தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த இசைப்பிரியா இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட பின்னரே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்கிற காணொளி ஆதாரம் வெளியாகியுள்ள நிலையில், அரசாங்கம் சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
அதைவிடுத்து, இராணுவத்தின் அறிக்கையை மட்டும் ஆதாரமாக முன்வைத்து பொறுப்பு கூறுதலில் இருந்து அரசாங்கம் நழுவிக்கொள்ள முடியாது. அதுபோல, இலங்கையின் இறுதி மோதல்களில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளமைக்கு இந்தியாவும் முக்கிய பாங்காளி. பல்லாயிரக்காணக்கான தமிழர்களை கொன்று குவித்ததில் இந்தியாவுக்கும் பங்குண்டு. இந்தியாவும் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற இறுதி மோதல்களின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதில் அரசாங்கம் கண்மூடித்தனமாகவே செயற்பட்டு வருகின்றது. இசைப்பிரியா மற்றும் தமிழ் மக்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு இருக்கும் அக்கறை இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை என்றார்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்ட எதையும் நடைமுறைப்படுத்தவில்லை. மக்களின் நலன்களை பற்றியோ மோதலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பாதுகாப்பு தொடர்பிலோ அரசாங்கம் அக்கறை கொண்டிருந்தால் வடக்கிலும்- கிழக்கிலும் வாழும் மக்களுக்கு நியாயமாக தீர்வு கிடைத்திருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

0 Responses to இசைப்பிரியா படுகொலை தொடர்பில் சுயாதீன விசாரணை அவசியம் : விக்கிரமபாகு கருணாரட்ண