Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக வவுனியாவைச் சேர்ந்த செ.மயூரன் நேற்று சனிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த போனஸ் ஆசனங்களில் ஒன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் சுழற்சி முறையில் பகிரப்பட்டது.

சுழற்சி முறை ஆசனத்துக்கான உறுப்பினராக இதுவரை பதவி வகித்து வந்த எம்.பி.நடராசா, கடந்த மாதம் முதலாம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில், அந்த இடத்துக்கு செ.மயூரன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், ரெலோ அமைப்பின் உறுப்பினரான இவர், கட்சியின் தலைவரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் முன்னிலையில் வவுனியா அலுவலகத்தில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

0 Responses to வடக்கு மாகாண சபை உறுப்பினராக செ.மயூரன் சத்தியப்பிரமாணம்!

Post a Comment

Followers