Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுவிஸ் வாழ் குடியுரிமை பெற்ற தமிழர்கள் தமது வாக்குகளை திரு. லதன் சுந்தரலிங்கம் அவர்களுக்கு இருதடவை வாக்களித்து எமது தமிழனின் வெற்றியினை உறுதிசெய்யும் இந்த வரலாற்றுக்கடமைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்பாகக்கேட்டுக்கொள்கின்றோம்.

மதிப்பிற்குரிய சுவிஸ் வாழ் தமிழர்களே!

மொழி இன உணர்வுடன் ஒன்றுபட்ட தேசிய இனமாக தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். சொந்த நாட்டில் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனமாக உயிர் அச்சுறுத்தல்களுடன் வாழமுடியாத சூழ்நிலைகளில் புலம்பெயர்ந்து வந்த தமிழர்களை ஆதரித்து அரவணைத்து வாழ்வதற்கான வசதிகளையும் வழிமுறைகளையும் புலம்பெயர் நாட்டு அரசாங்கங்கள் தமிழர்களிற்கு ஏற்படுத்தித் தந்துள்ளார்கள்.

பல்லின மக்கள் வாழும் உலகநாடுகளில் தமிழர்கள் தனித்துவமான இனமாக மதிக்கப்படுகிறார்கள். தமிழ்மக்களால் முன்னெடுக்கப்பட்ட உரிமைப்போராட்டத்தினை பல நாடுகள் ஆதரித்துள்ளார்கள். தமிழர்கள் சகல உரிமையும் கொண்ட தேசிய இனமாக சொந்த நாட்டில் வாழ்வதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்படவேன்டுமென உலக நாட்டுத்தலைவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

அண்மைக் காலமாக பொறுப்பு வாய்ந்த ஊடகங்களும் மனிதநேய அமைப்புக்களும் தமிழின அழிப்பினையும் தமிழர் துயரங்களினையும் உலக நாட்டுமக்களின் கவனத்திற்கு எடுத்துவந்துள்ளார்கள். பல நாட்டுப்பாராளுமன்றங்களில் தமிழர்களின் அவலங்கள் திரையிட்டுக்காட்டப்பட்டுள்ளன. எந்த ஒரு நாட்டு மக்களும் அனுபவித்திராத துன்பத்தினை தமிழர்கள் அனுபவித்திருப்பதை உலக நாடுகள் உணர்ந்திருக்கிறார்கள்.

இவ்வாறு அண்மைக் காலமாக தமிழர்கள் சார்பாக மாறி வரும் உலக அரசியல் ஒழுங்கினை தமிழர்களிற்கு சாதகமாக மாற்றிக் கொள்ளவும் தமிழ் இனத்தினை அடையாளப்படுத்தவும் உலக நாட்டுப்பாராளுமன்றங்களில் அதிகாரமளிக்கப்பட்ட எம்மவர்கள் தேவையென்பது அத்தியாவசியமாகின்றது.

அதற்கமைவாக கனடா நாட்டிலே அண்மையில் இடம்பெற்ற தேர்தல் மூலம் செல்வி. ராதிகா சிற்சபேசன் அவர்களை கனடா வாழ் தமிழர்கள் வெற்றி பெறச் செய்து தமிழர் பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்துள்ளார்கள்.

அதனைத் தொடர்ந்து தற்போது சுவிஸ் நாட்டில் இடம் பெறும் பாராளுமன்றத் தேர்தலில் லுர்ட்சேர்ன் மாநிலத்தில் சோசலிசக்கட்சியில் (ளுP) தமிழரின் சார்பாக திரு. லதன் சுந்தரலிங்கம் அவர்கள் போட்டியிடுகின்றார்கள். 80 இலட்சம் மக்கள் வாழும் சுவிஸ் நாட்டிலிருந்து 246 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்யும் இத் தேர்தலில்; மொழிப்பற்றும் தேசப்பற்றுமிக்க தனித் தமிழனாக திரு லதன் அவர்கள் போட்டியிடுகின்றார்கள். தமிழர்களிற்கு கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய சந்தர்ப்பமாக இதனைப்பயன்படுத்தி திரு. லதன் அவர்களை வெற்றிபெறச்செய்து தமிழர்சார்பாக பாராளுமன்றம் அனுப்பிவைக்குமாறு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ்தேசியமே இன்றைய தேவை. அதை அரசியல் நிலைப்பாடாகக் கொண்டு தாயகத்தில் வாழும் தமிழர்களிற்காகவும், சுவிஸ் நாட்டில் வாழும் தமிழர் சார்ந்த பிரச்சனைகளையும், தாயகத்தில் எமது மக்கள் பட்ட இன்னல்களையும் படும் துன்பங்களையும் தமிழர் சார்பாக அதிகாரமளிக்கப்பட்ட அரசியல் தளத்தில் நின்று சுவிஸ் அரசுக்கும் சர்வதேசத்திற்கும் உரத்துக் கூற இச்சந்தர்ப்பத்தினை நாம் இறுகப் பற்றிக்கொள்ளவேன்டும்.

குறிப்பாக லுட்சேர்ன் வாழ் சுவிஸ் குடியுரிமைபெற்ற தமிழர்கள் தமது வாக்குகளை திரு. லதன் சுந்தரலிங்கம் அவர்களுக்கு இருதடவை வாக்கு அளிப்பதுடன் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களும் லுட்சேர்ன் மாநிலத்தில் வாழும் தமது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உடன் பணிபுரிபவர்களுக்கும் இதனைத் தெரிவித்து அவர்களது ஆதரவினையும் பெற்று எமது தமிழனின் வெற்றியினை உறுதிசெய்யும் இந்த வரலாற்றுக்கடமைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்பாகக்கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
20.10.2011

திரு. லதன் சுந்தரலிங்கம் அவர்களின் தொடர்புகட்கு:
கைத்தொலைபேசி: 0787445960
மின்னஞ்சல்: lathan74@gmail.com
இணையமுகவரி: www.lathan.ch

0 Responses to சுவிஸ் பாராளுமன்றத்திற்கு முதல்தடவையாகப் போட்டியிடும் ஈழத் தமிழ் மகனை ஆதரித்து வாக்களியுங்கள்

Post a Comment

Followers