Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்துள்ள செப்டம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று, அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.

நாளை மறுநாள் விவசாய கூட்டமைப்பு சங்கங்கள், வணிகர்கள் சங்க கூட்டமைப்பு சங்கங்கள் இணைந்து முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.இந்த போராட்டத்தின் போது, கர்நாடகாவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் காவிரி நீரைத் திறந்து விடாமல் தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனம் தெரிவிக்கப்படும் என்றும் தெரிய வருகிறது. இதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், திமுகவும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். 

திமுக உடன்பிறப்புக்கள் இந்த முழு அடைப்புப் போராட்டடத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

0 Responses to விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்துள்ள செப்டம்பர் 16 முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுக ஆதரவு!

Post a Comment

Followers