Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கேரளாவில் ஷீலா தீட்சித் ஆளுநராகப் பதவி ஏற்றால் இனி பெண்கள் 7 மணிக்குள் வீடு திரும்பிவிட வேண்டும் என்று, கேரள நடிகை ஒருவர் தனது முகநூலில் பதிவிட்டு உள்ளது காங்கிரஸ் தரப்பில் பெரும் எதிர்ப்பைக் கிளப்பி உள்ளது.

டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் பதவி வகித்த காலத்தில், டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பெரும் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தது நாடறிந்த உண்மை. இதனால் ஷீலா தீட்சித் பதவி விலக வேண்டும் என்று அப்போது போராட்டங்களும் அரங்கேறின.

இந்நிலையில் இப்போது ஷீலா தீட்சித் கேரள ஆளுநராகப் பதவி ஏற்க உள்ளார். இதைக் கேலி செய்யும் வகையில் கேரள நடிகை ரீமா கல்லிங்கல் தனது முகநூலில் ஷீலா தீட்சித்தை கடுமையாக விமர்சிக்கும் படி, கேரளாவில் இனி பெண்கள் 7 மணிக்குள் வீடு திரும்பி விட வேண்டும் என்று பதிவிட்டு இருப்பது, கேரள காங்கிரஸார் இடையே எதிர்ப்பைக் கிளப்பி உள்ளது.

நடிகை உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கேரள காங்கிரஸார் வலியுறுத்தி வருகின்றனர்.

0 Responses to கேரளாவில் இனி பெண்கள் இரவு 7 மணிக்கு வீடு திரும்பிவிட வேண்டும் - கேரள நடிகை

Post a Comment

Followers