Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எத்தகைய எதிர்ப்பு வந்தாலும், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா செல்வது உறுதி என அவரது செய்தி தொடர்பாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்துளார்.

மத்திய பிரதேசத்தின் சாஞ்சி அருகே பௌத்த மத நிகழ்வொன்றில் அடிக்கல் நாட்டுவிழாவுக்காக எதிர்வரும் செப்.21ம் திகதி இலங்கை ஜனாதிபதி இந்தியா வரவுள்ளார். அவருடன் பூட்டான் அதிபரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். எனினும் இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், உடனடியாக ராஜபக்சவுக்கான அழைப்பை மத்திய அரசு வாபஸ் பெறவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி ராஜபக்ச சாஞ்சி வந்தால் அவருக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் என மதிமுக எச்சரித்துள்ளது.

இந்நிலையில் ஊடக கேள்வி ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பந்துல ஜெயசேகர இவ்வாறு கூறியுள்ளார். ராஜபக்சவின் இந்திய பயண திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. எந்த எதிர்ப்பு வந்தாலும் அவர் இந்தியா செல்வது உறுதி என தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி விஜயம் குறித்து எமக்கு இதுவரை அறிவிக்கபப்டவில்லை : மத்திய பிரதேச காவல்துறை

இதேவேளை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இந்திய விஜயம் குறித்து தமக்கு எதுவும் உத்தியோகபூர்வமாக இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என மத்திய பிரதேச காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மத்திய பிரதேச காவல்துறை மா அதிபர் எஸ்.லே.பாண்டி தெரிவிக்கையில், உத்தியோகபூர்வ அறிவிப்பின் பின்னரே இலங்கை ஜனாதிபதியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் இலங்கை யாத்திரிகர்கள் தாக்கப்பட்டது தொடர்பில் கொழும்பில் தமிழ் வர்த்தக சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்

இதேவேளை தமிழ்நாட்டில் வைத்து இலங்கை யாத்திரிகர்கள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து இலங்கை தமிழ் வர்த்தக சமூகத்தினரால் இன்று கடையடைப்பு மற்றும் ஆர்ப்பட்ட பேரணி நடத்தப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகால உறவுகள் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான சம்பவங்கள், இலங்கையில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மக்கள் உட்பட சகல தமிழ் மக்களுக்கும் ஒரு அவப்பெயரை உருவாக்கும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு பின்புலத்தில் இருப்பது தமிழகத்தில் எஞ்சியிருக்கும் வி.புலிகள் : கெஹலிய ரம்புக்வெல

இதேவேளை இத்தாக்குதல்களுக்கு பின்புலத்தில் தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள விடுதலை புலிகள் செயற்பட்டிருக்க கூடும் என ஊடக துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இனி இலங்கை பிரஜைகளுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே பயண எச்சரிக்கையை வாபஸ் பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தபப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் ராஜபக்ச இந்தியா செல்வது உறுதி: பந்துல ஜெயசேகர

Post a Comment

Followers

5ம் ஆண்டு நினைவு நாள் 20-05-2013

அதிகமாக வாசிக்கபட்டவை

நாடகங்கள் || நிலாதமிழ்



தொடர்புக்கு: vannionline@gmail.com