Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவில் உள்ள கொலம்பிய நீதிமன்றில் மகிந்தருக்கு எதிராக நஷ்ட ஈடு வழக்கு ஒன்று 3 தமிழர்களால் தாக்கல் செய்யப்பட்டது யாவரும் அறிந்ததே. அதற்கான அழைப்பணை மகிந்தருக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

சுமார் 30 மில்லியன் நஷ்ட ஈடு கோரும் இவ்வழக்கில் மகிந்தர் தனது சார்பாக வாதிட ஒரு வக்கீலை நியமித்தார். அவரது வக்கீல் மிச்செல் பேர்கர் அவர்கள் மகிந்த மீது வழக்குத் தொடரமுடியாது எனவும் ஒரு நாட்டின் அரச அதிபர் என்ற வகையில் அமெரிக்காவில் அவருக்கு சிறப்பு தகுதிகள் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து நீதிபதி கோடலே அவர்கள் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அபிப்பிராயத்தை நாடினார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் மகிந்தருக்கு சிறப்புத் தகுதிகள் இருப்பதாக பரிந்துரைத்தது. இதனை அடுத்து அவர் மேல் வழக்கை தொடரமுடியாது என்ற நிலை தோன்றியது.

அமெரிக்க அரசானது மகிந்தருக்கு சிறப்புத் தகுதிகள் இருப்பதாகக் கருதினால் அதனை அவர்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவேண்டும் என வழக்குத் தொடுனர்களான தமிழர்கள் அமெரிக்க அரசைக் கோரியுள்ளனர். தற்போது இருக்கும் சூழ் நிலையில் அமெரிக்க அரசானது ஒரு நழுவல் போக்கைக் கடைப்பிடித்துவருகிறது எனலாம். அதாவது இவ்வழக்கில் தாம் நேரடியாகச் சம்பந்தப்படாமல் ராஜாங்கத் திணைக்களம் ஊடாக காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறது அமெரிக்க அரசு. பட்டும் படமாலும் சில பரிந்துரைகளை மேற்கொண்டு விட்டு தாம் தப்பிக்கும் நிலையில் உள்ள அமெரிக்க அரசின் உண்மையான நிலையை தமக்கு தெளிவுபடுத்துமாறு தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்தோடு நின்றுவிடாது அமெரிக்க அரசின் நிலைப்பாடு தொடர்பாக தெளிவாக ஒரு அறிக்கையை அவர்கள் விடவேண்டும் எனவும் மற்றும் மகிந்தர் தொடர்பாக அமெரிக்க அரசு கொண்டுள்ள நிலைப்பாட்டை தாம் எதிர்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வழக்குத் தொடுனரான தமிழர்கள் சார்பாக வாதிடும் திரு புரூஸ் பெஃயின் அவர்கள் இதுதொடர்பாக அமெரிக்க அரசிடம் விளக்கம் கோரியுள்ளார். இதற்கான பதிலை அமெரிக்க அரசு வரும் 3ம் திகதிக்குள் தமக்கு வழங்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது.

இது உத்தியோகபூர்வமாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனவே அமெரிக்க அரசானது தகுந்த பதிலை அனுப்பவேண்டிய கடைப்பாட்டில் உள்ளது. வெகு விரைவில் பல உண்மைகள் வெளியாகும் நிலை தோன்றியுள்ளது.

அதிர்வு.

0 Responses to மகிந்தருக்கு அமெரிக்கா சலுகை - எதிர்த்து வாதிட இருக்கும் தமிழர்கள்!

Post a Comment

Followers