Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிங்களப் பேரினவாதமானது தனது திட்டமிட்ட தமிழ் இனவழிப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீவிரமாக நடாத்த ஆரம்பித்துவிட்டது. அப்பாவி பல்கலைக்கழக மாணவர்களையும் தமிழ் இளைஞர்களையும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகப் பொய் கூறிச் சிறைப்பிடித்து வருகின்றது. புனர்வாழ்வு கொடுத்து விடுதலை செய்ததாகக் கூறிவிட்டு மீண்டும் அவர்களைக் கடத்துவதும் கைது செய்வதுமாக தனது இனவழிப்பை திரை மறைவில் நடாத்தி வருகின்றது.

காணாமல் போதல் கைது செய்தல் சித்திரவதை செய்து படுகொலை செய்தல் என்பவற்றிலிருந்து தம் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கடல் கடந்து ஏதிலிகாக தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த தமிழர்களையும் இன்று இலங்கை அரசு தமது புலனாய்வுத் துறையை ஆதாரம் காட்டி தமிழக கியூ பிரிவினரிடன் தவறான தகவல்களைக் கொடுப்பதன் மூலம் கைது செய்யத் தூண்டி வருகின்றது. இதன் விளைவாகவே தமிழகத்திலும் புகலிடம் தேடிச்சென்ற தமிழர்கள் கைது செய்யப்படுகின்றார்கள்.
உலகெங்கும் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் உரிமை மறுப்புகளையும் ஜனநாயகரீதியில் நியாயமான கோரிக்கைகளாக உலகுக்கு எடுத்துச் சொல்லி வரும் வேளையில் இக்கைதுகள் இப்போது நடப்பதன் அவசியம் என்ன? ஒட்டுமொத்த தமிழினத்தையும் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் அழித்தொழிக்கும் இலங்கையின் பேரினவாதத்தின் திட்டங்கள் பயங்கரவாதம் என்ற பெயர் சூட்டலுடன் தொடர்ந்தும் மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதை இவ்வுலகம் புரிந்து கொள்ளவேண்டும்.
தமிழகத்தை தம் தாய்வீடாக என்றும் எண்ணிவரும்; ஈழத்தமிழ் மக்கள் தமக்கு ஆதரவு தேடி அங்கு சென்றிருக்கும்; வேளையில் அவர்களை இவ்வாறு கைது செய்து சிறைகளில் அடைப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியிருக்கின்றது.
ஈழத்தமிழர்கள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்புபவர்கள். கடும் உழைப்பினாலும் தன்னம்பிக்கையினாலும் வாழ்வில் முன்னேறத் துடிப்பவர்கள். திரைமறைவில் ஒரு சிறு தீவுக்குள் திட்டமிட்டவகையில் இலங்கையின் பேரினவாத அரசுகளால் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் வன்முறைகளையும் தமிழின அழிப்பு நடவடிக்கைகளையும் சர்வதேசத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்வதே ஈழத்தமிழர்களின்;

நோக்கமாக அன்றும் இருந்தது இன்றும் இருக்கின்றது. இதனைப் புரிந்து கொண்டு தமிழகத்திலும் உலகெங்கிலும் ஈழத்தமிழர்களுக்காக ஆதரவுக்குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து வரும் வேளையில் தமிழ் மக்களின் இன்றய நிலையைப் புரிந்து கொண்டு தமிழர்களை மேலும் புண்படுத்தும் வகையிலான இதுபோன்ற கைதுகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் தமிழக அரசையும் தமிழகத்தின் கியூ பிரிவு காவல் துறையினரையும் உலகத்தமிழினம் வேண்டி நிற்கின்றது.

இதுவரை கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடும் எமது உறவுகளையும் விடுவித்து அவர்களின் எதிர்காலம் அமைதியான முறையில் அமைவதற்கு ஆதரவு அளிக்;குமாறும் தமிழக அரசை உலகத்;தமிழினம் எதிர்பார்த்து நிற்கின்றது
- உலகத்தமிழர் பாதுகாப்பு இயக்கம்.

0 Responses to திட்டமிட்ட தமிழினவழிப்பின் தொடர்ச்சியாக நடப்பவையே இன்றைய கைதுகள்!

Post a Comment

Followers