Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திராவிடர் விடுதலை  கட்சியை சேர்ந்த குளத்தூர் மணி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் எங்கும், இலங்கையில் நடக்க உள்ள காமன் வெல்த் மாநாட்டுக்கு பிரதமர் செல்லக் கூடது என்கிற கோரிக்கையை  வலியுறுத்தி போராட்டங்கள் வலுத்து வருகின்றன. கடந்த 30ம் திகதி சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சேலத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தின் முன்பு தீ வைக்கப் பட்டது.

இதற்கு காரணமானவர்களையும், இந்த குற்ற செயலை செய்யத்  தூண்டிய குளத்தூர்  மணியையும் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். தற்போது சேலம் மாவட்ட ஆணையர் உத்தரவின் பேரில், குளத்தூர் மணி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

சேலம் சிறையில் இருக்கும் மணியிடம் இந்த தகவல் இன்று தெரிவிக்கப் பட்டதாகவும் தெரிய வருகிறது. இதற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த அடக்குமுறையை எதிர்த்து ஒருமித்த கருத்துடன் போராடுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

0 Responses to குளத்தூர் மணி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: வைகோ கண்டனம்!

Post a Comment

Followers