Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியக் கலாநிதி சி.சிவமோகன், இலங்கைத் தமிழரசுக் கட்சியில் நேற்று வெள்ளிக்கிழமை இணைந்து கொண்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சி.சிவமோகன், ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் சார்பிலேயே வேட்பாளர் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தார். அதனையடுத்து, அவர் அந்தக் கட்சியின் மத்திய குழுவிலும் இணைந்திருந்தார்.

இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா முன்னிலையில், சி.சிவமோகன் தமிழரசுக் கட்சியில் இணைந்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தொடர்ச்சியாக முரண்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் பாராளுமன்ற உறுப்பினர், தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டமை முக்கியத்துடன் நோக்கப்படுகின்றது.

0 Responses to ஈ.பி.ஆர்.எல்.எப். பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தமிழரசுக் கட்சியில் இணைந்தார்!

Post a Comment

Followers