ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிப்பதற்கு புதிய கட்சியொன்று அவசியம் என்று குறிப்பிட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷ அரசியலுக்கு வந்தால் அதனை வரவேற்பேன் என்று தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றிடம் பஷில் ராஜபக்ஷ கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிப்பதற்கும், சிறந்த எதிர்க்கட்சி ஒன்றை ஏற்படுத்துவதற்கும் புதிய கட்சியொன்று தேவை. கோத்தபாய ராஜபக்ஷ அரசியலுக்குள் பிரவேசிப்பாரென்றால் அது வரவேற்கத்தக்க விடயம். அதற்குத் நான் ஆதரவு வழங்குவேன். அமைக்கப்படவிருக்கும் புதிய கட்சிக்கு அவர் தலைவரானால் அதுவும் வரவேற்கத்தக்க விடயம். அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களின் ஏகோபித்த தலைவர். பாராளுமன்றத்திலும் அவரே சிறந்தவர்.” என்றுள்ளார்.

0 Responses to ஐ.தே.க.வை தோற்கடிக்க புதிய கட்சி அவசியம்; கோத்தபாய ராஜபக்ஷ அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்: பஷில் ராஜபக்ஷ