Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா எழுச்சி மிகு இந்தியாவாக மாறி வருகிறது என்று, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் எல்லைக்குள் ஊடுருவி இந்திய ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளின் முகாமை அழித்துள்ளனர். அதோடு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாராட்டு குவிந்து வரும் நிலையில், மோடி தலைமையிலான ஆட்சியில், இந்திய மக்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்று அமித் ஷா கூறியுள்ளார். 

மேலும், இந்திய ராணுவ வீரர்களின், எழுச்சி,, தேசப்பற்று, துணிச்சல் இவைகள் தற்போதையத் தாக்குதலில் வெளிப்பட்டு உள்ளன என்று கூறியுள்ள அவர், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கும் பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளார். இதுவரை 20க்கும் மேற்பட்ட ஊடுருவல்கள் முறியடிக்கப்பட்டு உள்ளன என்றும், 117 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

மோடி தலைமையிலான இந்தியா எழுச்சி மிகு இந்தியாவாக மாறி வருகிறது என்றும் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

0 Responses to மோடி தலைமையில் இந்தியா எழுச்சி மிகு இந்தியாவாக மாறி வருகிறது: அமித் ஷா

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.