Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரியாவின் பல்மைரா நகருக்கு அண்மையில் ISI போராளிகளால் ரஷ்யாவின் Mi-25 ரக இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப் பட்டது.

இதில் அந்த ஹெலிகாப்டரில் பயணித்த இரு பைலட்டுக்களுமே பலியாகி உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த இராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப் பட்ட பல்மைரா பகுதி இன்னமும் ISIS வசமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஷ்ய ஹெலிகாப்டரை தரையில் இருந்து ISIL போராளிகள் சுட்டு வீழ்த்தியதாகவும் இதில் இரு பைலட்டுக்களுமே பலியாகி விட்டதாகவும் சிரிய இராணுவமும் உறுதி செய்துள்ளது. சிரியாவிலும் ஈராக்கிலும் ISIS இற்கு எதிரான போரில் ஏனைய மேற்குலக நாடுகளுடன் இணைந்து போராடி வரும் ரஷ்யா சிரிய அதிபர் பஷார் அல் அசாத் இற்கு ஆதரவாகவும் இயங்கி வருகின்றது.

ISIS இற்கு எதிரான போரில் ரஷ்யா இதுவரை தனது 12 வீரர்களை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சிரியாவில் சுட்டு வீழ்த்தப் பட்ட ரஷ்ய ஹெலிகாப்டர்!:இரு பைலட்டுக்களும் பலி

Post a Comment

Followers