Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் எஸ்.வேழமாலிகிதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் பிரத்தியேக செயலாளர் பொன்னம்பலம் லட்சுமிகாந்தன் ஆகியோர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவகம் அலுவலகத்தில் ஆபாச இறுவட்டுக்களும், வெடிமருந்துகளும் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு 11 மாதங்களுக்கு முன்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

வேழமாலிகிதன் மற்றும் லட்சுமிகாந்தன் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்கான ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். ஆனாலும், அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு பொலிஸார் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தவறிய நிலையிலேயே அவர்கள் இருவரையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கிளிநொச்சி அறிவகம் அலுவகம் 11 மாதங்களுக்கு முன்னர் பயங்கரவாத தடுப்பு பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்படும் போது யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட இடங்களிலிருந்து அரச ஆதரவு ஊடகவியலாளர்கள் பொலிஸாரினால் அழைத்து செல்லப்பட்டதாகவும், அவர்களைக் கொண்டு படம் பிடித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பொய் பிரசாரம் முன்வைக்கப்பட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to த.தே.கூ கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்ட இருவர் நீதிமன்றத்தால் விடுதலை

Post a Comment

Followers