Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லெண்ணத்தை நோக்கி சிங்கள மக்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி எடுத்து வைத்து, அவர்களுடன் கைகோர்ப்பார்கள் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நயினாதீவு நாகவிகாரையில் நேற்று வெள்ளிக்கிழமை வழிபாடுகளை மேற்கொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர், அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளதாவது, "தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடியமை எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு சிறிய விடயம் நடை பெற்றமை தமிழ் சிங்கள மக்களிடையே சகோதரத்துவத்தை ஏற்றுக் கொள்ளும் மன நிலை ஏற்பட்டு இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது.

இந்த மாற்றம் குறித்து எனது மகிழ்வை தெரிவிக்கவும், நாகவிகாரையின் பிரதமகுருவை சந்திக்கவும் வந்திருக்கிறேன். இந்த நேரத்தில் ஒரு விடயத்தை நான் கூற விரும்புகிறேன். சிங்கள மக்கள், தரப்பினர், நல்லெண்ணம் குறித்து ஒரு அடி எடுத்து வைத்தால், தமிழ் மக்கள் 10 அடி எடுத்து வைத்து அவர்களுடன் முன்நிற்பார்கள்.” என்றுள்ளார்.

1 Response to சிங்கள மக்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி எடுத்து வைப்பார்கள்: சி.வி.விக்னேஸ்வரன்

  1. நான் 16 வயதில் கூறியதை சீ. வி. தற்போது கூறுகிறார்

     

Post a Comment

Followers