கே.பி. என்றால் யார்? கே.பி. சுந்தராம்பாளா? கலைஞர் அப்பாவித்தனமாகக் கேள்விகேட்டு மாட்டிக்கொண்டு இருக்கிறார். ஈழ விடுதலைப் போராட்ட காலத்தில் முதல்பாதிவரை ஆயுதங்களைக் கொள்வனவுசெய்து விடுதலைப் புலிகளுக்கு உதவியதும் பின்னர் அவர்களையே காட்டிக்கொடுத்து ஈழ விடுதலைக்கு துரோகம் இழைத்த கே.பியை கலைஞர் தெரியாது என்று சொல்லியுள்ளார். சரி அதுமட்டும் சொன்னால் போதாது என்று யார் அது கே.பி சுந்தராம்பாளா என்று வேறு கேட்டிருக்கிறார் என்றால் பாருங்களேன்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பற்றிக் குறிப்பிடும்போது, அவர் ராஜிவ்காந்தி மீது வைத்திருந்த வெறுப்புக்கு, தி.மு.க.வும் மறைமுகமாக ஒரு காரணம் என்று கே.பத்மநாதன் (கே.பி) சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இதுபற்றி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தனது கருத்தைக் கூறியிருந்தார். இந்த நிலையில், கே.பி.யின் கூற்றுப்பற்றி முன்னாள் முதல்வர் கலைஞரிடம் நிருபர் ஒருவர் கருத்துக் கேட்டபோது, கே.பி. என்பவர் யாரென்றே தனக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ளார். கே.பி.யா? அவரின் பெயரை நான் கேள்விப்பட்டதேயில்லை. ராஜிவ்காந்தி கொலை பற்றி அவர் என்ன சொன்னார் என்பதும் எனக்குத் தெரியாது, என்று அப்பாவியாகக் கேட்டிருக்கிறார் கலைஞர் கருணாநிதி.
போதாக்குறைக்கு அருகில் இருந்த தனது பிரத்தியேகச் செயலாளரிடம் இதுபற்றி முணுமுணுத்துள்ளார். இவர் கேட்டது கே.பி என்றால் கே.பி சுந்தராம்பாளா என்றா என்று அரசல் புரசலாக கதைகள் தற்போது வெளியாகியுள்ளது. இவர் எல்லாம் தமிழ் நாடு முதல்வராக இருந்து.... வேணாம் சொல்லவே தேவையில்லை!
அவர் நக்கலாக சொல்லியிருப்பார்..ஸ்பெக்ட்ரம் வழக்கில் நீரா ராடியா கனிமொழி பற்றி கேட்டபோது இப்படித்தான் நக்கலாக,இரண்டு பெண்மணிகள் பேசிக்கொள்கிறார்கள் இதில் என்ன தவறு என்றார்.இதற்கெல்லாம் சேர்த்துதான் தமிழ் மக்கள் அவரை மொத்தமாக நக்கல் செய்துவிட்டார்களே
avarukku vayathakivittathu athuthaan k.p maranthittaar..............
முதுகெலும்பு இல்லாத தமிழன், தன் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்று சொன்னால்,
எல்லோரும் நம்பிவிடுவார்கள் என்று நம்பும் அடிமுட்டாள் .
*** உ யிருடன் அசையும் பிணம் - உலகத்தின் எட்டாவது அதிசயம்.
ponvannan super comment..இதை பர்த்தாது சில நாய்களுக்காக உண்மை அறியாமல் கோஷமிடும் மனிதர்கள் திருந்தட்டும்.....????