Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவருக்கு ஜக்கிய நாடுகள் சபையினால் “V Awards ” விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினம் அறிமுகப்படுத்தப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கையில் அமைதியாக சேவையாற்றும் தன்னார்வத் தொண்டர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு "V Awards" விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இவ் விருது வழங்கும் வைபவமானது இரத்மலானையிலுள்ள Stain Studioவில் கடந்த 21ம் திகதி இடம்பெற்றுள்ளது.

அத்துடன் போட்டியாளர்களினது தனித்திறமைகள் அவர்கள் சமூகத்திற்கு செய்யும் அர்ப்பணிப்புகள் அவர்களால் நாட்டுக்கு கிடைக்கும் நன்மைகள் என்பன அனைத்தும் தனித்தனியாகப் பார்க்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு ஜேர்மனியில் இருந்து Flavia Pansieri ( EXECUTIVE COORDINATOR UNITED NATIONS VOLUNTEERS ) வருகை தந்திருந்தார்.

குறித்த "V Aeards" விருதிற்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த எஸ்.தேவானந்தன் என்ற தமிழ் வைத்தியர் தெரிவு செய்யப்பட்டார். இவர் Osilmo autism centre எனும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றார்.

இலங்கையில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இவ் விருதினைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்வைத்தியருக்கு ஐ.நா சபை விருது..!

Post a Comment



அதிகமாக வாசிக்கபட்டவை

Recent Post



தொடர்புக்கு: vannionline@gmail.com