Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிறக்க இருக்கும் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுத்து சரித்திரம் வாய்ந்த ஆண்டாக அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளதாவது, “2016 ஆம் ஆண்டிலே அரசியல் தீர்வு கிடைக்கும். அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதியதொரு அரசியல் சட்டப் பொறிமுறையினை முன்வைக்க இருக்கின்றார். அதில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, புதிய தேர்தல் சட்டம் திருத்தம் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு என்பன அடங்குகின்றன. குறித்த அரசியல் சட்டப் பொறிமுறையில், தெட்டதெளிவாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என கூறப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to 2016 தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுத் தரும்: சுமந்திரன்

Post a Comment

Followers