Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கள்ளக்காதலன் வெளிநாட்டு வேலைக்கு செல்வதை எதிர்த்து காதலி தீக்குளித்தார். இதில் துக்கமடைந்த கள்ளக் காதலனும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 28), கார் சாரதி. இவரது வீடு எதிரே சித்தன் என்கிற ரஞ்சித்குமார் வசிக்கிறார். இவர் மனைவி மலர் (27). மலருக்கும், சித்தனுக்கும் திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர்.

சிவக்குமாரும், மலரும் இலங்கை அகதிகள் என்பதாலும், ஒரே குடியிருப்பில் வசிப்பதாலும் பழக்கம் ஏற்பட்டது. சிவக்குமார் திருமணம் ஆகாதவர். இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஒரு நாள் சிவக்குமாரும், மலரும் வீட்டில் தனியாக இருப்பதை கண்டு சித்தன் அதிர்ச்சியடைந்தார். உடனே மலரை வீட்டை விட்டு விரட்டி அடித்தார்.
இதையடுத்து மலரை, சிவக்குமார் தனியாக அழைத்து சென்று விமானநிலையம் அருகே ஜே.ஜே.நகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்க வைத்தார். இருவரும் கணவன், மனைவி போல் சில மாதங்களாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிவக்குமாருக்கு லண்டனில் வேலைக்கு செல்ல விசா கிடைத்தது. இதனால் அவர் தான் வெளிநாடு செல்ல இருப்பதாக காதலி மலரிடம் கூறினார்.

கள்ளக்காதலனை நம்பி வந்த நிலையில் அவர் திடீரென வெளிநாடு செல்ல இருப்பதாக கூறியதை கேட்டு மலர் அதிர்ச்சியடைந்தார். கடந்த 13-ந் திகதி வீட்டில் இருந்த போது வெளிநாட்டு வேலைக்கு செல்வதை மீண்டும் மலரிடம் சிவக்குமார் கூறியபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்தது. இதில் நாம் 2 பேரும் சேர்ந்து வாழ முடியாத வாழ்க்கை எதற்கு என்று மனவேதனை அடைந்த மலர், மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை சிவக்குமார் உடனடியாக காப்பாற்றி சிகிச்சைக்காக திருச்சி அரசு வைத்தியசாலையில் சேர்த்தார். தீக்காயம் மலர் உடல் முழுவதும் பரவி இருந்ததால் அவர் பிழைப்பது கஷ்டம் என்ற நிலைமை ஏற்பட்டது. இதனால் `காதலி இறந்துவிடுவாள் நாம் வாழ்ந்து என்ன பயன் நாமும் தற்கொலை செய்துக்கொள்வோம் என சிவக்குமார் முடிவு செய்தார்.

கடந்த 14-ந் திகதி சிவக்குமார் தனது காரில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் மீட்டு உள்ளே சேர்த்தனர். காதலி மலருக்கும், கள்ளக்காதலன் சிவக்குமாருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று காலை 6.30 மணி அளவில் மலர் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையில் மதியம் 1.30 மணி அளவில் சிவக்குமாரும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

அதிர்வு.

இதையும் கொஞ்சம் பாருங்கோ...

"சொல்வதெல்லாம் உண்மை"

0 Responses to ஒரு அபூர்வ கள்ளக்காதல் கதை: இலங்கை அகதிகள்!

Post a Comment

Followers