Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இம்மாத இறுதிக்குள் பொதுமக்களின் 700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் வடக்கில் காங்கேசன்துறை வடக்கு, கிழக்கு மற்றும் தையிட்டி கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீள்குடியேற்ற அமைச்சினால் வலிகாமம் வடக்கு மக்களின் காணிகள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக, தெல்லிப்பளை பிரதேச செயலாளரினால் வலிகாமம் வடக்குப் பகுதியில் காணிகள் கையளிப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்பிரகாரம், ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக வலிகாமம் வடக்கில் குறித்த பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாகவும், இவ்வாறு படிப்படியாக வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகள் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மீள்குடியேற்ற அமைச்சு மேற்கொண்டு வருகின்றதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to வலிகாமம் வடக்கில் இம்மாத இறுதிக்குள் 700 ஏக்கர் காணிகள் விடுவிப்பு: என்.வேதநாயகன்

Post a Comment

Followers