தமிழக சட்டமன்றத்தில் இருந்து 01.02.2012 அன்று வெளியேற்றப்பட்ட தேமுதிக கட்சியினர் 02.02.2012 அன்று சபைக்கு வந்தனர். முதல்நாள் தேமுதிக உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து அதிருப்தி வெளியிட்ட முதல்வர் மற்றும் சபாநாயகர், இந்த விவகாரத்தை உரிமைக்குழுவுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் 02.02.2012 காலையில் உரிமைக்குழு எடுத்த முடிவினை சபாநாயகர் மன்றத்தில் வாசித்தார். இந்த முடிவின்படி, இந்தக் கூட்டத்தொடர் மற்றும் அடுத்து வரும் கூட்டத்தொடர் சேர்த்து மொத்தம் 10 நாட்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என்றும், இனிமேல் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டோம் என்ற உறுதிமொழியுடன் கூடிய நிபந்தனையுடன் மற்ற தேமுதிக உறுப்பினர்கள் சபைக்கு அனுமதிக்கப்படுவர் என்றும் சபாநாயகர் கூறினார்.
இந்நிலையில், உரிமைக்குழுவின் கருத்து மீது பேச அனுமதிக்கும்படி திமுக உறுப்பினர்கள் கோரினர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால், திமுக, இ.கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட், தேமுதிக கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.




0 Responses to சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் சஸ்பெண்ட்