சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதாவிற்கும், எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்திற்கும் இடையே நடைபெற்ற காரசாரமான விவாதத்தினால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் கலைஞர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘’சட்டசபையில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசுவதற்கு போதிய நேரம் வழங்கப்படுவதில்லை.
எதிர்க்கட்சிகளை கையாள்வதில், அ.தி.மு.க. ஏதேச்சதிகார போக்கை முன்பு கையாண்டு வந்தது. தற்போதும், அதையே அவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.
விஜயகாந்த் மீது ஜெ பாய்ச்சல்! – ஜெ கேள்வி – விஜயகாந்த் காட்டம் EXCLUSIVE VIDEO
கடந்த சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.வுடன் கூட்டணி சேர்ந்ததற்கு அ.தி.மு.க.சார்பில் கூறப்படும் காரணத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க, இடதுசாரி கட்சிகள் உள்ளிட் டவைகள் இடம்பெற்றிருந்தன. அந்த தேர்தலில், தி.மு.க.தோல்வியடையவில்லை. 3வது இடத்திலேயே உள்ளோம்’’ என்று கூறினார்.
எதிர்க்கட்சிகளை கையாள்வதில் அ.தி.மு.க. அரசு சர்வாதிகாரமாக செயல்படுகிறது: கலைஞர்
பதிந்தவர்:
தம்பியன்
01 February 2012




0 Responses to எதிர்க்கட்சிகளை கையாள்வதில் அ.தி.மு.க. அரசு சர்வாதிகாரமாக செயல்படுகிறது: கலைஞர்