Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எந்த விவசாயி உடனாவது மோடி செல்ஃபி எடுத்துக்கொண்டது உண்டா என்று, ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மகா யாத்திரை மேற்கொண்டு உள்ளார். அங்குள்ள கிராமம் ஒன்றில், விவசாயிகளை சந்தித்து உரை  நிகழ்த்தினார். அப்போது தொழில் அதிபர்களை காப்பாற்றவே மோடி முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.விவசாயிகளின் நலன்கள், கடன்கள் தள்ளுபடி செய்வதுக் குறித்தெல்லாம் அவருக்கு சிறிதும் கவலையில்லை, பொறுப்பில்லை என்று குற்றம் சாட்டியுள்ள ராகுல், விவசாயிகளை மோடி என்றாவது சந்தித்து குறைகளைக் கேட்டதுண்டா என்று கேட்டார்.

 பின்னர் எந்த விவசாயி உடனாவது அவர் செல்ஃபி எடுத்துக்கொண்டது உண்டா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.உத்திர பிரதேசத்தில் யானை படுத்துவிட்டது என்று பகுஜன் சமாஜ் கட்சியையும், சைக்கிள்  டயர் பங்க்சர் ஆகிவிட்டது என்று சமாஜ்வாதிக் கட்சியையும் கேலி செய்த அவர், கைச்சின்னம் மட்டுமே வலுவடைந்து உள்ளது என்றும் பேசினார்.

0 Responses to எந்த விவசாயி உடனாவது மோடி செல்ஃபி எடுத்துக்கொண்டது உண்டா?:ராகுல் காந்தி

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.