Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறுவதற்கு சில வாரங்களே இருக்கும் நிலையில் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது சேனல் 4 தொலைக்காட்சி. இசைப்ரியா பாலியல் வன்கொடுமை செய்யபட்டு இறந்து கிடக்கும் படங்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. அந்த படங்களின் மூலம் இசைப்ரியா கடுமையாக தாக்கப்பட்டும், பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டும் கொல்லப்[பட்டிருந்தது தெள்ளத்தெளிவாகியிருந்தது. தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் இலங்கை இராணுவத்தினர் இசை ப்ரியாவை உயிருடன் கைது செய்து அழைத்துச் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும் அவர்கள் இசைப்ரியாவை சுட்டிக் காட்டி இவர் தான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள்(துவாரகா) என்று கூறும் காட்சியும், இசைப்ரியா நான் அவரது மகள் இல்லை என்று கூறும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.



0 Responses to இசை ப்ரியாவை உயிருடன் கைது! - புதிய காணொளி

Post a Comment

Followers