Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை இப்போது வறுமைக்கோட்டின் கீழுள்ள நாடல்ல. மத்திய தர வருமானம் கொண்ட நாடு என்று கூறியுள்ள கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன, இலங்கைக்கு கடன் வழங்கப்படுவதில்லை. மாறாக நிதியுதவிகளே வழங்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு அபிவிருத்திகளுக்காக குறைந்த வட்டியில் நீண்ட கால திருப்பிக்கொடுக்கும் விதத்தில் பல்வேறு சலுகைகள் மூலமே கடன் வழங்கப்பட்டது. சீனா இலங்கைக்கு வழங்கியது கடன் தான். ஆனால், அக்கடன் சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டதால் அதனை நிதியுதவி என்றே அழைக்க வேண்டும் என்று அவர் புதிய வரவிலக்கணமொன்றை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமது பூமியை நாம் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவில்லை. இலவசமாக வழங்குகின்றோம். அதில் முதலீடுகளை வெளிநாடுகள் மேற்கொள்கின்றன. அதன் மூலம் எமது நாட்டுக்கு வருமானம் கிடைப்பதோடு பொது மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களும் கிடைக்கின்றன.

வல்லரசான அமெரிக்காவே 7 ரில்லியன் டொலர் கடனாளி நாடாகும். அதனால், அந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டதா? அத்தோடு அமெரிக்கப் பிரஜையொருவர் ஒரு மணித்தியாலயத்திற்கு 38 டொலர் கடனாளியாக ஆக்கப்பட்டுள்ளார்.

அது மட்டுமல்ல, அமெரிக்காவிலுள்ள வங்கிகளின் பங்குகளை சீனாவே கொள்வனவு செய்கின்றது. 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பொருளாதாரத்தை மிஞ்சும் சீனாவுடன் நாம் நட்புறவு வைத்திருப்பதென்பது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ராஜதந்திர கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும்” என்றுள்ளார்.

0 Responses to இலங்கை வறுமைக்கோட்டின் கீழுள்ள நாடல்ல; சீனாவிடம் பெற்றது நிதியுதவியே: பந்துல குணவர்த்தன

Post a Comment

Followers