இந்தக் கூட்டத்தொடரோடு, அடுத்தக் கூட்டத்தொடரையும் சேர்த்து 10 நாட்கள் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தை இடைநீக்கம் செய்வதாக சபாநாயகர் ஜெயக்குமார் 02.02.2012 அறிவித்தார்.
இதையடுத்து சென்னையில் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
அவுங்க (ஜெ) சொல்றாங்க தகுதியில்லை என்று. தகுதியில்லாத கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைத்ததற்கு வெட்கப்படுகிறோம். 2004ல் ஒரு நாடாளுமன்ற சீட் கூட வரவிலலை. இவங்க கூட கூட்டணி வைச்சதற்கு நாங்கள் வெட்கப்படுகிறோம். இவங்க வந்து தேடுனாங்க. எப்படி எப்படி கெஞ்சினாங்க. மறந்துவிட்டு பேசுறாங்க. நன்றி கெட்டவங்க. மறந்துவிட்டு பேசுறாங்க. எப்படி கெஞ்சினாங்க என்பது எனக்கு தெரியும். பேசனும் நினைத்தால் நிறைய பேசுவேன். பேசக்கூடாது என்பதற்காக அடக்கிபோகிறேன். இன்னைக்கு மந்திரியா, எம்எல்ஏவாக இருக்கிறவங்க எத்தனைபேர் கெஞ்சினாங்க. சொல்லத்தெரியாதா என்றார்.
தகுதியில்லாத கட்சியோடு கூட்டணி வைத்ததற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம்: விஜயகாந்த்
பதிந்தவர்:
தம்பியன்
02 February 2012




0 Responses to தகுதியில்லாத கட்சியோடு கூட்டணி வைத்ததற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம்: விஜயகாந்த்