Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் பிறந்த நாளான இன்று உயிருடன் இருந்திருந்தால், அவருக்கு வயது 25.

‘எதற்கும் அதிர்ந்த பேசாதவர், எல்லோரையும் அரவணைத்துப் போகும் குணம் உடையவர்’ என்று சுவாதிக்குச் சான்றிதழ் வழங்குகிறார்கள் அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்.

கடந்த ஜூன் 24-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபரால் வெட்டிச் சாய்க்கப்பட்டார் சுவாதி.

இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தில் அவர் வேலை பார்த்தவர் என்பது கூடுதல் தகவல்.

சுவாதியின் கொலைச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பெண்களின் பாதுகாப்புத் தொடர்பாக நிறைய விவாதிக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பாக ராம்குமார் என்பவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

ராம்குமார் நிரபராதி என்று ஒரு தரப்பு இன்றளவும் கூறி வருகிறது. பல அரசியல் கட்சிகள் அதன்பின் இந்த விவகாரத்தில் தலையிட்டன. கொலைக்கு சாதியப் பின்னணி இருக்கலாம் எனப் பேசப்பட்டது.

இதில் எதிர்பாராதவிதமாக, அண்மையில் கைதுசெய்யப்பட்ட ராம்குமாரும் புழல் சிறையில் கரன்ட் கம்பியைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாரால் கூறப்பட்டது.

சுவாதியை யார் கொலை செய்தார்கள் என்கிற கேள்வி மறைந்து, அவரை கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்பட்டவரின் மர்ம மரணம் தான் இப்போது விவாதிக்கப்படுகிறது.

சுவாதிக்கான பதில் இன்னும் கிடைக்காத நிலையில், அவருடைய பிறந்த நாளில் நித்யா என்பவர், சுவாதிக்காக எழுதிய கடிதமொன்று வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.‘

ஓர் ஊரில் எப்போதுமே தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் பெண் ஒருத்தி இருந்தாள்.

அவளுடைய நண்பர்கள், ஒருநாள் அவளுக்கு குட்டித் தங்கை ஒருத்தி பிறக்க இருப்பதாகக் கூறினார்கள்.

தங்கை நல்லபடியாகப் பிறக்க வேண்டும் என்று அவளும் கடவுளிடம் தினமும் வேண்டிக்கொண்டாள்.

தங்கையும் பிறந்தாள். தங்கையும் அவளும் எலியும் பூனையும் போலத்தான் எப்போதும் எதற்காகவும் சண்டையிட்டுக் கொள்வார்கள்.

ஆனால், ஒருவர் மீது ஒருவர் வைத்த பாசத்துக்கும் அன்புக்கும் அளவே இல்லை. அடித்துப்பிடித்து சண்டை போட்டாலும் வெளியே ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்ததில்லை. அந்தக் குடும்பம் அழகாகச் செழித்தது.

இந்த நிலையில்தான், ஒருநாள் நுங்கம்பாக்கத்திலிருந்து அவளது தங்கை தாக்கப்பட்டாள் என்கிற தகவல் வந்தது.

கடவுளே! அது என் தங்கையாக இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டே சென்றாள் இவள். ஆனால் வேண்டியது பலனளிக்கவில்லை. பிஞ்சுத் தங்கை இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இழப்பை மறந்து மீண்டுவர அந்தக் குடும்பம் எவ்வளவோ முயற்சித்தது. ஆனால், விதி வேறாக இருந்தது.

செயற்பாட்டாளர்கள் எனப்பட்டவர்களும், கட்சி ஆட்களும், முகம், பெயர் தெரியாதவர்களும் கூட அவளைப் பற்றியும் அவளது குடும்பத்தைப் பற்றியும் தவறாகவும், இழிவாகவும் சித்தரிக்கத் தொடங்கினார்கள்.

ஆனால், உண்மை என்றாவது நிச்சயம் வெளிவரும் என்கிற நம்பிக்கையுடன் அவர்கள் மௌனமாக இருந்தார்கள்.

உண்மை ஒரு புறம் இருக்கட்டும், காலத்திடம் எப்போதுமே அனைத்துக்குமான பதில் இருக்கிறது.

ஆனால், சுவாதி எப்படியாவது மீண்டும் எங்களிடம் ஏதோ ஒருவிதத்தில் திரும்பி வா.

பிறந்தநாள் வாழ்த்துகள் உனக்கு! என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

0 Responses to பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவாதி! உண்மை ஒருநாள் வெளிவரும்! அக்கா உருக்கமான கடிதம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.