Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா சபை இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஆதாரபூர்வமான சாட்சியங்களுடன், பிரித்தானியாவின் சேனல் 4 தொலைக்காட்சி இறுதியுத்தம் பற்றிய புதிய ஆவணத்திரைப்படம் ஒன்றை வெளியிடவுள்ளது.

சேனல் 4 தொலைக்காட்சியினால் இலங்கை குறித்து வெளியிடப்படும் மூன்றாவது காணொளிப்படம் இதுவாகும். ஏற்கனவே 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' எனும் பெயரில் முதலாவது காணொலியும், 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' எனும் பெயரில் இரண்டாவது காணொலியும் சேனல் 4 தொலைக்காட்சி தயாரித்து வெளியிட்டிருந்தது.

தற்போது No Fire Zone - The Killing Fields of Sri Lanka (போர் தவிப்பு வலயமும் - இலங்கையின் கொலைக்களமும்) எனும் பெயரில் இக்காணொலி வெளியிடவுள்ளது. இதன் முன்னோட்டத்தை ஏற்கனவே இணையத்தில் வெளியிட்டுள்ளது.

இன்னமும் சில வாரங்களில் ஐ.நா மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மான விவாதத்திற்கு முன்னதாக இக்காணொலி வெளியிடப்படும் என நம்பப்படுகிறது.

இப்புதிய ஆவணப்படத்திலும், இலங்கை அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள், மனிதப்படுகொலைகள் என்பவை குறித்து விரிவாக ஆராயப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


0 Responses to இலங்கையின் யுத்த அவலங்களை அவிழ்த்துவிடும் மற்றுமொரு காணொளி படம் - சேனல் 4 வெளியீடு

Post a Comment

Followers