Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக சட்டப்பேரவையில் இந்தக் கூட்டத்தொடரோடு, அடுத்தக் கூட்டத்தொடரையும் சேர்த்து 10 நாட்கள் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தை இடைநீக்கம் செய்வதாக சபாநாயகர் ஜெயக்குமார் 02.02.2012 அறிவித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் அனைவரும், திமுக சட்டசபை தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்,

எப்போதுமே உரிமைக்குழுவில் எடுக்கப்பட்டிருக்கிற முடிவு, சட்டமன்றத்திலே வைக்கப்படுகின்றபொழுது, சட்டமன்றத்தில் இருக்கக் கூடிய கட்சித் தலைவர்களிடத்திலே கருத்துக்களை கேட்டு, அதற்குப் பிறகுதான் முடிவு எடுக்க வேண்டும் என்பது விதிமுறைகளில் இருக்கிறது.

ஆனால், அந்த விதிமுறைகளையும் காற்றிலே பறக்கவிட்டுவிட்டு, தான்தோன்றித்தனமாக ஒரு சர்வாதிகார நிலையில் இருந்து இன்றைக்கு சபாநாயகர் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார். இதுகுறித்து எதிர் வரிசையில் அமர்ந்திருக்கக் கூடிய கட்சித் தலைவர்களிடம் எந்த கருத்தையும், சொல்லக்கூடாது என்று சர்வாதிகாரமாக அதையும் தடுத்திருக்கிறார்கள். இதனை கண்டிக்கிற வகையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்றார்.

0 Responses to விஜயகாந்த் 10 நாள் சஸ்பெண்ட்: சர்வாதிகார தீர்ப்பு மு.க.ஸ்டாலின்

Post a Comment



அதிகமாக வாசிக்கபட்டவை

Recent Post



தொடர்புக்கு: vannionline@gmail.com