Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இவ்வருடம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் இரு முக்கிய வேட்பாளர்களாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிங்டனும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்பும் போட்டியிட்டு வரும் நிலையில் வெள்ளை மாளிகையில் அதிபராகத் தேர்வாவதற்கு முற்றிலும் தகுதியானவர் ஹிலாரி கிளிங்டன் என இன்று ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை அவருக்கு ஆதரவளித்து செய்தி வெளியிட்டுள்ளது.

நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் ஹிலாரி கிளிங்டனின் அறிவாற்றல், பொது மக்கள் சேவைப் பதிவுகள், மற்றும் ஏனைய வல்லமைகள் அவரையே வெள்ளை மாளிகைக்கு தேர்வாவதற்கு முற்றிலும் தகுதியானவர் என்று  கூறப்பட்டுள்ளது. மேலும் நியூயோர்க் டைம்ஸின் செய்தியில் நவீன அமெரிக்க வரலாற்றில் முக்கிய கட்சியான குடியரசுக் கட்சி சார்பாக மிக மோசமான வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் முதன் முறையாக நியமிக்கப் பட்டுள்ளார் என்றும் சாடப் பட்டுள்ளது.

ஆயினும் அமெரிக்கர்கள் கிளிங்டனுக்கு மிக இலகுவாக வாக்களிக்க போவதில்லை என்றும் ஏனெனில் எதிராளி  டிரம்ப் என்றும் கூட நியூயோர்க் டைம்ஸ் வாதிட்டுள்ளது.  மேலும் அமெரிக்கா உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கக் கூடிய வல்லமை கிளிங்டனிடம் அதிகளவில் உள்ளது என்று  நியூயோர்க் டைம்ஸ் சுட்டிக் காட்டியுள்ளது. நவம்பரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிங்டன் ஆகிய இருவரும் தமது முதல் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபட இரு நாட்களுக்கு முதலில் நியூயோர்க் டைம்ஸ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய உலகம் யுத்தம், தீவிரவாதம், தவறாக வழிநடத்தப் படும் பூர்வீக குழுக்கள், உலகமயமாக்கலின் அழுத்தம் மற்றும் ஏனைய பிரச்சனைகளால் சிக்கித் தவித்து வருவதாகவும்  டைம்ஸில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க நடுத்தர வர்க்க மக்கள் தமது பொருளாதார மந்த நிலை, யுத்தம்  மற்றும் வெளிநாட்டு போட்டி, தொழிநுட்ப மாற்றங்கள் தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்துடன் மிகுந்த ஆத்திரத்தில் உள்ளதாகவும் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஹிலாரி கிளிங்டன் தொடர்ந்து  40 வருடங்களாக அமெரிக்காவில் பொதுமக்கள் சேவை ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்க அதிபராக ஹிலாரி கிளிங்டன் பதவியேற்க முற்றிலும் தகுதியானவர்! : நியூயோர்க் டைம்ஸ்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.