Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தனிப்பட்ட காரணமாக இந்தியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் ஜி,ராமகிருஷ்ணனை சந்தித்தார். அப்போது மத்தியக்குழு உறுப்பினர்கள் அ.சவுந்திரராசன், பி.சம்பத், செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வசிங், க.கனகராஜ் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுக நயினார், ஆர்.கோவிந்தராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

அங்கு கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு பிந்தைய நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழ் மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைபாடுகள் குறித்தும் சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். 

0 Responses to சம்பந்தன் - தமிழக அரசியல் தலைவர்கள் சந்திப்பு

Post a Comment

Followers