Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் ஜனநாயக அபிவிருத்தி மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவி வழங்கும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அதுல் கெஷாப் தெரிவித்துள்ளார்.

“கடந்த 60 வருடங்களாக நாங்கள் செயற்பட்டுள்ளது போன்று இலங்கை மக்களின் எதிர்காலத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவோம். இன்று வரை அமெரிக்க அரசாங்கம் 2 பில்லியன் டொலர்கள் வரை பல அபிவிருத்தி திட்டங்களிற்கு வழங்கியுள்ளது. விவசாயம், கல்வி, சுகாதாரம், வர்த்தகம், நல்லாட்சி மனிதாபிமான உதவி ஆகிய பல துறைகளில் இவற்றை வழங்கியுள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச- தனியார் ஒத்துழைப்பு தொடர்பாக ஆராயும் தேசிய மாநாடு அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமானது. அங்கு பேசும் போதே அதுல் கெஷாப் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அரசாங்க செயற்பாடுகளை வெளிப்படையானதாகவும் பொறுப்புக்கூறும் தன்மை மிக்கதாகவும் மாற்றுவதற்கு உதவக்கூடிய தேசிய இலத்திரனியல் அரசாங்க அமைப்பை கொள்வனவு செய்வதற்கு அரச- தனியார் ஒத்துழைப்பை பயன்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கையின் ஜனநாயக அபிவிருத்திக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவி வழங்கும்: அதுல் கெஷாப்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...