இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத் தேர்தல் திகதி அறிவிப்பு வெளியாகும் என்று, தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையம் தமிழகம், புதுவை உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் திகதிகளை இறுதி செய்துள்ளதாகவும், இந்த அறிவிப்பை வெளியிட மாநிலங்களுக்கு ஓரிரு நாட்களாகலாம் என்றும் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் வாக்காளர்கள் பட்டியலில் போலியான பெயர்களை நீக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு எந்தவித நலத் திட்டங்களையும் அறிவிக்கக் கூடாது என்றும், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்துக்குள், கடைசியாக தமிழக அரசு வெளியிட்ட நலத் திட்டங்களை நகல் எடுத்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று லக்கானி மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத் தேர்தல் திகதி அறிவிப்பு!