Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்.. எவ்வளவு இருந்தாலும் இவ்வளவுதான்..

தி.மு.கவின் இன்னொரு மணியம்மை குஸ்பு என்று குமுதம் ரிப்போட்டரில் வெளியான செய்தி தமிழகத்தை வரும் நாட்களில் உலுக்கி எடுக்கப்போகிறது..

மு.கருணாநிதி சொல்வதைப்போல இது அருவருக்கத்தக்க செய்திதான் இருப்பினும் தி.மு.கவின் வரலாற்றில் இல்லாத புதிய செய்தியில்லை.

இந்தச் செய்தி இரண்டு சம்பவங்களை உடனடியாக நினைவுக்குக் கொண்டுவருகிறது.. ஒன்று இவ்வளவு தான் உலகம் இவ்வளவுதான் எவ்வளவு இருந்தாலும் இவ்வளவுதான் என்ற சின்னஞ்சிறு உலகம் படத்தில் வரும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்.

அடுத்தது எம்.ஆர்.ராதா பேசிய மலேசிய மேடைப்பேச்சின் வரிகள்.. ” தமிழ்நாட்டை ஆண்ட அரசன் எல்லாம் எந்த நாட்டோட சண்டைபோட்டானுக.. இவன் பொண்டிலை அவன் தூக்கியிட்டோட… அப்புறம் அவன் பொண்டில இவன் தூக்கியிட்டோட இதுக்குத்தானே அடிபட்டு செத்தானுக.. வேற என்னத்த செய்தானுக…” (அதுதானே இவனுகளுக்கு ஆள சொந்தமா ஒரு நாடில்லே..!)

இதற்கு இலங்கை வரலாற்றில் ஓர் நல்ல உதாரணம் இருக்கிறது.. சிங்கள அரசன் வாலகம்பாகு ஆட்சியை தமிழ் நாட்டில் இருந்து வந்த ஐந்து இளவரசர்கள் கைப்பற்றினார்கள்.
தன்னுடைய மனைவி சோமாதேவியை விட்டுவிட்டு வாலகம்பாகு தப்பியோடினான்..

அதுதான் தமிழ் மன்னர்களுக்கு அவன் வைத்த பொறி..
சில நாட்களில் ஐவரும் சிங்களத்து சின்னக்கிளியான சோமாதேவிக்கு அடிபட்டு, ஒருவரை ஒருவர் கொலை செய்து, கடைசியில் உயிர் தப்பிய ஒருவன் சோமாதேவியுடன் தமிழ்நாடு தப்பியோட, மறுபடியும் வலகம்பாகு ஆட்சியை பிடித்தான் என்கிறது மகாவம்சம்.. எம்.ஆர்.ராதா சொன்ன கதையும் இதுவும் அழகாக பொருந்தும்.

பின்னர் எம்.ஆர்.ராதா – எம்.ஜி.ஆர் சுடுபட்ட விவகாரத்தில் ” சுட்டான் – சுட்டேன் ” என்று எம்.ஆர்.ராதா ஒரு தடவை கூறினார்… முதலில் சுட்டது யார்..? இப்படியொரு கதை எம்.ஆர்.ராதாவின் தலைப்பில் கிடக்கிறது.

இப்போது குஸ்பு – கருணாநிதி இருவரையும் தொடர்புபடுத்தி இன்னொரு மணியம்மை கதை என்று குமுதம் ரிப்போட்டரில் எழுதப்பட்டதற்கு பின்னால் பலமான ஒரு கரம் இருக்கிறது என்கிறார் மு.கருணாநிதி.

பாம்பின் கால் பாம்பறிந்து செய்த வேலை இது என்பது அவருக்கு தெரியாத இரகசியமல்ல..

அ.தி.மு.க கொள்கை அடிப்படையில் தோன்றிய கட்சி இல்லை என்பதும் அது ஏன் தோன்றியது என்பதும் கலைஞருக்கே அதிகம் தெரியும்..

அன்று எல்லோருக்கும் புத்தி புகட்டிய பகுத்தறிவு பகலவனான ஈ.வெ.ரா பெரியார் மணியம்மையை மணம் முடித்தபோது, அண்ணா அங்கிருந்து வெளியேறினார்.. தம்பிகளுடன்.

எல்லாம் தெரிந்த பெரியார் மணியம்மை என்ற கூழ்ப்பானைக்குள் விழுந்துவிட்டார் என்று பேசினார்கள் திமுக தொண்டர்கள்.

பின் அதே அண்ணாவுக்கு ஒரு மணியம்மை வந்தார்… நடிகை பானுமதி.. அந்த மணியம்மை கதை வந்தபோது, ” பானுமதி படிதாண்டாத பத்தினியும் அல்ல நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல..” என்று கூறினார்… பொறுப்புள்ள ஒரு தலைவருக்குரிய பதிலா இது..?

இதுதான் பெரியாரும் அண்ணாவும் கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் காட்டிய வழி..

அதிமுகவில் ஜெயலலிதா எப்படி வந்தார்.. அவரும் இன்னொரு மணியம்மை போலவே வந்தார் என்று இதே திமுகதான் அன்று கேலி செய்தது..

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை பார்த்து மு.கருணாநிதி பேசிய ” தேவடியா..” பேச்சும், துரைமுருகன் துகிலுரிய போனதும் பழைய கதைகள்.


சரி அவ்வளவுதானா..

எம்.ஜி.ஆர் இறந்தபோது ” நான் உடன்கட்டை ஏற நினைத்தேன்..” என்று ஜெயலலிதா கூறியது எதைக்காட்டுகிறது… அதுவும் இன்னொரு மணியம்மை கதைதான்.
இப்போது குஸ்புவின் காலம்…

மு.க.ஸ்டாலினை வாரிசாக அறிவித்ததும் குஸ்பு அதை ஏன் பகிரங்கமாக எதிர்த்தார்..? கலைஞருக்கு அருகில் கறுப்புடை அணிந்த மணியம்மை போல ஏன் போஸ் கொடுத்தார்..?

ஜெயலலிதா பாணியில் அல்லது என்.டி.ராமராவின் சிவபார்வதியின் பாணியில் அவர் தி.மு.கவை கைப்பற்ற நினைக்கிறாரா..?

மணியம்மை பாணி முதல்வராவதற்கு குறுக்கு வழியா..?
உண்மை இல்லாவிட்டாலும் வரலாறு தெரிந்த கலைஞர் ஏன் இதை கூர்ந்து கவனிக்கவில்லை.. ஏன் குஸ்புவுடன் போஸ் கொடுத்தார்…

இப்படி காலகாலமாக தி.மு.க உள்ளிட்ட திராவிடக் கட்சிகளின் கதை காலம்தோறும் மணியம்மை கதைகளால் கறுப்படிக்கப்பட்டு வருகிறது.

இதையெல்லாம் நாம் ஏன் சிந்திக்க வேண்டும்…?

” திராவிடக் கட்சிகள் ஈழத் தமிழருக்கு விடிவுதரும் வீரியம் கொண்டவை..” என்று நினைக்கும் புலம் பெயர் தமிழர்கள் மணியம்மைக்கு மேல் திராவிடக் கட்சிகளின் வீரியம் இல்லை என்று புரிவதற்காக சிந்திக்க வேண்டியிருக்கிறது.

தி.மு.க என்றால் திரு. முத்துவேலர். கருணாநிதி என்பர் சிலர்..
தி.மு.க என்றால் திருத்த . முடியாத.. கட்சி என்பர் வேறு சிலர்..
பாவம் திமுக தொண்டர்கள் அவர்களுக்குத்தான் எத்தனை மணியம்மைகள்…

ஒரு பார்வை 16.02.2013

0 Responses to திராவிடர் கழகங்களும் மணியம்மைகளும் ஒரு வரலாற்றுப் பார்வை!

Post a Comment

Followers