Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லிபிய முன்னாள் தலைவர் கேணல் கடாபி கொல்லப்பட்டுள்ளார். இவருடைய உடனடி மரணத்திற்கான துப்பாக்கிச் சூடு தலையில் விழுந்துள்ளது. இரண்டு கால்களிலும் ஏற்பட்ட படுகாயத்தோடு இருந்த இவரை ஓர் ஆம்புலன்ஸ் வண்டியில் வைத்து மருத்துவதாதிகள் சிகிச்சை செய்துள்ளனர்.

சிற்றா நகரத்தில் இறுதிப்போர் நடைபெற்றபோது மோதலில் மரணித்தாக முதல்கட்ட செய்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே நேட்டோவின் தாக்குதல்களால் இவருடைய கால்களில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 69 வயதுடைய கடாபி லிபியாவை 42 வருடங்கள் ஆட்சி செய்துள்ளார். இவருடைய மரணம் இந்தப் போரில் முக்கிய முற்றுப்புள்ளியாகியுள்ளது.

நேட்டோவும் போராளிகள் தரப்பும் இவருடைய மரணத்தை சொற்ப நேரத்தில் உத்தியோகபூர்வமாக ஊர்ஜிதம் செய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதேவேளை இவர் ஒரு வாகனத் தொடரணியில் தப்பிப் போகும்போது நேட்டோ படைகள் குண்டு வீசியதால் கால்களில் காயம் ஏற்பட்டதாகவும், இவர் சிறைப்பிடிக்கப்பட்டதாகவும், பின்னர் ஏற்பட்ட துப்பாக்கி மோதலில் மரணமடைந்ததாகவும் பலதரப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளன.

ராய்டர் செய்தித்தாபனம் இவர் சிற்றா நகரில் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளது. மேலும் ஒரு செய்தி சுட வேண்டாம் சுட வேண்டாம் என்று கடாபி அலற அலற சுடப்பட்டதாக தெரிவிக்கிறது. இன்னொரு செய்தியின்படி நூற்றுக்கணக்கான வாகனத் தொடரணியுடன் இவர் தப்பியபோது குண்டு வீச்சில் காயமடைந்து மரணமடைந்தாகக் கூறப்படுகிறது. இவருடைய உடலில் பல காயங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. போராளிப் படைகளின் தலைவர் முஸ்தாபா அப்டில் ஜலீல் இன்று நாட்டு மக்களுக்கு இது தொடர்பாக உரையாற்றுவார்.

கடாபியின் சடலம் புகைப்படம் பிரிட்டன் ரொனேடோ விமானங்களே குண்டு வீசின

கடாபி ஒரு வாகனத் தொடரணியில் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இரண்டு நேட்டோ விமானங்கள் அந்த வாகனத் தொடரணி மீது தாக்குதலை நடாத்தின. பிரிட்டனுக்கு சொந்தமான இரண்டு ரொனாடோ விமானங்கள் இந்தக் குண்டுவீச்சை நடாத்தியுள்ளன. ஆனால் கடாபி இதில் செல்கிறதாரா என்ற தகவல் இல்லாமலே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. ஆனால் குண்டு வீச்சுக்கு அப்பால் ஏராளம் துப்பாக்கி வேட்டுக்களும் இவருடைய உடலின்மீது தீர்க்கப்பட்டுள்ளன. நேட்டோ படைகளின் தாக்குதல் இடம்பெற்றதை நேட்டோ படைப்பிரிவு உறுதி செய்திருக்கிறது. தொடர்கிறது செய்தி..

அதேவேளை கீழே தரப்படும் சீமெந்து குழாய்க்குள் இருந்தே கடாபியின் சடலம் கைப்பற்றப்பட்டதாக பிந்தய செய்திகள் தெரிவிக்கின்றன.










0 Responses to சுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை! (படங்கள், காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.