் கட்சி. அவர்கள் வெளிப்படையான மதவாத சக்திகள். இவர்கள் மறைமுகமான மதவாதிகள். அவர்களின் கொள்கையும் தமிழ் ஈழம் கூடாது என்பதுதான். இவர்களின் கொள்கையும் தமிழ் ஈழம் கூடாது என்பதுதான். ராஜபக்சேவின் கொள்ளையும் தமிழ் ஈழம் கூடாது என்பதுதான். கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடும் தமிழ் ஈழம் கூடாது என்பதுதான்.

தமிழ் ஈழத்தை தமிழ்நாட்டில் ஆதரிப்பவர்கள் யார். இன்று சட்டமன்றத்தில் அம்மா தீர்மானம் நிறைவேற்றிவிட்டார். இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று. எத்தனையோ தீர்மானங்கள் அப்படி நிறைவேற்றப்பட்டுவிட்டன. எல்லாம் அவை குறிப்புகளாகத்தான் இருக்கின்றன. நான் கேட்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவிலே தமிழ் ஈழம் தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா? அதிமுக நண்பர்களை பார்த்து நான் கேட்கிறேன். அம்மாவை பார்த்து நான் கேட்கிறேன்.

அரை நூற்றாண்டுக்கு மேலாக இந்த இனம் நசுக்கப்பட்டிருக்கிறது. அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிறது. அழிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையிலே மீண்டும் ஒற்றை ஆட்சியின் கீழ் சமஉரிமை என்பது பொருந்தாது. அது நடைமுறைக்கு ஒத்துவராது. ஆகவே அங்கு புலிகள் இல்லை என்று நீங்கள் சொல்லுகிறபடி நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனாலும் புலிகள் அங்கே இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களின் தேவை தமிழ் ஈழம் தான். எங்களின் ஒரே கோரிக்கை தமிழ் ஈழம்தான். வெளிப்படையாக அந்த தீர்மானத்தை நிறைவேற்ற அதிமுக முன்வருமா.

எம்ஜிஆர் தலைமையில் இருந்த அதிமுக வேறு. அன்று இருந்த இந்திய அரசியல் சூழல் வேறு. ஆனால் அம்மா தலைமை ஏற்ற பிறகு, தமிழ் ஈழ விடுதலை தொடர்பாக என்ன நிலைப்பாடு.

தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்லுகிற திமுக. பல மேடைகளில் சொல்லியிருக்கிறார்கள். தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால் திமுக இன்று ஒரு சூழ்நிலை கைதி. தனி ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்றினாலும், அதிமுகவின் நிலை என்னவோ அதுதான் திமுகவின் நிலை. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

7 Responses to அதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா? திருமா

 1. he is useless follow

   
 2. those both guys had to show their tamil patriotism at correct moment{ before 18 th of may 2009 } ok, now they lost their political benefices now again they started talk about tamileelam , what a funny! still they are thinking all tamils are fools, we never forgive this guys we dont want any helps from those animals ,who gave that authority to collect signatures to thirumavalavan , please listen to us, WE KNOW HOW TO MAKE TAMILEELAM,u guys dont interrupt us ok ,kalaimaran from tamileelam.

   
 3. இளமாறன் இந்தியா (தொடர்கிறது)

  "we dont want any helps from those animals " என்று‍ விமர்சனம் செய்யும் தனது‍ பெயரை கூட வெளியிட விரும்பாதவர், எத்தனை ஈழ போராட்டத்தில் கலந்து‍ கொண்டார், சமீபத்தி்ல் மெரினாவில் நடந்த ஈழதமிழர்களுக்கு‍ ஆதரவாக நடைபெற்ற மெழுகுவத்தி ஏந்தலில் கலந்து‍ கொண்டாரா, மற்றவர்களை விமர்சிக்கும் முன், தனது‍ பங்கு‍ என்ன என்று‍ யோசிக்க வேண்டும், அப்படியே , அவர் ஈழ போராட்டத்தில் வெகுவாக ஈடுபட்டிருந்தாலும், அவர் கோபப்படக் கூடாது‍. நாடு‍ கடந்த தமிழீழ அரசு‍ இந்த கையெழுத்து‍ இயக்கத்தை, நான்கு‍ மாதத்துக்கு‍ முன் நடத்தும் போது‍. தமிழகத்தில், நாடு‍ கடந்த தமிழீழ அரசின் தோழமை மையம், பெரியார் திராவிட இயக்கம் மற்றும் பல தமிழ் இயக்கங்கள் கையெழுத்து‍ பெற்றன, என்னால் முடிந்த அளவு, ஒரு‍ ஆயிரம் கையொப்த்தை பெற்றுக் கொடுத்தேன். இருந்தும் ஒரு‍ மாதத்துக்கு‍ முன் விடுதலை சிறுத்தைகள் இதை கையில் எடுத்த பிறகு‍ , இது‍ பிரபலமாக தெரிய வந்தது. இந்த கையொப்ப இயக்கத்தினால், ஐ.நா உடனடியாக தமிழ் ஈழத்துக்காக வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்க போவதில்லை. இது‍ தமிழ் ஈழத்தக்கான போராட்டத்தின் ஒரு‍ மைல்கல். திருமா நடத்தும் இந்த இயக்கத்தில் அனைத்து‍ மக்களும், வழக்கறிஞர்கள், நடிகர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பலர் இதில் கையொப்பமிட்டுள்ளார்கள். இதனால், ஈழ பிரச்சனையில் தமிழக மக்கள் மேலும் விழிப்புணர்வு அடைவார்கள். ஆகவே, அனைத்து‍ கட்சிகளின் ஆதரவும் ஈழ விவகாரத்தில் தேவை. ஏன், பிஜேபி மற்றும் காங்கிரேஸின் ஆதரவும் நமக்கு‍ தேவை, தனி ஈழம் வென்று‍ எடுக்க.

   
 4. இளமாறன் இந்தியா

  அதிகமான நபர்களுக்கு‍ ஈழ சரித்திரம் தெரிவதில்லை, உணர்ச்சிவயப்பட்டு‍ இவர் கெட்டவர் அவர் கெட்டவர் என்று‍ விமர்சிப்பது‍ தவறு. மற்றவர்கள் ஒப்பு கொண்டாலும், இல்லா விட்டாலும், பா.ம.க, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க, புதிய தமிழகம், தற்போது‍ நாம் தமிழர் கட்சிகள் தீவிர ஈழ ஆதரவு கட்சிகள், தங்களது‍ கட்சியின் கொள்கையும் சரி , தனிப்பட்ட முறையில் இக்கட்சிகளின் தலைவர்களின் கொள்கையும் சரி, தனி தமிழ் ஈழம் தான் தீர்வு என்று‍ பகிரங்கமாக அறிவித்து‍ விட்டவர்கள். திமுகாவும் தனி தமிழ் ஈழத்துக்கு‍ பகிரங்க ஆதரவு வழங்கி வந்திருக்கிறது, இருப்பினும், ஈழ தமிழ் மக்கள் மீது‍ தனி ஈழத்தை நாங்கள் தினிக்க விரும்பவில்லை, அதற்கு‍ ஏதேனும் மாற்று‍ இருப்பின், அதை ஈழ தமிழர்கள் விரும்பி ஏற்றால் , அதையும் திமுக வரேவேற்க்கும் என்பது‍ தான் திமுகாவின் நிலையாக இருந்தது. ஏன் என்றால் ஈழத்திலே கூட விடுதலை புலிகளை தவிர தனி ஈழ கோரிக்கையை, மற்ற தமிழ் கட்சிகள், போராளி இயக்கங்கள் ஒரு‍ காலகட்டத்தில் கை விட்டதை ஈழத்தை பற்றி நன்கு‍ தெரிந்தவர்களுக்கு‍ இது‍ தெரியும். ஆனால், 2009 ல் திமுக, காங்கிரேஸ் ன் இலங்கை ஆதரவு போக்கை கண்டும் கானாமல் இருந்தது‍, மிக பெரிய தவறு. அப்படி‍ அவர்கள் காங்கிரேஸ் போக்குக்கு‍ எதிர்ப்பு தெரிவித்து‍ விலகி இருந்தால், இவ்வளவு இழப்பு இருந்திருக்காது, குறைந்தது, ஈழ தமிழர்களுக்கு‍ ஏற்பட்ட இந்த கொடுமைகளுக்கு‍, திமுக மீது‍ பழி வராமாலாவது‍ இருந்திருக்கும். இதனால், தமிழ் இனத்தலைவர் , தற்போது‍ பலருக்கு‍ தமிழ் இனத் துரோகியானார். ஆனால், கம்யூனிஸ்ட் இந்தியாவின் தமிழக தலைவர்கள் மட்டும் தனி ஈழத்துக்கு‍ ஆதரவு. மார்க்ஸிஸ்ட் கட்சி மட்டும் தனி தமிழ் ஈழத்துக்கு‍ ஆதரவு இல்லை (இன்று‍ கூட) தமிழர்களுக்கு‍ அதிகார பகிர்வுக்கு‍ மட்டும் ஆதரவு. மற்ற கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சி, தே முதிக அவ்வபோது‍ தங்கள் அரசியல் நிலைக்கு‍ ஏற்ப ஈழ ஆதரவை மாற்றி கொள்ளும். ஆனால் , ஆதிமுக , எம்.ஜி.யார் இருந்த வரை விடுதலை புலிகளுக்கு‍ தீவிர அதரவு (அப்போது‍ விடுதலை புலிகள் தடை செய்யபடவில்லை) , மற்ற போராளி இயக்கங்களுக்கு‍ திமுக ஆதரவு. ஆனால் ஜெயா தலைமையிலான அதிமுக விடுதலை புலிகளின் தீவிர எதிர்பாளர், ஈழ தமிழ்ர்களின் (2009 வரை) ஆதரவாளர் இல்லை. 2005 க்கு‍ முன்னே அனைத்து‍ கட்சிகளும் ஈழ விவகாரத்தில் ஆதரவு தெரிவித்து‍ இருந்தால், நிலைமை வேறாக இருந்திருக்கும். திமுக ஈழ தமிழர்களுக்கு‍ ஆதரவு வழங்கும் போது, அதிமுக எதிர்த்தது, இதுவே திமுகா விற்கு‍ பயம், ஆட்சி கலைந்து‍ விடுமோ என்று‍ (அப்பபோது‍ காங்கிரேஸின் வழக்கம் , நினைத்தால் மாநில அரசை கலைத்து‍ விடும்,) ஒரு‍ முறை பிஜேபி ஆட்சி வந்து‍ போன பிறகும் , சோனியா தலைமையின் கீழ் காங்கிரேஸ் வந்த பிறகு, இந்த பழக்கம் இல்லாமல் போனது. யாரும், ராமதாஸ், திருமா மற்றும் மற்றவர்களை தூற்றம் தமிழ் நெஞ்சங்களே மறக்க வேண்டாம், தமிழ் போராட்டம் வீழ்ச்சி அடைந்தற்க்கு, விடுதலை புலிகளின் வீழ்ச்சி காரணம், விடுதலை புலிகளின் வீழ்ச்சி, அவ் இயக்கத்தை தடை செய்தது‍ காரணம். அவ்வியக்கம் உலகம் முழுவதும் தடை வரக் காரணம், இந்தியாவில் அதற்கு‍ தடை வந்த காரணம், இந்தியாவில் விடுதலை புலிகளுக்கு‍ தடை வந்த காரணம், அம்மா ஜெயா அவர்களின் தீவிர முயற்சி, இது‍ தான் உண்மை, நடந்தது‍ம் இது‍ தான், இதை யாரும் மறுக்க முடியாது. (தொடர்கிறது)

   
 5. இளமாறன் இந்தியா (தொடர்கிறது)

  திருமா கூறியது‍ போல் (நான் அவரது‍ கட்சியோ, ஆதரவாளரோ அல்ல, நான் தமிழ் உணர்வாளன், ஈழத்தின் தீவிர ஆதரவாளர்) அதிமுக என்றைக்கும் தனி தமிழ் ஈழம் தான் தீ்ர்வு என்று‍ (2009 தேர்தலில் தவிர) தீர்மானம் நிறைவேற்றியது‍ இல்லை, அதை தான் திருமா வலியுறுத்திகிறார். அதிமுகாவும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றினால், காங்கிரேஸ், கம்யூனிஸ்ட் தேமுதிகா வை தவிர தமிழ் நாட்டில் அனைத்து‍ கட்சியும் தனி தமிழ் ஈழத்தை ஆதரிக்கிறது‍ என்று‍ முடிவாகும், பிறகு‍ தேமுதிகவும் (விஜயகாந்துக்கு‍ தெளிந்த பிறகு) தனி ஈழ ஆதரவு தீர்மானம் எடுக்கும். இப்படி‍ ஒரு‍ நிலை வந்தபின் ஓட்டுக்காக காங்கிரேஸின் மனமும் மாறும். ஆனால், ஒன்று‍ திமுக ஈழ தமிழர்களுக்கு‍ ஆதரவு வழங்கும் போது‍, அதிமுக அதை எதிர்த்தது, தற்போது‍ அதிமுக ஈழ ஆதரவு எடுத்தால் , திமுக அதை எதிர்காது, தற்போது‍ உள்ள சூழ்நிலையில் திமுக பகிரங்க ஈழ அதரவு (வழக்குகள் ஒரு‍ நிலைக்கு‍ வரும் வரை) வழங்க முன் வராது.. ஒருவர் கூறியது‍ போல் 18 மே 2009 முன் தமிழ் பற்றை காண்பிக்க வில்லை என்று, ஏன் தமிழகத்தின் அனைத்து‍ கட்சிகளும் தனது‍ தமிழ் பற்றை காண்பிக்கவில்லை, அதிமுக உள்பட. அப்போது‍ அதிமுக அணியில் இருந்த அதிமுக, மதிமுக ஏன் தங்களது‍ சட்ட மன்ற பதவிகளை ராஜீனாமா செய்து‍ எதி்ர்ப்பு காட்ட வில்லை. இவர்கள் எதிர்கட்சி உறுப்பிணர்கள் மட்டும் தான் ,தங்களது‍ பதவிகளை ராஜீனாமா செய்வதால், ஒரு‍ நட்டமும் ஏற்பட்டிருக்காது‍, ஆளுங்கட்சி உறுப்பிணர்களுக்கு‍ ஏற்படுவதை போல (ஆட்சி போய் விடும்). ஆகவே, நடந்தது‍ நடந்ததாகவே இருக்கட்டும், ஜெயா அம்மையார் உண்மையிலேயே தமிழ் ஈழ ஆதரவாளராக மாறி விட்டியிருந்தால், அவரே இந்தியாவில் விடுதலை புலிகளின் மீது‍ உள்ள தடையை நீக்க முயற்சி செய்தால், உலக அளவில் அவ்வியகத்தின் மீது‍ உள்ள தடை நீங்கு‍ம். (தொடர்கிறது)

   
 6. hello illamaran u dont teach about our liberation ok, now 24 years old for me i born in thunnalai, vadamaradshi , jafna, i didnt memtion my name for my individual save, my family & me have been struggling more than 30 years by this war ,now also i came to uk to study ,we know what is liberation because we gave our blood for that, but u foolish guys {thiruma & ramathas } no need to take any action for eelam'peoples freedom , because that is really very shame to our heroes & peoples who died for this ok at first understand this,both this guys playing political event we wont beleive them, we are respecting honorable vaiko iya ,honorable pala nedumaran & semaan annan ok .tamilnadu's peoples will beleive them but we never believe them ok because those ANIMALS DESTROYED OUR NATION WITH DMK ON 18TH OF MAY 2009,WE NEVER FORGIVE THIS ANIMALS AGAIN AGAIN I AM TELLING OK BYE KALAIMARAN

   
 7. hello illamaran u dont teach about our liberation ok, now 24 years old for me i born in thunnalai, vadamaradshi , jaffna,iam heartly's student u no need further detail, i didnt mention my name for my individual save, my family & me have been struggling more than 30 years by this war ,now also i came to uk to study ,we know what is liberation because we gave our blood for that, but u foolish guys {thiruma & ramathas } no need to take any action for eelam'peoples freedom , because that is really very shame to our heroes & peoples who died for this ok at first understand this,both this guys playing political event we wont beleive them, we are respecting honorable vaiko iya ,honorable pala nedumaran & semaan annan ok .tamilnadu's peoples will beleive them but we never believe them ok because those ANIMALS DESTROYED OUR NATION WITH DMK & CONGRESS ON 18TH OF MAY 2009,WE NEVER FORGIVE THIS ANIMALS AGAIN AGAIN I AM TELLING OK BYE KALAIMARAN

   

Post a Comment

Followers