Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களின் ஆணையைப் பெற முடியாதவர்கள், மக்களிடையே குழப்பங்களை ஏற்டுத்த முனைகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேர்தலில் மக்கள் ஆதரவை பெற முடியாதவர்கள் பின்கதவு வழியாக ‘மக்களால் நிராகரிக்கப்பட்ட தீர்வு திட்டங்களை’ இப்படியான ஒரு (தமிழ் மக்கள்) பேரவை மூலமாக கொண்டுவர முனைவது ஜனநாயக விரோத செயலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக ஒரு நிலையான அரசியல் நிலைப்பாட்டை முன்வைத்து மக்கள் ஆணையைப் பெற்றுள்ளது.

கடந்த ஐந்து ஆறு வருடங்களாக நாம் (த.தே.கூ) மக்கள் ஆணையைப் பெற்றுள்ளளோம். அதற்கு மாற்றமான வித்தியாசமாக முன்வைக்கப்பட்ட தீர்வுகளை மக்கள் நிராகரித்திருக்கின்றார்கள். அவ்வாறு முன் வைத்தவர்களையும் மக்கள் நிராகரித்திருக்கின்றார்கள். ஆகவே, எந்த ஒரு அமைப்பு உருவானாலும் அது குறித்து மக்கள் அச்சம் அடைய தேவையில்லை.

மக்களிடம் ஆணை பெற வேண்டும். தீர்வு திட்டங்களை மக்களின் முன் வைக்க வேண்டும். கடந்த தேர்தலில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்திற்கு தான் மக்கள் ஆணை வழங்கி இருக்கின்றார்கள்.

ஆனால், அந்த தேர்தலின் போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு வழங்கவில்லை. அவர் குறைந்தளவு மக்கள் மனதில் குழப்பமான சிந்தனையையே கொண்டு சென்றார். என்றாலும் மக்கள் சிந்தித்து நிதானமாக எமக்கு வாக்களித்திருக்கின்றார்கள்.” என்றுள்ளார்.

1 Response to தமிழ் மக்களின் ஆணையைப் பெறாதவர்கள் குழப்பங்களை ஏற்படுத்த முனைகின்றனர்: சுமந்திரன்

  1. முதல்ல இவன் சுமந்திரனை ௧ட்சியில் இ௫ந்துதூ௧்௧ணும்

    ௧ிறிஸலோஸ், கு௫ந௧ா்,யாழ்ப்பாணம்

     

Post a Comment

Followers